திங்கள், 27 ஏப்ரல், 2009
நிறைவேறாத ஆசைகள்
நிறைவேறாத ஆசைகளுடன்
மரித்த ஆத்மா இது
சுருக்குக் கயிற்றில் சங்கிறுக
விழிவெறிக்க நாத்தள்ள
குறிவிறைத்து உயிர்த்துளி கசிய
பூச்சி மருந்தருந்தி நுரைத்தள்ளி
குடல் வெளிவரும் அனுபவமாகி
நீரில் மூழ்கி வெகு ஆழத்தில்
கடைசி ஸ்வாசமற்றுப்
போகும் கணத்தை தரிசித்து
தண்டவாளத்தில் தலை கொடுத்துப் படுத்து
சக்கரத்தின் ஏறுவதற்கு முந்தைய
கணத்தின் ஓசையை உற்றுக்கேட்டு
தலை துண்டிக்கப்பட்டபின்
விழி எதைப்பார்க்கிறது
வாய் என்ன முணுமுணுக்கிறது
கை கால்களின் செய்கையென்ன
என்பதறிந்து இறக்கவுமே ஆசைப்பட்டேன்
இது எதுவுமே நிறைவேறாது
மரணம் சம்பவித்தது துரதிஷ்டவசமானது
சில உடல்களைத் தேர்ந்திருக்கிறேன்
ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள
தன்னிறைவடையாவிடில்
மேலும் சில உடல்களையும்,,,,,,,,,
தயவுசெய்து தாங்கள்
மறுப்பின்றி சம்மதிக்கவேண்டும்
சங்கடப்படாதீர்கள்
நீங்களும் சில உடல்களில் புகுந்து
தீர்த்துக்கொள்ளலாம் உங்கள்
நிறைவேறாத ஆசைகளையும்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
19 கருத்துகள்:
யாத்ரா, உங்கள் கவிதைகளை வாசிக்கும்போது ஏற்படும் படித்த திருப்தி அலாதி.
simply superb..உங்கள் கவிதைகள் ஒரு தனித்துவம் வாய்த்த ஒன்று ..
அருமையான கவிதை.
தனிமையும், அதன் வலியும் தொடர்ந்து உங்கள் எழுத்துக்களில் வெளிப்படுகிறது.
மிக சந்தோஷமான சில தருணங்களையும் எழுதிப்பார்க்கலாமே!
இது விமர்சனமல்ல. ஆசை.
மரண வலி தோன்றி மறைகிறது.
-ப்ரியமுடன்
சேரல்
அருமையா எழுதுரீங்க யாத்ரா
கவிதை ரொம்ப நல்லா இருக்கு,
கவிதையின் காரணமும் அதனை வெளிபடுத்தும் வார்த்தைகளும்
சுலபமாக வந்துவிடுகிறது உங்களுக்கு
உங்கள் கவிதைகள் அனைத்துமே அற்புதமானவை.
paranormal, abnormal, குரூரம் போன்றவற்றுள் புகுந்து வெளிப்படும் மொழி நடை சிலிர்ப்பூட்டுகிறது
நல்ல இருக்கு யாத்ரா.
பயமாக இருக்கிறது. என்னை தேர்ந்தெடுத்துவிடாதீர்கள்.
நண்பர் மாதவராஜின் கருத்தே என்னுடையதும்.. ஏற்கனவே 'கொலை' கவிதை உங்கள் தளத்தில் படித்தேன்!!!
கவிதையின் வலி அதிகமாக இருக்கிறது. நானும் யாராவதாக மாற நினைக்கிறேன் :)
யாத்ரா, கவிதையென்ற அளவில் இது எனக்குப் பிடித்திருக்கிறது. உங்களுடன் பழகியவர்களுக்கும் / நண்பர்களுக்கும் இது திகிலூட்டலாம்.
death..
.. the ultimate conquerer of all ...
your depiction of death
surely sends shivers down my veins..!
a good one... well done
அண்ணன் மாதவராஜ் சொன்னது தான், கவிதைன்னாலே சோகராகம் தானா?
மறுபடியும் கைதட்டல்கள்! தொடர்ந்து சபாஷ் போடவைக்கிறீர்கள்.
நன்றி காந்தி
நன்றி செந்தில்குமார்
மாதவராஜ் சார் நீங்கள் எல்லாம் என்னை விமர்சிக்கணும்,
சந்தோஷமான தருணங்கள் இருக்கான்னு யோசிச்சு பாக்கறேன், முயற்சி பண்றேன் சார், மிக்க நன்றி.
நன்றி சேரல்
நன்றி முத்து
நன்றி நந்தா
நன்றி மண்குதிரை, மரித்த ஆத்மாவின் குரல் அது, என்னுடையது அல்ல, பயம் வேண்டாம் மண்குதிரை, ஆத்மாவுடன் ஒரு பேச்சுவார்த்தை நடத்தி அதன் அராஜகப் போக்கை அதற்கு உணர்த்தி மூளைச்சலவை செய்தாயிற்று, மேலும் அது தன் தவறுணர்ந்து மன்னிப்பு கோரியிருக்கிறது.
