சனி, 11 ஏப்ரல், 2009

புகைப்படக் கவிதை
எதிர்முனையில்

எவருமில்லையென்பதறியாது

அந்த ஒற்றைச் செருப்பு

அலைபேசியின் காதில்

தன் எஜமானன் கேளாத

மெல்லிய குரலில்

புலம்பியபடியிருக்கிறது

காலமெலாம்

நடந்து நடந்து

தேய்ந்த கதையை

(அகநாழிகை அவர்களின் வலைப்பக்கத்தில்,அவர் சமீபமாய் நடந்த பதிவர் சந்திப்பில் எடுத்து வெளியிட்டிருந்த புகைப்படங்களில் ஒன்று இது, எனக்கு இந்தப் புகைப்படம் மிகவும் பிடித்திருந்தது, பலரும் இதற்கு பொருத்தமாக ஏதாவது எழுதினால் நன்றாயிருக்குமென குறிப்பிட்டிருந்தார்கள் பின்னூட்டத்தில். இநத புகைப்படத்திற்குள் இன்னும் நிறைய ஒளிந்திருக்கிறது, அதில் சிறுதுளி இது,) அகநாழிகை அவர்களின் புகைப்படத்திற்கு மிக்க நன்றி.

16 கருத்துகள்:

yathra சொன்னது…

அந்தச் செருப்பின் பின்னூட்டம் இது

தயவு செய்து இந்த
புகைப்படத்தையும்
கவிதையையும்
அழித்துவிடுங்கள்
என் எஜமானர்
பார்ககவோ வாசிக்கவோ
நேர்கையில்
சங்கடப்படுவார்.

ஆ.முத்துராமலிங்கம் சொன்னது…

அங்கேயும் படித்திருந்தேன்.
கற்பனை நல்லா இருக்கு.

சேரல் சொன்னது…

நல்ல சிந்தனை. ரசித்தேன்.

-ப்ரியமுடன்
சேரல்

ஆ.ஞானசேகரன் சொன்னது…

ரகிக்கும்படி உள்ளது

மாதவராஜ் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மாதவராஜ் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மாதவராஜ் சொன்னது…

தம்பி!
செருப்புகள்தான் சமீபத்திய போராளிகளாய் இருக்கின்றன. நேற்றுகூட ஒரு காங்கிரஸ் எம்.பி ஓட்டு கேட்கச் சென்றபோது மரியாதை செலுத்தியிருக்கின்றன.

உங்கள் கவிதை இந்த யதார்த்தத்தையும் கற்பனையில் சேர்த்திருக்கலாமே!

yathra சொன்னது…

முத்து, சேரல், ஞானசேகரன் நன்றி

மாதவராஜ் சார்,
ஆமாம் சார், எழுதியிருக்கலாம்,
நான்கு பதிவுகளுக்கு முன்னால் பதிவிட்ட ஏழாம் உலகம் கவிதையை வாசித்தீர்களா

ச.முத்துவேல் சொன்னது…

நல்லாயிருக்கு யாத்ரா. ரசித்துப் படித்தேன்.செருப்பு ஒரு குறியீடாக பயன்பட்டு நல்ல கவிதையாக வந்திருக்கிறது.செருப்பின் பின்னூட்டமும் அதையே வலியுறுத்துகிறது.( நான் புகைப்படம் எடுக்கும்போது, பக்கத்திலயே இருந்தேன். ஆனா, எனக்கு வரலையே இப்படியெல்லாம்!) :)

எம்.ரிஷான் ஷெரீப் சொன்னது…

நல்ல கவிதை யாத்ரா !

யாழினி சொன்னது…

ம் வித்தியாசமா இருக்கே கவிதை!

ஆதவா சொன்னது…

இந்த புகைப்பட கவிதை எப்படி எழுதப்போகிறார்கள் என்று ஒருவித அச்சம் மேவியிருந்தது. நீங்கள் கச்சிதமாக முடித்துவிட்டீர்கள்.

வாழ்த்துகள்

yathra சொன்னது…

முத்து, சேரல், ஞானசேகரன், மாதவராஜ், முத்துவேல், ரிஷான், யாழினி, ஆதவா நன்றிங்க அனைவருக்கும்.

முத்துவேல் அந்த புகைப்படங்களில் நீங்கள் இருக்கிறீர்களா

அனுஜன்யா சொன்னது…

யாத்ரா,

நல்லா இருக்கு. எனக்குத் தோன்றியது (light hearted)

Lay-off

அலைகளுடன் பேசுவதற்கு
அலைபேசி வேண்டாமாம்
கடலுக்குள் நடந்து செல்ல
காலணிகளும் வேண்டாமாம்

அனுஜன்யா

yathra சொன்னது…

நன்றிங்க அனுஜன்யா, நீங்க எழுதியது இன்னும் நல்லா இருக்கு, ஒரு துறந்த மனோநிலை, இயற்கையுடனான ஒரு ஒன்றுதல் தரிசனமாகியது.

ச.முத்துவேல் சொன்னது…

@அனுஜன்யா
கவிதை ரியலி சூப்பர்.(உக்காந்து யோசிப்பாய்ங்களோ?) :)