நெடுங்காலமாய் பாதுகாத்திருந்த
மைதீர்ந்த எழுதுகோல்
கண்மையும் நீரும் உதட்டுச்சாயமும் ஒட்டிய
துவைக்காத கைக்குட்டை
முத்தங்களுடன் முடியும் கடிதங்கள்
சிரிக்கும் சாவிக்கொத்து பொம்மை
உடைந்த வளையல் துண்டுகள்
உதிர்ந்த மோதிர ஒற்றைக்கல்
பரிசளித்த புத்தக பக்கங்களுக்கிடையில் சேமித்த
நீள ஒற்றைக்கற்றை அருகே
அழுந்தியபடியிருக்கும் ஒற்றைப்பூ
மேலே ஒரு பொட்டு
உணவகத்தில் இதழ் துடைத்த தாள்
குறுஞ்செய்திகள் நிரம்பிய அலைபேசி
கொலுசின் உதிர்ந்த ஒற்றைப்பரல்
அறியாது அபகரித்த
மாதவிடாய்க் கறை படிந்த துணி
மலக்கழிவென எஞ்சியிருக்கும் நினைவுகள்
இன்னும் இன்னபிற என
சூன்யக்காரனின் மூலப்பொருட்களையொத்த
சேகரங்களனைத்தையும்
கீழ் உள்ளாடைக்குள் மூட்டைக்கட்டி
வீசிவிட்டு வந்தேன் கடலுக்குள்
வந்ததாகவே நினைவு
எங்ஙனம் உறுதிபடுத்திக்கொள்ள
என் இருப்பை
இந்தச் சூன்யவெளியில்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
10 கருத்துகள்:
நல்லா இருக்கு செந்தில்.
அடுக்கடுக்கான விவரிப்பு பிரமிக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.
//அடுக்கடுக்கான விவரிப்பு பிரமிக்க வைக்கிறது. //
எனக்கும்தான்.
நீங்கள் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள், அருமை!
-ப்ரியமுடன்
சேரல்
கவிதை நல்லா இருக்கு.
உங்கள் கவிதையின் வரிகள்
எப்பவுமே ஒரு தனிதண்மையுடன் அருமையாக உள்ளது. யாத்ரா
யாத்ரா உங்கள் மொழி அருமையாக இருக்கிறது.
நல்ல கவிதை. இப்படி உடன் வரக்கூடாத எல்லா நினைவுகளையும் வீசியெறிவது சாத்தியமானால் எவ்வளவு நன்றாய் இருக்கும்
உங்களது சொல் தேர்வும், அணுகுமுறையும் அற்புதம்.
இந்த முறை எடுத்துக்கொண்டிருக்கும் கருவே கொஞ்சம் கரடுமுரடாக இருப்பதால் கவிதையின் உத்தி இன்னமும் அழகாக தோன்றுகிறது. வாழ்த்துக்கள்!
ஓஹ்.. ரொம்ப நல்லா இருக்குங்க கவிதை!
சும்மா சொல்லக் கூடாது ... There is some magic (black ? :)) in this poetry ... மொழிவளம் பிரம்மிப்பூட்டுகிறது ...
வடகரை வேலன், மாதவராஜ், சேரல், முத்து, மண்குதிரை, சுகிர்தா, வெங்கிராஜா, சுந்தர், நந்தா நன்றிங்க அனைவருக்கும்.
கருத்துரையிடுக