புதன், 1 ஏப்ரல், 2009

எதுவுமே நினைவிலிருப்பதில்லை எல்லாமே நினைவிலிருக்கிறது



எதுவுமே நினைவிலிருப்பதில்லை
எல்லாமே நினைவிலிருக்கிறது
எதுவும் செய்வதற்கில்லை
மறப்பதற்கும்
நினைவிலிருத்துவதற்கும்
பிரயத்தனங்களேதுமில்லை
புனித நதிக்கும்
நரகல் மிதக்கும் சாக்கடைக்கும்
கிளிக்கும் கழுகிற்கும்
நாய்க்கும் நரிக்கும்
திறந்தே கிடக்கிறது
உணர்கொம்புகளை வெட்டி
எரியூட்டியாகிவிட்டது
புலன்களை மழுங்க
காயடித்தாகிவிட்டது
நிகழ்வுகள் சொற்களாய் பதிவதற்குள்
துரத்தி விழுங்குகிறது சர்ப்பம்
நீங்கள் காறி உமிழலாம்
சங்கிலியில் பிணைத்து
சாட்டையில் விளாசலாம்
முகத்தில் சிறுநீர் கழிக்கலாம்
மலம் பூசலாம்
எதிர்ப்பேதுமில்லை
எதுவுமே நினைவிலிருப்பதில்லை
எல்லாமே தேவையாயிருக்கிறது
எதற்கும் தகுதியுடையவனே
ஏனெனில்
எல்லாமே நினைவிலிருக்கிறது

7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//உணர்கொம்புகளை வெட்டி
எரியூட்டியாகிவிட்டது
புலன்களை மழுங்க
காயடித்தாகிவிட்டது//

ஆம். உண்மைதான்.

நல்ல கவிதை.

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

குழப்பமா இருக்கு :)

மண்குதிரை சொன்னது…

குழப்பமா இருக்கு :)

aamaam.

Chandran Rama சொன்னது…

I guess this one is a bit mind twister..!

I was able to gather the contents to quite some extend after repeated readings..

I rather enjoyed reading that many times..

anujanya சொன்னது…

பிறழ்வு?

butterfly Surya சொன்னது…

அருமை. அருமை.

வாழ்த்துகள்.

யாத்ரா சொன்னது…

இந்த கவிதைக்கு பல பரிமாணங்கள் இருக்கு. குழப்பமான பிறழ்ந்த மனோநிலையில் தான் இந்த கவிதை இருக்கு. இதனோட சில பரிமாணங்களை விளக்க முயல்கிறேன்.

// எதுவுமே நினைவிலிருப்பதில்லை
எல்லாமே நினைவிலிருக்கிறது
எதுவும் செய்வதற்கில்லை
மறப்பதற்கும்
நினைவிலிருத்துவதற்கும்
பிரயத்தனங்களேதுமில்லை//

ஒவ்வொரு கணத்திலேயும் மனசு ஒவ்வொரு மாதிரி இருக்கு. இதற்கு என்னால் எதுவும் செய்ய முடியல, செய்யவும் விரும்பல

//புனித நதிக்கும்
நரகல் மிதக்கும் சாக்கடைக்கும்
கிளிக்கும் கழுகிற்கும்
நாய்க்கும் நரிக்கும்
திறந்தே கிடக்கிறது//

மனசு மேற்சொன்னதெல்லாம் (படிமம்) வருவதற்கு திறந்தே இருக்கு

//உணர்கொம்புகளை வெட்டி
எரியூட்டியாகிவிட்டது
புலன்களை மழுங்க
காயடித்தாகிவிட்டது
நிகழ்வுகள் சொற்களாய் பதிவதற்குள்
துரத்தி விழுங்குகிறது சர்ப்பம்//

இப்படியான வாழ்க்கை வாழ்ந்து வாழ்ந்து என் மென்னுணர்வுகளையேல்லாம் இழந்துட்டேன், அப்படி இருந்தாத்தான் வாழமுடியும்னு நினைச்சி இரக்கமில்லாதவனாயிட்டேன். இதுக்கு இனனொரு பக்கம், நீங்க என்ன வேணும்னாலும் செய்யலாம் என் சொரணையையெல்லாம் எரிச்சிட்டேன் காயடிச்சிட்டேன், அல்லது இந்த வாழ்க்கை என்னை அப்படி மாத்திடுச்சி. எதுவுமே மனசுக்குள் பதிந்து ஏதாவது செய்யனும்னு நினைக்கறதுக்குள்ள எதையும் யோசிக்கறதுக்கு இடம் கொடுக்காம இந்த சர்ப்ப வாழ்க்கையால விழுங்கப்படறேன்.

//நீங்கள் காறி உமிழலாம்
சங்கிலியில் பிணைத்து
சாட்டையில் விளாசலாம்
முகத்தில் சிறுநீர் கழிக்கலாம்
மலம் பூசலாம்
எதிர்ப்பேதுமில்லை
எதுவுமே நினைவிலிருப்பதில்லை
எல்லாமே தேவையாயிருக்கிறது
எதற்கும் தகுதியுடையவனே
ஏனெனில்
எல்லாமே நினைவிலிருக்கிறது//

இப்படி வாழ்வதினால பலரோட தூற்றுதலுக்கு உள்ளாகிறேன், அதுக்கெல்லாம் எதிர்க்கவுமில்லை, எல்லாத்தையும் துடைச்சி தூரப்போட்டுட்டு போய்க்கிட்டேயிருக்கேன்.

சில நேரங்கள்ல அப்படி முடியல, குற்றவுணர்வு கொள்ளுது. இன்னும் மேல மேல என்னை அவமானப்படுத்துங்க, அதெல்லாம் எனக்கு தேவை, இதுக்கெல்லாம் தகுதியானவன் தான் அப்படின்னு நினைச்சிக்கிறேன். நான் செஞ்ச மறக்க முடியாத பாவங்களோட குற்றவுணர்வுல இருந்து மீள்வதற்கு இந்த மாதிரி அவமானங்கள் தேவைப்படுது.

இது இந்த கவிதையோட ஒரு பரிமாணம். இந்த பார்வை மட்டுமே தொனிக்கறா மாதிரி தான் முதல்ல எழுதினேன். இதல பன்முகத்தன்மைக்கு சாத்தியங்கள் அதிகமா இருப்பதா தெரிஞ்சதனால சில திருத்தங்கள் செஞ்சதால அது குழப்பமாவும் பிறழ்ந்த மனநிலையிலிருப்பதாகவும் தோற்றமளிக்குது. அதுவும் ஒரு வகையில் உண்மை தான். இன்னும் வேறு வேறு மாதிரியாகவெல்லாம் கூட அர்த்தங்கள் தெரியுது.


வேலன் அண்ணாச்சி, சுந்தர் சார், மண்குதிரை,ஆறுமுகம், உலவு.காம்,அனுஜன்யா, வண்ணத்துப்பூச்சியார் அனைவருக்கும் நன்றி