புதன், 4 மார்ச், 2009

போடா மயிரு

போடா மயிரு

போகிற வருகிற பயணிக்கிற பிரதேசமெங்கும்
பள்ளிச்சீருடையில் ரிப்பன் ரெட்டைப்பின்னல்
தட்டச்சுப்பயிலகத்தில் புட்டமுரசும் ஒற்றைப்பின்னல்
இரவு அங்கி ஏற்றியகொண்டை குடம் தெருக்குழாய்
தலைகுளித்த தூவாலைமுடிப்பு
தாவணி தலைகுளித்து முடியாதகுழல் கோயில்
திரையரங்கு அட்டைககுழாய் தேனீர்ச்சட்டை பாப்கத்தரிப்பு
வீட்டுவாசல் சிக்கலெடுத்து குழலுலர்த்தியபடி
மதிய சோத்துமூட்டை தயிர்சாதம் மயிரு
பூசாத சுவர் பொந்தில் நரைத்தும் நரைக்காத சுருள்கள்
இணையமையம் தட்டச்சுவிசைப்பலகையில
உதிர்ந்திருக்கும் நீண்ட ஒற்றைக்கற்றை
பாஞ்சாலி கூந்தல் இடைவரை
திரும்பிப்பார்ப்பதற்குள் திருப்பதி காணிக்கை
மாவிலைத்தோரணமாய் கத்தரித்த நெற்றிமுடி
வல இட நடு வகிடு வகிடின்றி
தோள்வரை முதுகுகீழ் இடை புட்டம் அதற்கும் கீழ்
தார்ச்சாலையாய் மலைப்பாதையாய்
வண்ணம்பூசிய கண்டிஷனர் பளபளப்பு
முடியாத குழலை அளையும் காற்றின் கரங்கள்
சுதந்திர கொடி சே மயிர்
பிரெஞ்சுப்புரட்சி மன்னிக்கவும் பின்னமைப்பு
குதிரைவால் பக்கக்கொண்டை
நாய் கன்று ஆடு பூனைக்குட்டியை நீவிவிடுவது போலன்றி
கூந்தல் வருடல் எளிய சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டிருக்கிறது
பின்னாமல் கிளிப் போட்டிருந்த இருசக்கர வாகனம்
சமீபமாய் வாகனத்தைச் செலுத்தி
கவனியுங்கள் மரியாதையுடன்
உங்க முடி அழகா இருக்குங்க என்றதற்கு
போடா மயிரு
செருப்பு பிஞ்சிரும்

8 கருத்துகள்:

Karthikeyan G சொன்னது…

நல்ல இருக்கு.

அனால் இன்னும் கொஞ்சம் எடிட்டிங் தேவையோ?

ஆதவா சொன்னது…

ஆரம்பத்திலிருந்து நல்லா வந்துகிட்டு இருந்தீங்க... அப்பறம் கடைசியில ஒரு யூ டர்ன் போட்டுட்டீங்க.. எனிவே கவிதை அழகு.. தலைப்பு மட்டும் எடிட் செய்யவேனும்..

அப்படியே நீங்கள் அடுக்கியவற்றை எண்ணும்பொழுது ஆச்சரியம் எனக்குள்......

(என் பதிவுக்கு வந்தமைக்கு நன்றி யாத்ரா.. அடிக்கடி வாருங்கள்!!!. நான் உங்களை பின்பற்றுகிறேன்.... )

யாத்ரா சொன்னது…

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி, கார்த்தி ஆதவா வருக வருக,

அனால் இன்னும் கொஞ்சம் எடிட்டிங் தேவையோ?

நண்பர் கார்த்தி கவிதையை எடிட் செய்து வெளியிட்டால் மகிழ்வேன்,

அப்படியே நீங்கள் அடுக்கியவற்றை எண்ணும்பொழுது ஆச்சரியம் எனக்குள்......

என்ன ஆச்சர்யம் ஆதவா,

அந்த யூ டர்ன் சாருவையெல்லாம் படிக்கிறேன் இல்ல, தவிர்க்கமுடியல, என்ன செய்ய

Karthikeyan G சொன்னது…

//நண்பர் கார்த்தி கவிதையை எடிட் செய்து வெளியிட்டால் மகிழ்வேன்,
//

வேண்டாமே Pls.

கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…

நீங்கள் எழுதியதை மாற்ற வேண்டாம் நண்பா.. மிக அழகாக உள்ளது.. ஆதவா சொன்னதைப்போல் தலைப்பை மட்டும் கொஞ்சம் மாற்றினால் போதும்.. நல்ல கவிதை

யாத்ரா சொன்னது…

வாங்க கார்த்திகைப்பாணடியன், வருகைக்கு நன்றி

அந்த தலைப்பு அந்த அனுபவங்களுக்காக அவன் பெற்ற பொக்கிஷம், அதன் மூலமே அவள் அவனுள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அந்நிகழ்வின் தடயமாய்

பெயரில்லா சொன்னது…

கவிதை தன்னளவில் அழகாக இருக்கிறது. மழிக்கவும் நீட்டவும் வேண்டாம். அதே போல் தலைப்பு மிகப் பொருத்தம்.

யாத்ரா சொன்னது…

வடகரை வேலன் அவர்களுக்கு, வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மகிழ்ச்சியாயிருக்கிறது,