செவ்வாய், 10 மார்ச், 2009

பாசாங்கு

பாசாங்கு

என்ன பேசுவதென்றே தெரியவில்லை
நெடுநேரம் மௌனப்பிடியுள்
தொடங்கிய உரையாடல்களையும்
ஒரு சொல்லில் கடக்க
என்ன நினைத்தானோ
சொல்லிக்கொள்ளாமல் கிளம்பிவிட்டான்
புன்னகைகள் கைக்குலுக்கல்கள்
நலம் விசாரிப்புகள் முகஸ்துதிகள்
விவாதங்கள்
நினைவைத்தோண்டுதல் கிளறுதல்
புல்லரிக்கச்செய்தல்
புளகாங்கிதமடையச்செய்தல்
கொஞ்சமேனும் பழகியிருந்திருக்கலாம்
பாசாங்குகளை

2 கருத்துகள்:

ஆதவா சொன்னது…

cilaசிலசமயம் தோணுமே... அட,.. நாம தப்பு பண்றது எப்படின்னு கத்திருக்கணும்... என்று நோவது... அதேமாதிரி... பாசாங்கு செய்யவும் தெரிந்துகொள்ளவேண்டுமோ சில சமயங்கள்???

பிரமாதம்ங்க..... யாத்ரா

yathra சொன்னது…

வாங்க ஆதவா வருகைக்கு நன்றி