செவ்வாய், 21 ஏப்ரல், 2009
சாசனம்
கிடத்தி கிடந்து புலம்பியழாதீர்கள்
ஊதுபத்திக்கு பதில் சிகரெட்
இன்னும் கஞ்சா உசிதம்
பன்னீருக்கு மாற்றாக பிராந்தி
பயம் பூக்களின் மென்மையில்
தவிர்த்திடுங்கள் மாலைகளை
குளிர் நீரில் முற்றிலும்
நிர்வாணமாய் குளிப்பதே வழமை
பரவாயில்லை
ஆடைகளோடே குளிப்பாட்டுங்கள்
மீரா ஷிக்காய் அமாம் சோப்
சாவுக்கூத்தும் பறையோசையும் கொண்டாட்டம்
நண்பர்கள் ஆடினால் ம்கிழ்வேன்
மரணகானா விஜியை எப்பாடுபட்டாவது
அழைத்து வந்துவிடுங்கள்
சங்கு மணி அவசியம்
வெள்ளை தவிர்த்து கறுப்புத்துணி போர்த்துங்கள்
மூங்கில் கொம்பு தென்னையோலை சணல் இதுபோதும்
உடல் மட்டுமே இது
கொள்கைகள் சிலதில் சமரசம் செய்கிறேன்
தங்கள் விருப்பச் சடங்குகளில் குறுக்கிடவில்லை
ஆடுபவர் அடிப்பவர் அடக்கம் செய்பவர்
போதைக்கு மறக்காமல் கவனியுங்கள்
மனிதனை மனிதன் சுமப்பதில்
உடன்பாடில்லை ஊர்தி அவசியம்
விதிவிலக்களித்து தாய்க்குலங்கள்
இடுகாட்டில் வாய்க்கரிசியிட அனுமதியளிக்குமாறு
தாழ்மையுட்ன் வேண்டுகிறேன்
விருப்பப்பட்டால் முகத்தில்
விழிக்கவேண்டாமென்றவர்களும்
முகம் பார்த்துக்கொள்ளலாம் கடைசியாய்
இரக்கமற்ற மின்தகனம் வேண்டாமே
இவள் வந்து கொள்ளி வைக்க அனுமதிக்கவும்
விருந்தினர் சிரமம் கருதி
உடன் பால் நல்லது
அஸ்தியை சாக்கடையில் கரைக்கவும்
3 5 8 10 15 30 ல்லாம் எதற்கு சிரமம்
திதி ஞாபகமிருந்தால் பார்த்துக்கொள்ளலாம்
நினைவு பொல்லாதது
எதையும் வைக்காதீர்கள் நினைவில்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
24 கருத்துகள்:
Wow.. super..
மரணம் குறித்த கவிதைகள் மிக நெருக்கம் ஆகி விடுகின்றது. இதுவும்..
கலக்கியிருக்கீங்க :)
மரணச் சடங்குகள் சம்பிர்தாயங்கள்
மாற்று சூழலில் இக்கவிதை சில சுயக் கேள்விகளை இட்டுச் செல்கின்றன.
எதையோ தொலைத்தது போல் தேட வேண்டியுள்ளது மரணத்தில்.
கவிதை அருமையா இருக்கு யாத்ரா
விருப்பப்பட்டால் முகத்தில்
விழிக்கவேண்டாமென்றவர்களும்
முகம் பார்த்துக்கொள்ளலாம் கடைசியாய்
மரணம் தான் உறவுகளின் தேவையற்ற
வறட்டு பிடிவாதங்களை போக்குகின்றன
இந்த சாசனம் எல்லாருக்கும் பிடிக்கும்
Wow super.... :))))
//நினைவு பொல்லாதது
எதையும் வைக்காதீர்கள் நினைவில்//
Unmai... :((
நல்ல கவிதையிது யாத்ரா!
மிகவும் நல்ல கவிதை யாத்ரா!
படிக்கும் போதே ஒரு ஓரப்புன்னகை!
மரணத்திற்குப் பிறகு எனக்கு வரும் மெயிலை யார் படிப்பார்கள் என்ற கேள்வி என் மனதுக்குள் இருந்துவருகிறது யாத்ரா.... அதான் புன்னகை!!!
நல்ல கவிதை இது!
ரொம்ப நல்லா இருக்கு யாத்ரா...
தோழமையுடன்
பைத்தியக்காரன்
superb ... இறுதி வரிகளும் ... அதற்கு இட்டுச் சென்ற மற்ற வரிகளும் ... yeah ... memory is so costly ... அதுவும் மற்றவர் நினைவுகளில் நாம் வாழ்ந்து கொண்டேயிருப்பது கொடுமை ... இது பற்றி நானும் சிந்தித்து இருக்கிறேன் என்பதால் இந்தக் கவிதை கொஞ்சம் அதிக நெருக்கத்தை ஏற்படுத்துகிறது ...
'இவள் வந்து கொள்ளி வைக்க அனுமதிக்கவும்'
what a rebellious thought...
I hope this becomes a reality in the coming years..!
'நினைவு பொல்லாதது
எதையும் வைக்காதீர்கள் நினைவில்'
I'll try to keep this in my mind... ooops..!!!
/நினைவு பொல்லாதது/
மரணத்தை விட, தொடர்ந்து துரத்தும் நினைவுகள்தான் பயமாய் இருக்கிறது.
நல்ல கவிதை யாத்ரா
ரொம்ம்ப நல்லாயிருக்கு யாத்ரா. நல்லா அனுபவிச்சேன், கவிதையை. நிறைய விடயங்களை சொல்லிட்டீங்க.அங்கதம்,பகடி கலந்த எடுத்துரைப்புகள்.
கலக்கல்.
நல்ல சாசனம்
-ப்ரியமுடன்
சேரல்
கார்த்திகேயன்,காந்தி, முத்து, புன்னகை, ஸ்ரீமதி, சுந்தர்ஜி, மண்குதிரை, ஆதவா, பைத்தியக்காரன், நந்தா, ஆறுமுகம், சுகிர்தா, முத்துவேல், சேரல் அனைவருக்கும் நன்றி.
கவிதையின் ஊடே மரண ஆட்டம்… செம்ம குத்து....
அசூர ஆட்டம் .. பின்னிட்டிங்க ஒவ்வொரு வரியிலும்
//இவள் வந்து கொள்ளி வைக்க அனுமதிக்கவும்//
//தங்கள் விருப்பச் சடங்குகளில் குறுக்கிடவில்லை
உடல் மட்டுமே இது//
Excellent
நன்றி அசோக்.
நல்லா இருக்கு!
இதான் ஐம்பதாவது பதிவா? கவிதையை இத்தோடு நாலாவது முறை படிக்கிறேன்...
வாழ்த்துக்கள் அண்ணன்..!
மிக மிக நெருக்கமான கவிதை.
//நினைவு பொல்லாதது
எதையும் வைக்காதீர்கள் நினைவில்//
:((((((((((((((((
தொடர்ந்து பிரமிப்பூட்டுகிறீர்கள்
அற்புதம் ..!
எங்கிருந்து எங்கு அழைத்துப் போகிறது
உங்கள் வரிகள்..
எனக்கும் மின்மயானம் உடன்பாடில்லை
கண்ணீர் மீறும்போது எதுவும் சொல்லத் தோணலை யாத்ரா..
சூப்பர்:-)
wow, ரொம்ப நல்லா இருக்கு, யாத்ரா.
கருத்துரையிடுக