செவ்வாய், 14 ஏப்ரல், 2009

காலத்தால்,,,,,,,,,,,



வாதைகளிலிருந்து விடுபட
காயங்களில் மருந்திட
உள்ளிழுக்கும் புதைகுழியிலிருந்து
மீள புதைய
அரிப்புகளை சொரிந்து புண்ணாக்கிக் கொள்ள
குலைத்துக் கொண்டிருக்கும்
குற்றவுணர்வின் நாக்கையறுக்க
ரகசியமாய் எதிரிகளை
வஞ்சம் தீர்த்துக் கொள்ள
புழுக்கத்திற்கு சாமரமாக
துரோகிகளோடு கைக்குலுக்க
கண்ணாடிக் குவளையென
உடைந்த உறவை ஒட்ட வைக்க
அவளின் புகைப்படத்தை
இவளறியாமல் பார்த்துக் கொள்வதாய்
நாசூக்காய் குற்றங்களை நியாயப்படுத்த
பிறழ்வடைந்தவன் அற்றவனென உறுதிபடுத்த
ஆசை பிம்பத்தை வரித்து சுயபோகிப்பதாய்
என்னிலிருந்து என்னை தற்காத்துக்கொள்ள
தனிமையை நிரப்ப
நிரப்பியதை வெறுமையாக்க
இருக்க இல்லாமலிருக்க
ஒவ்வொரு முறையும் நான்
கொலை செய்யப்படுவதின் நேரலையாய்
இவைகளைப் போல்
இவைகளின் மாயை போலிருக்கும்
இந்த எழுத்தும் இதன் உள்ளீடுகளும்
காலத்தால் அழியுமெனினும்
எழுதிக்கொண்டிருக்கிறேன்

11 கருத்துகள்:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

என்ன சொல்ல நண்பரே!

உள்ளத்தின் வலி பிரசவித்த வார்த்தைகள் மிகவும் கனமாகவே இருக்கின்றன.

-ப்ரியமுடன்
சேரல்

மாதவராஜ் சொன்னது…

தலைப்பை மாற்றலாம் என நினைக்கிறேன்.
நல்லா வந்திருக்கு கவிதை.

ஆதவா சொன்னது…

ரொம்ப நல்லா வந்திருக்குங்க!!! வாயடைத்துப் போயிருக்கிரேன்!!! முழுவதுமாக உள்ளிழுத்து சுவைத்தேன்.... கவியை!

ஆ.சுதா சொன்னது…

நேற்றே படித்து விட்டு சென்றேன்..
வேலை!

வரிகள் சற்று சாதரனமா யேசிப்பதிலிருந்து விலகுகின்றது
நிழலை விட்டுவிட்டு சுயத்தை அதன் அசலிலிருந்தது வெளிவருகின்றது உங்கள் கவிதை! அருமை கனமானது.

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

நல்லா இருக்குங்க கவிதை.

மண்குதிரை சொன்னது…

நல்ல இருக்கு யாத்ரா.

Chandran Rama சொன்னது…

Another one of those mind blowing stuff from you..
I really enjoyed this one..
Pl keep going...
All the best

Sugirtha சொன்னது…

முற்றிலும் புரிந்துகொள்ள நிறைய முறை படித்தேன். ஒவ்வொரு வரியும் மிக ஆழமாய் இருக்கிறது.நல்ல கவிதை.

"உழவன்" "Uzhavan" சொன்னது…

எல்லாம் ஒரு மாயை என்பதை இந்த எழுத்துக்கள் புரியவைக்கின்றன.

இராவணன் சொன்னது…

நல்ல மொழி உங்களுக்கு வாய்க்கப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள்

யாத்ரா சொன்னது…

சேரல், மாதவராஜ், ஆதவா, முத்து, சுந்தர், மண்குதிரை, ஆறுமுகம், சுகிர்தா, உழவன், இலக்குவன் நன்றிங்க அனைவருக்கும்.