வியாழன், 9 ஏப்ரல், 2009
என். டி. ராஜ்குமார் கவிதைகள்
லேட்டி பொன்னுமக்கா
முன்வாசல் வழியா போகக்கூடாதுட்டீ...
அயித்தம் பாப்பாங்க
நம்ம பொழப்பே பொறவாசல் பொறப்புட்டீ.
ஏமாத்திம்மா..... அடியேன் வந்திருக்கேன்
கும்பிகாந்துகு ஏதெங்கிலும் தரக்கூடாதா
கஞ்சி வெள்ளமும் ஒரு துண்டு கருப்பட்டியும்
கிட்டியாலே போதும்
மனசுவெச்சு ஏமாத்தியம்மா எச்சிச் சோத்துல வெள்ளம் ஊத்தி
கொண்டு தட்டுவா
விரிச்ச முந்தியில தண்டிணியெல்லாம் ஒழுகிவிழ
கிட்டிய சோத்த அரிச்சுத் தின்போம்.
சட்டிப்பான கழுவணுமெங்கிலும்
எல்லாத்துக்கும் வாற வழியதுதான்
ஏமான் வீட்டிலயிருந்தாரெங்கி
ஏமாத்தியோ பெண்டுபிள்ளையோ
சத்தமிட்டு சிரிக்கப்பிடாது.
ஏமான தொடப்பிடாது
தண்ணிகொண்டு கொடுக்கணுமெங்கிகூட
கொடுத்துட்டு ஓடிப்போய் சொவரு பக்கம் மறஞ்சி நிக்கணும்
அன்யோன்யமா நெருங்கி நின்னு பேசக்கூட வரப்பிடாது
எப்படி இந்த ஏமாத்திமாரெல்லாம் ஏமாம்மார
கெட்டி ஆளுதோன்னு தோணும்.
செலச் சமயம் காட்டுக்கு ஆனமேய்க்க போறயேமான்
வெளுப்பிலபோய் அந்தியில வரும்
இத அறிஞ்சி வச்சிகிட்டுதான்
ஏமாத்திக ஆசைய தீத்துவைக்க
ஆரங்கிலும் வருவானுக.
நம்ம பௌப்பு
பிச்சயெடுத்திட்டு கண்டும் காணாம போறது
நமக்கு அறியாதுண்ணு ஏமாத்தி நெனப்பா.
நம்மளும் உரியாடாத போய்கிட்டு
நாலஞ்சி தெவசம் கழிச்சி பிச்சயெடுக்க வாறப்ப
ஏமாத்திய பாத்து மொகக்குறி சொல்லுறது
அம்மையிட மொகத்துல ஒரு கலக்கம் தெரியுதல்லோ
மனசின்ற அகத்து ஒரு வல்லாத்த சலனம் ஒண்டல்லோ
ஏமான் அறியாத அம்மைக்கும் வேறொருத்தனுக்கும் ஒரு
தொடர்பு ஒண்டல்லோ
பாவமல்லா எந்நாலுமிதொரு பாவமாணு
தொஸமில்லா எந்நாலுமிதொரு தொஸமாணு
அம்மைக்கு பகவதி தொணையொண்டு
கொளவி குறி சொல்லி முடிக்க
ஆருட்டையும் இதப்பத்தி மிண்டப்பிடாது
என்று சொல்லிவிட்டு
சூடுசோறும் கறியும் கொடுத்து
புதுத்துணியும் கொடுத்தனுப்புவா ஏமாத்தி
இப்படியே ஆறும் இருவர் பசியும்.
தம்பிய பெத்தெடுத்த பச்ச ஒடம்போடு கெடக்க
வயிறு நெறய கள்ளும் மோந்திக்கிட்டு
வாய் நெறய விளித்துக்கொண்டே
நல்லமொளகு, கொடமஞ்ச, நால்பா மரப்பட்ட.
