ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

நிழல்கள்

மின்தடை
சாளர விளிம்பிலிருந்த
மெழுகேற்றி படுக்க
மெழுகின் நிழல் கரைகிறது
அறை விதானத்தில் நிழல்கள்
உறைந்த மின்விசிறி
கொடில் கயிறின் உள்ளாடை
மின்கம்பி பறவையாய்
குழல்விளக்கின் விறைத்த குறி
குண்டுபல்ப்பின் பருத்த முலை
ஊஞ்சல் கம்பியின் நிழல்
தொங்கும் தூக்குக்கயிறாய்
பரண்பொருள் நிழலில்
கணமொரு உருவம்
சுவரில்
என் நிழலை உற்று நோக்கினேன்
வராமலிருந்திருக்கலாம் மின்சாரம்
தடங்கலுக்கு வருந்துகிறேன்

12 கருத்துகள்:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

யதார்த்தமான உணர்வு. ரசித்தேன்.

-ப்ரியமுடன்
சேரல்

ஆதவா சொன்னது…

வெகு அற்புதமா இருக்கு!!! உணர்வுமிகுந்த கவிதை...

குறி, முலை போன்றவற்றிற்கு உவமைச் சொற்களை ரசித்தேன்!!

ஆ.சுதா சொன்னது…

உணர்வு கரைந்திருக்கும் கவிதை
அருமை.

மாதவராஜ் சொன்னது…

உங்கள் ஒவ்வொரு கவிதையும் ஒரு அர்த்தத்தில் இருப்பினும், தனிமையைத் தேடும் தவிப்பின் குரல்
எல்லாவற்றுக்குள்ளும் இழையோடுவதாகப் படுகிறது.
வாழ்த்துக்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

நல்லா இருக்குங்க.

Chandran Rama சொன்னது…

Personified thoughts with a hint of abstract realities..!
Undoubtedly a well composed poem...
Congrats again..

anujanya சொன்னது…

"மெழுகின் நிழல் கரைகிறது" - நல்லா இருக்கு. போலவே சில உவமைகளும் :)

அனுஜன்யா

ச.முத்துவேல் சொன்னது…

/பரண்பொருள் நிழலில்
கணமொரு உருவம்/
இதுதான் மையமென உணர்கிறேன்.சரியா?இதோடு நின்றுவிடவில்லை என்பதும் உணரமுடிகிறது.

/வராமலிருந்திருக்கலாம் மின்சாரம்/
ஆமாம்,இன்னும் சில கவிதைகள் இதையொட்டி எழுதியிருப்பீர்களே!

யாத்ரா சொன்னது…

சேரல், ஆதவா, முத்து, மாதவராஜ், சுந்தர், ஆறுமுகம், அனுஜன்யா, முத்துவேல் அனைவருக்கும் நன்றிங்க

Ashok D சொன்னது…

ஹஹ்ஹஹ்ஹஹஹ்

இதுதான் பின்நவினத்துவக் கவிதையா?

நல்லாயிருக்கு

யாத்ரா சொன்னது…

நன்றிங்க அசோக்

Unknown சொன்னது…

ungalin kathaikali kavathi endru mozhipeyathrthal thavaru.mannthin mozhiku kavithai endru peyar ilai.unarurauvam antro nin elluthukal.

with love
ESWARIRA.