செவ்வாய், 7 ஏப்ரல், 2009

அவிழ்க்கவியலாத முடிச்சுகள்



கொசுவர்த்திச்சுருள் தீரப்போகிறது
நாவரள பிரக்ஞையின்றி
தேக்கிய எச்சிலை விழுங்கியிருக்கிறேன்
கழுத்து வலிக்க சற்று நிமிர்ந்து படுத்திருக்கிறேன்
மூத்திரம் அடக்கவியலாது கழித்து வந்தேன்
வேர்க்கடலையும் தீரப்போகிறது
இவனின் வருகை ஒவ்வாததோ
சாளர நிழல் வரையறுத்திருந்த
இடத்தையும் தாண்டி நகரப்போகிறது
இவ்விளம்பரம் வரக்கூடாதென நினைத்திருந்தேன்
இந்த வர்ணனையாளரும் கூட
பதட்டமாயிருக்கிறது
சேவாக் ஆட்டமிழந்துவிடுவாரென

9 கருத்துகள்:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

ரசித்தேன் நண்பரே!

உயிரோசையில் வெளிவந்திருக்கும் 'வெளியில் நல்ல மழை' என்ற உங்கள் கவிதை அருமை! வாழ்த்துகள்!

பின்குறிப்பு : என்னிரு கவிதைகளும் இந்த வாரம் உயிரோசையில் வெளிவந்திருக்கின்றன.

-ப்ரியமுடன்
சேரல்

பெயரில்லா சொன்னது…

இப்படி நாங்களும் இருந்திருக்கோம்ல..

மண்குதிரை சொன்னது…

//சாளர நிழல் வரையறுத்திருந்த
இடத்தையும் தாண்டி நகரப்போகிறது
இவ்விளம்பரம் வரக்கூடாதென நினைத்திருந்தேன்//

நல்ல துட்பமான பதிவு யாத்ரா

ரசித்தேன்.

யாத்ரா சொன்னது…

சேரல், பெயரிலி, மண்குதிரை நன்றிங்க அனைவருக்கும்

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

ஹாஹாஹா! இம்மாதிரி நிறைய முடிச்சுகள் இருக்கின்றன நண்பா!

anujanya சொன்னது…

நடப்பதுதான். நல்லா இருக்கு.

அனுஜன்யா

யாத்ரா சொன்னது…

ஆமாம் நிறைய முடிச்சுகள், இந்த அழுத்தம் தாங்க முடியாமல் சில நாட்களில் மேட்ச் பார்ப்பதையே தவிர்த்துவிடுவேன் ipl t20 வேறு வரப்போகிறது.

சுந்தர்ஜி, அனுஜன்யா நன்றிங்க

Ashok D சொன்னது…

ம்ம்ம்ம்
நல்லாயிருக்கு

யாத்ரா சொன்னது…

நன்றிங்க அசோக்