புதன், 15 ஏப்ரல், 2009

சில நாட்குறிப்புகள்

காதல்
கடிதத்தில்
காற்றாடி

இலட்சியம் என்ன
என்னவாகப்
போகிறாய்
சாகப்போகிறேன்

நீயின்றி நானும்
நானின்றி நீயும்
சத்தியங்கள்
வாழ்க
ஒழிக

தனியாய் உணர்வதாகவும்
தன்னுடனிருக்கச் சொல்லியும் தனிமை
நெருங்கிப் பழகியதில்
தனிமையுடனான உறவில்
விரிசல்

தண்ணீர் போத்தலின்
அடியாழத்திலிருக்க
வெறுமை
வலியறிந்து
தாகமடக்கினேன்

காமாட்சியம்மன் விளக்கின்
தீநாக்கு பசியில் தவிக்க
தின்னக்கொடுக்கிறேன்
விரலை

உன் திருமண நிழற்படம்
ஒன்றில் புன்னகை
ஒன்றில் தவிப்பு
எது நிஜம்
எது பாவனை
எது எதுவாகவிருக்க
விரும்புகிறேன்

பார்க்க நேர்கையில்
பார்த்துச்செல்லவா
பார்த்தும்
பார்க்காதது போல் செல்லவா

( எது உன் விருப்பம் )

பார்த்தாய்
பார்த்தேன்
பார்த்தோம்
சென்றாய்
சென்றேன்
திரும்பிப் பார்த்தாய்
திரும்பிப் பார்த்தேன்
தேடிக்கொண்டிருக்கிறேன்
ஒருவேளை
நீயும்,,,,,,,,,,,,,,,

பொட்டு வைக்கவில்லையா என்றேன்
மலர்ந்த இதழுடன்
நெற்றியை என் இதழருகே
காட்டி நிற்கிறாள்

காசியென்று
நினைத்திருக்கும்
நின்மேனியை கொசு
நடக்குமா
ஜீவகாருண்யளாயிற்றே நீ

நன்றாக தூங்குகிறாள்
அருகில் படுத்தபடி
வாசித்துக்கொண்டு
நெகிழும் வரிகளில்
அவளறியாமல்
தலைநீவி முத்தமிடுகிறேன்

கோழி மிதித்து குஞ்சுக்கும்
குஞ்சு மிதித்து கோழிக்கும்
ஒன்றும் ஆகாது
மத்தீசமென வந்து
கறியாக்காதீர்கள் எங்களை

புணரும் தருணத்தில்
நிழலாடும்
பிரசவ வலி

கண்ணீரில்
காகிதக்கப்பல் விடும் நீ
மழலையா

நேசிக்கப்படுகிறேன்
மூடநம்பிக்கை

காகம் அறிந்திருக்குமோ
தேர்ந்திருக்கிறது
எச்சமிட

கட்டணம் வசூலிக்காத காற்று
உழைக்காமல் பிழைத்திருக்கும் தாவரம்
பாழாய்ப்போகும் நான்

வசிக்கும் உடலிற்கு
வாடகை வசூலிக்க
வருவார் எவர்

பாதை
பயணம்
எது இருப்பதால்
எது நீள்கிறது

நிலைக்கண்ணாடியில்
எங்கேயென் பிம்பம்
பார்வையிழந்து விட்டேனோ
இறந்து விட்டேனோ

கும்பிடப் போன இடத்து
கொடுமையாய்
ஆலோசனை கேட்கும்
கடவுளர்கள்
நாத்தீகர்களாவதற்கு

எது
இருக்கையில் இருப்பது
இறக்கையில் இறப்பது

மரண வாக்குமூலம்
நேசம் நேசமன்றி
வேறொன்றுமில்லை

அலங்கார வசீகரங்களுடன்
புணர அழைக்கும்
வேசியாய்
மரணம்


இரக்கமும் கருணையும்
அதிகம்
மரணத்திற்கு

சுட்டும் விழிச்சுடர்
சுடுகாட்டில் வைத்தது
கொள்ளி

20 கருத்துகள்:

மண்குதிரை சொன்னது…

புது முயற்சியா ! வாழ்த்துக்கள் யாத்ரா.

சில இடங்களில் பிழை இருப்பது போல் தெரிகிறது. மறுபடியும் வாசித்துப்பாருங்கள்.

இந்தக் கவிதைகளை வாசித்ததும் எனக்கு பச்சியப்பன் ஞாபத்திற்கு வருகிறார். அவரை வாசித்திருக்கிறேர்களா?

இதோ ஒன்று

//எனக்கும் சேர்த்து வாழ்ந்துவிட்டு வா
உனக்கும் சேர்த்து மரித்துப் போகிறேன் நான்//

இன்னும் நிறைய இருக்கிறது. வாசிக்கவில்லை என்றால் கண்டிப்பாக வாசியுங்கள்.

Karthikeyan G சொன்னது…

சூப்பர்!!