இதுமட்டுமின்றி தான் தவறாக புரிந்து கொள்ளப் படடதாக விசனப்பட்டது, கொள்ளும் கடவுளைக் கூட வணங்குகிறார்கள், நல்லெண்ணத்துடன் செயல் படும் என் போன்ற சாத்தான்களுக்கு எப்பொழுதுமே கெட்ட பெயர் தான் என வருத்தப்பட்டது, அப்படியென்ன நல்லெண்ணம் என வினவியதற்கு அதெல்லாம் உனக்கு தெரியாது என்று கண்ணைத் துடைத்த படியே சென்றுவிட்டது.
நன்றி ஆதவா
நன்றி சுந்தர் சார், எனக்குமே கூட இந்தக் கவிதை எழுதினப்ப கொஞ்சம் திகிலாத் தான் இருந்தது, மேலும் அது என்னுடைய குரல் அல்ல, ஏதோ ஒரு சாத்தானின் குரல், அதுவும் அந்த சாத்தானை அதன் நல்லெண்ணத்தை புரிந்து கொள்ளாது நான் உட்பட எல்லோரும் தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம், அது ரகசியமாய் என் காதில் சொன்னது நான் புத்தனின் ஆத்மா என்று, ஜென் துறவி, சூபி ஞானி, சித்தர்கள் போல் இந்த ஆத்மாவின் போக்கை புரிந்து கொள்ள முடியவேயில்லை. மேலும் அது சொன்னது, நேசம் மட்டுமே ஒரு உயிருக்கு இன்னொரு உயிர் அளிக்கும் ஆகப் பெரிய தண்டனை என்று. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
நன்றி ஆறுமுகம்
நன்றி வெங்கிராஜா, சந்தோஷராகம் பாட முயற்சிக்கிறேன்.
சென்ற இடுகையில் எழிதியிருந்த ஸ்ரீ நேசனின் கவிதையின் தாக்கம், உங்களின் இக்கவிதையில் இருக்கிறது என நினைக்கிறேன். சரியா? (தற்)கொலை மரணங்களைப் பற்றி நீங்கள் விவரித்தவை என்னைக் கவர்ந்தவை. பதிவு செய்யப்படவேண்டியவை என நான் கருதுபவை.ஆத்மாவின் குரலாக எழுதியிருப்பது நல்ல கவிதை உத்தி. எனக்குப் பிடித்திருக்கிறது.
ஆமாம் முத்துவேல், அதன் தாக்கம் இருக்கிறது, மிகச்சரி, ஆதவா கூட குறிப்பிடடிருந்தார்.
நன்றி முத்துவேல்.
tharkolai enbathu evalvu kodiyathu enpathai uyirodamaga solliirukinga.itai patitha yarukum tharkolai ennam varathu.
with love
ESWARIRA
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஈஸ்வரி.
//சில உடல்களைத் தேர்ந்திருக்கிறேன்
ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள
தன்னிறைவடையாவிடில்
மேலும் சில உடல்களையும்,,,,,,,,,
தயவுசெய்து தாங்கள்
மறுப்பின்றி சம்மதிக்கவேண்டும்
சங்கடப்படாதீர்கள்
நீங்களும் சில உடல்களில் புகுந்து
தீர்த்துக்கொள்ளலாம் உங்கள்
நிறைவேறாத ஆசைகளையும்...//
//மண்குதிரை கூறியது...
நல்ல இருக்கு யாத்ரா.
பயமாக இருக்கிறது. என்னை தேர்ந்தெடுத்துவிடாதீர்கள்//
//நன்றி மண்குதிரை, மரித்த ஆத்மாவின் குரல் அது, என்னுடையது அல்ல, பயம் வேண்டாம் மண்குதிரை, ஆத்மாவுடன் ஒரு பேச்சுவார்த்தை நடத்தி அதன் அராஜகப் போக்கை அதற்கு உணர்த்தி மூளைச்சலவை செய்தாயிற்று, மேலும் அது தன் தவறுணர்ந்து மன்னிப்பு கோரியிருக்கிறது.
இதுமட்டுமின்றி தான் தவறாக புரிந்து கொள்ளப் படடதாக விசனப்பட்டது, கொள்ளும் கடவுளைக் கூட வணங்குகிறார்கள், நல்லெண்ணத்துடன் செயல் படும் என் போன்ற சாத்தான்களுக்கு எப்பொழுதுமே கெட்ட பெயர் தான் என வருத்தப்பட்டது, அப்படியென்ன நல்லெண்ணம் என வினவியதற்கு அதெல்லாம் உனக்கு தெரியாது என்று கண்ணைத் துடைத்த படியே சென்றுவிட்டது//
அழகு எல்லாமும்.
தங்களின் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி இலக்குவண்.
பயமுறுத்தாதிங்கப்பா!
கருத்துரையிடுக