ராமச்சம்வேரு,
ஒணங்கிபோன காட்டு நெல்லிக்காயிட்டு
கொதிக்க வைத்த வென்னீரில் துணியை முக்கி
அடிவயிற்றில் ஒத்தடமிட்டுக் கொடுத்துவிட்டு
ஒடக்கு எடுக்கும் அப்பா
அம்மாவின் கூந்தலுக்கு
( எழுத்தாளர் ரவிக்குமார் அவர்கள் தொகுத்த ராஜ்குமார் அவர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகள் தொகுப்பு ( கல் விளக்குகள் ). காலச்சுவடு பதிப்பக வெளியீடு.)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
5 கருத்துகள்:
யாத்ரா நீங்கள் குறிப்பிட்ட ஏமான் ஏமாத்தி கவிதையை நானும் என் டி ராஜ்குமாரைப் பற்றிய பத்தியில் என்னுடைய வலையில் குறிப்பிட்டிருந்தேன். ஒற்றுமை.
அவருடைய அம்மா கவிதை வாசித்திருக்கிறேர்களா?
எனக்கு மிகவும் பிடித்த கவிதை என்னுடைய ப்ளாக்கில் இட்டிருக்கிறேன்.
அவருடைய கவிதைகள், சாராயம், காட்டு தெய்வங்கள், சுருட்டு, மாந்திரீகம் என்று ஒரு வித புது அனுபவமாக இருக்கும்.
என்னை மிகவும் கவர்ந்த ஆளுமை.
ரத்த சந்தனப்பாவைப் படித்தேன் வாங்கியப் புதிதில்( 1 வருடம் மட்டுமேயிருக்கும்)அப்போது பல கவிதைகள் புரியவில்லை என்பதுதான் என் நிலை.மீண்டும் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள்.(இப்போது என் நிலை பரவயில்லை என்று நான் உணர்கிறேன்)
முதல் கவிதை சிரிப்பை வரவைக்கும்,ஆனால்,வலியான கவிதை.ஜெமோவை கொஞ்ச மாதங்களாக படித்துவருவதால் மலையாளம் கலந்த தமிழ் பிரச்னையாயில்லை.
இரண்டு கவிதைகளிலும் அவர்களின் வாழ்க்கை தெரிகிறது.
இறந்துபோனவர்களைப் பற்றி பதிவெழுதி அஞ்சலி செய்வதை வேறொரு காரணத்திற்காக என் நண்பர் ஒருவர் ஆதங்கத்தோடு குறிப்பிட்டிருந்தார். அவரின் ஆதங்கத்தைப் போக்கும் வகையில் வாழும் படைப்பாளிகளை, அவர்கள் வாழும்போதே கொண்டாடுவது நல்ல முன்னுதாரணம்.
ஆமாம் மண்குதிரை, என்ன ஒற்றுமை,
அம்மா கவிதை கல் விளக்குகள் தொகுதியிலிருக்கிறது, வாசித்தேன் அருமை.
ஆம் அமானுஷ்யங்கள் நிரம்பியது இவரது கவிதைகள்,
மறுபடியும் படிங்க முத்துவேல், இவரது கவிதைகள் நல்ல வாசிப்பனுபவத்தை நல்குபவை.
ராஜ்குமாரின் ஒடக்கு தொகுப்பு படித்திருக்கிறீர்களா? அதில் ஒரு கவிதை 'அவள் எனக்குப் பசி தீர்த்தவள் நீ எனக்குக் காமம் தீர்த்தவள்' என்று தொடங்கி, 'சூசகமாக ஒரு வார்த்தை சொல் என் அம்மாவுக்கு விஷம் வைத்துக் கொன்றுவிடுகிறேன்' என்று முடியும்.
படித்திருக்கிறேன், அந்த கவிதை, இந்த கல்விளக்குகள் தொகுப்பில் இருக்கிறது
கருத்துரையிடுக