திங்கள், 4 மே, 2009

அறியாமை



அறியாமல் எய்திவிடுகிறீர்கள்
அம்புகளை
காகிதக்கத்தியென
விளையாட்டாய் செருகிவிடுகிறீர்கள்
தாகத்திற்கு குளிர்பானமாய்
அமிலம் அருந்தக்கொடுக்கிறீர்கள்
பீங்கான் வட்டில் கழிவறை பீங்கானென
மலம் பறிமாறுகிறீர்கள்
அறிவேன் அனைத்தும்
அறியாமையில் செய்யப்பட்டவைகளே
என் அறியாமையை மட்டுமேன்
அறிய மறுக்கிறீர்கள்.

10 கருத்துகள்:

"உழவன்" "Uzhavan" சொன்னது…

//என் அறியாமையை மட்டுமேன்
அறிய மறுக்கிறீர்கள்//
நல்ல சிந்திக்கத் தூண்டும் கேள்வி.

அன்புடன்
உழவன்

பெயரில்லா சொன்னது…

//என் அறியாமையை மட்டுமேன்
அறிய மறுக்கிறீர்கள்.//

நியாயமான ஆனால் பதில் எப்போதும் கிட்டாத கேள்வி இது.

மண்குதிரை சொன்னது…

படிமமா? குழப்பமாக இருக்கிறது யாத்ரா.

நந்தாகுமாரன் சொன்னது…

ம்ஹூம் ...

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

அருமை! சில கேள்விகளுக்கு எப்போதுமே பதில் கிடைப்பதில்லை யாத்ரா!

-ப்ரியமுடன்
சேரல்

ஆ.சுதா சொன்னது…

ஆதங்கமான கேள்விகள், கவிதை
நறுக்கு.

யாத்ரா சொன்னது…

உழவன், வடகரைவேலன், மண்குதிரை, நந்தா, சேரல், முத்து நன்றி அனைவருக்கும்.

ச.முத்துவேல் சொன்னது…

அடுத்தவர் அறியாமல் தவறு செய்கிறபோது பூதாகரமாக்கிப் பார்க்கிறவர்கள், தன் தவறுகளை பெரிதாக உணருவதில்லை.
மாமியார் உடைச்சா மண்குடம்.மருமக உடச்சா பொன்குடம்.
இப்படிப் புரிந்துகொள்கிறேன்.சரியா?
/என் அறியாமையை மட்டுமேன்
அறிய மறுக்கிறீர்கள்./

பெருந்தன்மையும்,பக்குவமும்,
வெற்றிகளும் இயல்பாகப் பெற்றவர்களுக்கே பிறரின் அறியாமையை அறிய வாய்க்கும்.

ஆதவா சொன்னது…

மிக அருமையாக இருக்கிறது யாத்ரா..! அழகான கவிதை!! சொற்கள் அளவாக இருக்கிறது!

யாத்ரா சொன்னது…

முத்துவேல் ஆதவா நன்றி

மண்குதிரை, எனக்குமே கூட குழப்பமாத்தான் இருக்கு,
இந்த உவமை உருவகம் குறியீடு படிமம் இவற்றிற்கெல்லாம் இன்னமும் அர்த்தம் சரியாகத் தெரியவில்லை.