சனி, 25 ஏப்ரல், 2009

கலைந்த உறக்கம்



விட்ட மின் விசிறியில்
காயமுற்று
சரிவிகித உதிர உயிர்த்துளி
வெள்ளத்தில் உடல் மிதக்க
கான்கிரீட் விதானம்
துளைத்து விறைத்து
நிலவைப் புணர்கிறது
திடுக்கிட்டு விழித்து
யாருமற்ற அறையை
உற்று நோக்கி
பால்கனி வந்து
வெறுமை வானம்
வெறித்துப் புகைத்து
கதவடைத்து உறங்கப்போனேன்
கனவையும் விழிப்பையும் சபித்தபடி.

11 கருத்துகள்:

ஆதவா சொன்னது…

நல்லா இருக்குங்க.... ()

மாதவராஜ் சொன்னது…

விழிப்பை சபிக்கலாம். கனவையுமா?
நிலவைப் புணர்வது என்பதை முதன் முதலாக இலக்கியத்தில் கேட்பது இப்போதுதான்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

வித்தியாசம்

-ப்ரியமுடன்
சேரல்

ஆ.சுதா சொன்னது…

நல்லா இருக்கு

மண்குதிரை சொன்னது…

nalla irukku yaathraa

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குங்க கவிதை... கனவில் வரும் விஷயங்களாகப் பாதியும், அதை நொந்து கொண்டு மீதியாமாய்ப் புரிந்தது இப்போது... நாளை மறுபடியும் வாசிக்க நேர்ந்தால் எப்படியோ...

ஒரு தளத்திற்கு மேலேயே இயங்குகின்றன உங்கள் கவிதைகள் என்பதில் மகிழ்ச்சி!

நந்தாகுமாரன் சொன்னது…

oh ... what an expression ...

Chandran Rama சொன்னது…

extraordinary expressions,..
a surrealistic presentation..

the going is great..
keep up the ignition..

யாத்ரா சொன்னது…

ஆதவா, மாதவராஜ், சேரல், முத்து, மண்குதிரை, சுந்தர், நந்தா, ஆறுமுகம் அனைவருக்கும் நன்றிங்க.

anujanya சொன்னது…

நல்லா இருக்கு யாத்ரா. நுண் உணர்வுகளை எழுப்பும் வரிகள்.

அனுஜன்யா

யாத்ரா சொன்னது…

நன்றி அனுஜன்யா