வியாழன், 30 ஏப்ரல், 2009

ஓட்டை



ஊற்றப்படுவது நின்றதும்
வடிந்து வெற்றிடமாகிறது
மிச்சமாய் ஈரம்
சில கணங்கள்
ஒப்புக்கொள்கிறேன் குறையை
ஓட்டையை அடைக்காது
புலம்புவதில் அர்த்தமில்லை
துளையெங்கேயெனத் தெரியவில்லை
அடைக்கவும் விருப்பில்லையோ
தேங்கியிருப்பதை விடவும்
வந்து கடந்து போகட்டுமே நீர்
என இருக்கிறேனோ
நீரின்றி போனாலும்
நிரப்புவதற்கு என்றென்றைக்குமாய்
வெறுமை இருக்கிறதென்கிற
திமிரோ.

10 கருத்துகள்:

Venkatesh Kumaravel சொன்னது…

'திமிரோ'-வுக்கு ஒரு வரியா?

யாத்ரா சொன்னது…

திமிருக்கு திமிர் நிரம்பக் கூடுதல் என்பதால் தனி வரி வேண்டுமெனத் தானே தேர்ந்து கொண்டது.

புரிந்ததா, போதுமா விளக்கம் வெங்கி ராஜா.

மாதவராஜ் சொன்னது…

வெறுமையாலும் நிரப்ப முடியுமோ?
அதிர்ச்சியான வரிகள் தம்பி...
இழப்பதற்கு வெறுமை இருக்கும்போது
எதை இங்கு பெற முடியும்?

ஆ.சுதா சொன்னது…

கூர்ந்து பார்த்தால் நாம் எல்லோருமே பல சமயம் எல்லாவற்றையும் தவிர்த்துக் கொண்டு வெறுமை நிப்பிக் கொண்டுதான் இருப்போம், அது நம்மோடு திமிராகவே இருக்கலாம்.

கவிதை பலமானது.

மண்குதிரை சொன்னது…

"நீரின்றி போனாலும்
நிரப்புவதற்கு என்றென்றைக்குமாய்
வெறுமை இருக்கிறது"


இந்த வரிகளை உணர்கிறேன் யாத்ரா

பெயரில்லா சொன்னது…

நல்லா இருக்கு யாத்ரா.

சில சமயம் அப்படித்தான் வெறுமை நம்மை சுழற்றியடிக்கிறது.

TKB காந்தி சொன்னது…

நல்லா இருக்குங்க யாத்ரா :)

நந்தாகுமாரன் சொன்னது…

என்ன தான் தத்துவ விசாரப் பிரச்சாரத்தைக் கூட பிரம்மாதமாகச் சொன்னாலும் this poem is shallow

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

இந்தக் கவிதையை முதலிலேயே வாசித்திருந்தாலும், என்ன சொல்வதென்று தெரியவில்லை. இன்று இப்பக்கத்திற்கு வந்தபோது நந்தா சொல்லியதுதான் சரியெனத் தோன்றுகிறது.

யாத்ரா சொன்னது…

வெங்கி ராஜா, மாதவராஜ், முத்து, மண்குதிரை, வடகரை வேலன், காந்தி, நந்தா, சுந்தர் அனைவருக்கும் நன்றி.