தாயம் சீக்கிரத்தில் விழாது
அஞ்சாங்காயில் போய்விடும்
பல்லாங்குழி கொப்பரை வராது
ஒற்றையா ரெட்டையா
யூகம் தவறாகவேயிருக்கும்
சிவப்பிற்கு துணை விழாத கேரம்
எப்போதும் கறுப்புக் காய்கள் தானெனக்கு
சதுரங்கத்திற்கு தந்திரம் பற்றாது
சீட்டுக்கும் அதுவே
புலம் பெயர்ந்த
சக ஆட்டக்காரிகளின்
பட்டப்பெயர்கள் நிழலாட
அனிச்சையாய் இதழ் மலர
சூடான தேனீருடன்
சாய்வு நாற்காலியில்,,,,,,,,,,,
வெளியில் நல்ல மழை
வெள்ளி, 20 மார்ச், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
12 கருத்துகள்:
/அனிச்சையாய் இதழ் மலர/
இக்கவிதையைப் படிக்க எனக்கும் ,மேற்கண்ட வரிகளின் அனுபவம்.
நல்லாருக்குங்க.
வாங்க முத்துவேல், பகிர்வுக்கு நன்றி
சிறுவயதில் நான் ஆடிய விளையாட்டுகளை நினைவுபடுத்தியது உங்கள் கவிதை..
வாழ்த்துகள்
சிவப்பிற்கு துணை விழாத கேரம்
எப்போதும் கறுப்புக் காய்கள் தானெனக்கு///
நமக்கு கேரம்னாலே ரொம்ப பிடிச்ச விளையாட்டு... கவிதைகளில் கேரத்தை பற்றி முதல் தடவை படிக்கிறேன்...
கவிதை பிடித்திருக்கிறது.
உள்ளே நானிருந்தேன்
வெளியில் நல்ல மழை
ஒரு சொரூப நிலை
என்ற நகுலனின் கவிதை ஞாபகத்திற்கு வந்தது.
நன்றி ஷீ நிசி
சுந்தர் சார் நன்றி
நினைவுப்பாதை, நவீனன் டைரி மற்றும் நகுலன் கவிதைகள் தொகுப்பு எனக்குள் ஏற்படுத்திய பாதிப்புகள் அனேகம், அதன் நீட்சியாகவுமிருக்கலாம்,இல்லாத சுசிலாவுடன் செத்துக்கொண்டே வாழ்ந்தே போய்ச்சேர்ந்தார், இவங்களையெல்லாம் பார்க்கிற கொடுப்பினை வாய்க்கவில்லையே என்பது தான் குறை
இன்னும் நாய்கள், வாக்குமூலம் மற்றும் இவர்கள் புத்தக அலமாரியில் காத்திருக்கிறது வாசிப்புக்காக
ஆதவா வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
எத்தனை வயது உங்களுக்கு, ஆரம்பமே இப்படியிருக்கிறதென்றால்...!
வயதை விடுங்கள் தமிழன், இயற்பெயரே தெரியக்கூடாதென்றிருந்தேன், தெரியும்படி நேர்ந்துவிட்டது,
எழுத்தில் தெரியவில்லையா வயது
தமிழ் நம்மை இணைத்திருக்கிறது,
தங்களின் தோழமைக்கு நன்றி
யாத்ரா, உயிரோசையில் வந்தபிறகு மீண்டும் ஊன்றிப் படித்துப்பார்த்தேன். இப்போது இக்கவிதை, எனக்குப் பலசூழல்களில் பொருந்துவதாக, பன்முகத்தன்மையோடு தெரிகிறது. நான் இன்னும் நிறைய தேற வேண்டும்.
நன்றிங்க முத்துவேல்
ம்ம்ம்ம்.
மிக பிடித்த கவிதை.
கருத்துரையிடுக