எம்மாம் பெரிய கவிதை. ;-)

யாத்ரா சொன்னது…

பச்சியப்பன் இன்னும் தொகுப்பாக வாசித்ததில்லை. கீற்று போன்ற இணையத்தள்ங்களில் அங்கங்கு வாசித்திருக்கிறேன். தேடி அவசியம் வாசிக்கிறேன்,

புது முயற்சியல்ல இவை, சில வருடங்களுக்கு முன்னால், எனக்கு எழுத வருமா என்ற முயற்சியில், மொழியோடு தவழ்ந்து, நடை வண்டியில் நடை பழகிய காலங்களில் எழுதிப்பழகியவைகளில் சில இவை.

மழலையில் செய்த பிழைகள்,அதனால் அப்படியே பதிவிட்டு விட்டேன்.

யாத்ரா சொன்னது…

அன்பு கார்த்திகேயன், பெரிய கவிதையல்ல, துண்டு துண்டு நாடகுறிப்புகள்.

Unknown சொன்னது…

நல்லா இருக்கு.

எழுத்துப் பிழைகள் இருக்கிறது.
”கொல்லி” or "கொள்ளி”

யாத்ரா சொன்னது…

மாற்றிவிட்டேன், நன்றி

Karthikeyan G சொன்னது…

ஓகே.. :)

ஆ.சுதா சொன்னது…

துண்டு துண்டு கவிதைகள்
ஒவ்வொன்றும் துண்டாக்குகின்றது மனதை.

அருமையா இருக்கு யாத்ரா,

selventhiran சொன்னது…

அன்பின் யாத்ரா,

புத்தகப்பட்டியல் போட்டிக்கான பரிசினை அனுப்பி வைக்க தங்களது முகவரி தேவைப்படுகிறது. என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது முகவரியை அனுப்பி வைத்தால் தன்யனாவேன்.

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.
k.selventhiran@gmail.com

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

குறிப்பில் கவிதையா?
கவிதையில் குறிப்பா?

எப்படியோ? நன்றாக இருக்கிறது :)

-ப்ரியமுடன்
சேரல்

ச.முத்துவேல் சொன்னது…

மண்குதிரை, பச்சியப்பன் பற்றிய உங்கள் பரிந்துரைத்தல் மகிழ்ச்சியளிக்கிறது. நான் அவரின் தொகுப்புகள் முழுதும் படித்துவிட்டேன் என சொல்லமுடியும்.உள்ளபடியே மிக நல்ல கவிஞர். அவரின் கவிதைகளை அறிமுகப்படுத்தி, ஒரு இடுகை எழுதவேண்டும் ரொம்ப நாள் திட்டம். நான் சோம்பெறி. நீங்கள் எழுதலாமே.

(யாத்ரா கவிதை பற்றி பிறகு..)

ச.முத்துவேல் சொன்னது…

பின்னூட்டங்களின் புண்ணியத்தில் ஒரு கவிதையல்ல, சில கவிதைகள் என்று புரிந்துகொண்டேன்.(முத்துவேல், நீ இன்னும் தேறணும்)
நிறைய நல்லாயிருக்குது.

Subash சொன்னது…

மிகவும் அருமை + இனிமை
வாழ்த்துக்கள்

தமிழன்-கறுப்பி... சொன்னது…

எத்தனை பதிவுகள் படிக்கத்தான் நேரம் கிடைக்கவில்லை யாத்ரா, இப்படி துண்டு துண்டாக எழுதுவது சுவாரஸ்யமாய்தான் இருக்கிறது இல்லையா?

யாத்ரா சொன்னது…

மண்குதிரை, கார்த்திகேயன், ரவிஷங்கர், முத்து, செல்வேந்திரன், சேரல், முத்துவேல், சுபாஷ், தமிழன் கறுப்பி நன்றிங்க அனைவருக்கும்.

Sugirtha சொன்னது…

//தனியாய் உணர்வதாகவும்
தன்னுடனிருக்கச் சொல்லியும் தனிமை
நெருங்கிப் பழகியதில்
தனிமையுடனான உறவில்
விரிசல்.//

//நன்றாக தூங்குகிறாள்
அருகில் படுத்தபடி
வாசித்துக்கொண்டு
நெகிழும் வரிகளில்
அவளறியாமல்
தலைநீவி முத்தமிடுகிறேன்//

//புணரும் தருணத்தில்
நிழலாடும்
பிரசவ வலி//

இந்த ஒவ்வொரு கவிதையிலும் உறைந்திருக்கும் நிஜமும் அதை அழகாய் வெளிப்படுதியிருக்கும் பாங்கும் மிக நன்றாய் இருக்கிறது. இந்த உணர்வுகளும் நெருக்கமாய் இருக்கிறது.

TKB காந்தி சொன்னது…

//உன் திருமண நிழற்படம்
ஒன்றில் புன்னகை
ஒன்றில் தவிப்பு
எது நிஜம்
எது பாவனை
எது எதுவாகவிருக்க
விரும்புகிறேன்//
யாத்ரா, ரொம்ப அருமையான கவிதைகள். மேலே குறிப்பிட்டது மிகவுமருமை.

யாத்ரா சொன்னது…

சுகிர்தா, காந்தி பகிர்வுக்கு நன்றி.

Unknown சொன்னது…

அனைத்தும் அருமை :))

யாத்ரா சொன்னது…

நன்றிங்க ஸ்ரீமதி.