திங்கள், 2 மார்ச், 2009

வள்ளி புதுக்கோட்டையில்

வள்ளி புதுக்கோட்டையில்

கவிதா புல்லரம்பாக்கத்தில்
ஐந்தாம் வகுப்பில் பார்த்தது
செல்லம்மா ஆரணியில்
நாகம்மா பினேஸ்பாளையத்தில்
கீதா வில்லிவாக்கத்தில்
புவனா மயிலாப்பூரில்
ராதிகா பேர்னாம்பேட்டில்
தமிழ்வாணி சிங்கபெருமாள்கோயிலில்
கயல்விழி ஊத்துக்கோட்டையில்
பூர்ணிமா கோயம்புத்தூரில்
சுபாஷினி காசிமேட்டில்
மேனகா அடுத்ததற்கு அடுத்த தெருவில்
கல்யாணி இதே தெருவின் கடைசிவீட்டில்
தேவிகா அலுவலக சாலையிலுள்ள வீட்டில்
சாவித்ரி மேம்பாலத்தை ஒட்டிய குடிசைப்பகுதியில்
ஓவியா துளசி திரையரங்கு பக்கத்துதெருவில்
மங்கையர்க்கரசி திருநீர்மலையில்
இன்னும் பெயர் தெரியாத பெண்கள்
பெயர் தெரியாத ஊர்களில்
வாக்கப்பட்டு போக
இவர்களில் ஒருத்தியைக்கூட
மணக்க இயலாத துரதிஷ்டநிலை
பார்கவி எந்த ஊருக்கு போவாளோ

கருத்துகள் இல்லை: