திங்கள், 6 ஏப்ரல், 2009

ஏழாம் உலகம்அம்மா தாயே
அய்யா பிச்சை போடுங்க
உங்க காலைப் பிடிச்சி கேக்கறேன்
தர்மம் தலைகாக்கும்
நீங்க நல்லாயிருப்பீங்க
காக்குமென்று நினைத்த தர்மமெல்லாம்
காலை வாறிவிட்டது
நல்லாயிருப்பீங்களாம்
என்னமோ
இவனுக்கு பிச்சையிட்டால்
ஈழத்தில் அமைதி நிலவும்
பொருளாதாரச் சரிவு சீராகும்
சுனாமி வராது
விலைவாசி குறையும்
காவிரித்தண்ணீர் வரும்
பப்பில் மதுவருந்தும்
எம் குலப்பெண்கள் தாக்கப்படமாட்டார்கள்
ஐடி யில் மறுபடியும்
பணிக்கு அழைத்துவிடுவார்கள்
என்பது போல
வந்துவிட்டான்(ள்)கள்

13 கருத்துகள்:

சேரல் சொன்னது…

ஒவ்வொரு மனிதனும் தனக்குள் சிருஷ்டித்துக்கொள்ளும் இன்னொரு உலகத்தைச் சொல்லி இருக்கிறீர்கள். தானம் கேட்பவர்களின் ஏழாம் உலகம் கூட சிருஷ்டிக்கப்பட்டதே, கையாலாகாத்தனம் நிறைந்த மனிதர்களால்.

-ப்ரியமுடன்
சேரல்

yathra சொன்னது…

அன்பு சேரல், பிச்சை இங்கு இன்னொன்றின் படிமம், கொஞ்சம் யோசிச்சிப் பாருங்களேன்

சேரல் சொன்னது…

இன்னும் 36 நாட்களுக்கு இங்கு நடக்கப்போகிற காமெடி காட்சிகளைப் படிமமாக்கி இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.

-ப்ரியமுடன்
சேரல்

ஆ.முத்துராமலிங்கம் சொன்னது…

//அம்மா தாயே
அய்யா பிச்சை போடுங்க
உங்க காலைப் பிடிச்சி கேக்கறேன்
தர்மம் தலைகாக்கும்
நீங்க நல்லாயிருப்பீங்க//

இது நம் அரசியல் வாதிகளை தான் சொல்கின்றீர்க இல்லையா
அதன் பின் உள்ளவைகள் அத்தனையும் எல்லோர் மனதிலும் எழுவதே,

ஆதவா சொன்னது…

நல்லா இருக்குங்க்!!!

ஆதவா சொன்னது…

விடுங்க யாத்ரா...

சகஜம்தானே!!! நாம ஓ போடுவோம்!!!

மண்குதிரை சொன்னது…

உயிரோசையில் வெளிவந்திருக்கும் கவிதையை ரசித்தேன் நண்பரே.

arumugam சொன்னது…

simple wordings..deeper meanings..
and thats what makes your poem
stand out from the rest..
All the best.. keep writing..

yathra சொன்னது…

சேரல், முத்து, ஆதவா, மண்குதிரை, ஆறுமுகம் நன்றிங்க அனைவருக்கும்.

மண்குதிரை, நான் உங்க தளத்தில் பின்னூட்டமிட்டடால் error on page என வருகிறது, பலமுறை முயற்சித்துவிட்டேன், தங்கள் தளத்தில் பின்னூட்டமிடும் அமைப்புமுறையை இத்தளத்தில் உள்ளது போல் மாற்றியமைத்தால் நன்றாயிருக்கும்.

மண்குதிரை சொன்னது…

//மண்குதிரை, நான் உங்க தளத்தில் பின்னூட்டமிட்டடால் error on page என வருகிறது, பலமுறை முயற்சித்துவிட்டேன், தங்கள் தளத்தில் பின்னூட்டமிடும் அமைப்புமுறையை இத்தளத்தில் உள்ளது போல் மாற்றியமைத்தால் நன்றாயிருக்கும்.//

கொஞ்சம் விளக்குங்கள் யாத்ரா !

கே.ரவிஷங்கர் சொன்னது…

நல்லா இருக்குங்க இந்த கவிதை.

D.R.Ashok சொன்னது…

நல்லாயிருக்கே

yathra சொன்னது…

ரவிஷங்கர், அசோக் நன்றிங்க