ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

கட வுளே



எதுவுமே
ஏதோவொன்றாய் தெரிந்தது
அதது அததுவாகயில்லாமல்
வேறெதுவாகவோ தெரிவதை
எழுதிப்பார்த்தேன்
ஒவ்வொரு மாதிரி
தெரிவதாகச் சொன்னார்கள்
ஒவ்வொருத்தரும்
நல்ல மருத்துவரை அணுக வேண்டும்
முற்றிவிட்டதென முடிவு செய்தேன்

எல்லாவற்றிலும்
ஒன்றே தெரியவாரம்பித்தது
பார்வையையும் பரிசோதனை
செய்ய வேண்டிய நிர்பந்தம்

அந்ததந்த கணத்திலிருக்கும் படி
பணித்தார் ஒருவர்
அகத்திலிருந்த ஒளிப்பதிவுக்கருவி
நிலைக்கண்ணாடி
உடைத்தேன் அனைத்தையும்
ஒன்று பலவாக
பல பலப்பலவாகத் தெரிந்தது
தொடர்ந்த கணங்களால் பிணைக்கப்பட்டு
சபிக்கப்பட்டிருப்பதை
அப்போது தான் உணர்ந்தேன்

சூழ்வான பூமியில்
எது எல்லையற்ற வெளி
வலைப்பின்னல்கள் தெரிகிறது
என் இருப்பு
வலைக்குள்ளிருக்கிறதா வெளியிலிருக்கிறதா
எது உள் எது வெளி
வலை உண்மையா மாயையா

இருப்பது மாயை
இன்மை சாஸ்வதம் என்பவர்களே
இருப்பதை இல்லையென்பது
பிரமையன்றி வேறென்ன

எதுவுமே இல்லாமலிருப்பதெப்படி
எதையுமே ஏன்
புரிய முயற்சிக்கிறேன் என்கிறீர்களே
அறிவைக்கடந்ததென்கிறீர்கள்
அறிவற்ற வெளியில் சஞ்சரிப்பதென்கிறீர்கள்
அறிவற்ற வெளியெனில் அறியாமையிலா
அறிவென்பது அறியாமையா

இருப்பு இன்மை மாயை
இதெல்லாம்
இருப்பதா
இருப்பது போலிருப்பதா
கட வுளே காப்பாற்று,,,,,,,,,,,,,,

8 கருத்துகள்:

ஆதவா சொன்னது…

ரொம்ப நல்லா இருக்குங்க.. சுயத்தை நோண்டும் கேள்விகள்!!!

இல்லாத ஒன்றிடம் ஏன் இருப்பதைக் கேட்கறீங்க???
இல்லாம இருப்பதை இருப்பதாக கூறுவதும் பிரமையன்றோ?
இருந்தும் இல்லாமலிருப்பதைக் காட்டிலும் இல்லாமல் இருந்து இருப்பதாகக் கூறி நமக்குள்ளேயே நம்பிக்கை வளர்த்துக் கொள்ளுகிறோமா?

இல்லை,

அறிவுள்ள வெளியில் அறியாமல் அறிவைத் தேடும் அறியாமையா?

தத்துவஞானிக்கு வாழ்த்துக்கள்!!!

"உழவன்" "Uzhavan" சொன்னது…

மானுட புரிதலை நோக்கிய இந்த "கடவுளே" பயணம் மிக அருமை.

Chandran Rama சொன்னது…

இருப்பு இன்மை மாயை
இதெல்லாம்
இருப்பதா
இருப்பது போலிருப்பதா
கட வுளே காப்பாற்று,,,,,

Or.. is this state of mind is what self realization is all about...
I really enjoyed reading many times over and over and then I realized that this poem needs to be continued..... rather then ending it..... for the sake of ending it..
What do you say...?

நந்தாகுமாரன் சொன்னது…

கருணையில்லாமல் கொஞ்சம் செதுக்கினால் இது ஒரு அற்புதக் கவிதையாக உருப்பெறும்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

அருமை!
கிட்டத்தட்ட இதே போன்றதொரு குழப்பநிலையில் சஞ்சரிக்கும் இன்னொருவன் நான்.
நானே சொல்வது போன்றிருந்தது.
-ப்ரியமுடன்
சேரல்

மண்குதிரை சொன்னது…

நேற்றே வாசித்துவிட்டேன். பின்னூட்டம் இட முடியவில்லை.

யாத்ரா நடை மாறியிருப்பது போல தெரிகிறது. பெரிய குழப்பம் எனக்கும்தான்.

யாத்ரா சொன்னது…

ஆதவா, உழவன், ஆறுமுகம், நந்தா, சேரல், மண்குதிரை அனைவருக்கும் நன்றி

யாத்ரா சொன்னது…

yes arumugam, this is endless.

ஆமாம் மண்குதிரை, அப்படித் தான் தெரிகிறது.