திங்கள், 2 மார்ச், 2009

மயானம் செல்லும் வழி

மயானம் செல்லும் வழி

மயானம் எங்கு இருக்கிறது
நேரே சென்று
ஒன்று இரண்டு மூன்று
நான்காவது இடது நிழற்சாலை( நிழலின்றி ) வழிசென்று
பிரதானசாலையின் வலத்தில்
எல்லை முடியும் இடத்தில்
கீழிறங்கும் செம்மண் சாலையில்
அம்புக்குறியுடன் அமரத்தோட்டம்
எதுவும் எளிதில்
அடைந்துவிடுகிற தூரத்திலில்லை
கடும்வெம்மையின் இளைப்பாறுதலுக்கு
குளிர்பானம் அருந்திச்செல்ல உத்தேசம்
இறுதிப்பயணத்தை நடந்தே கடப்பது ஆறுதலளிக்கிறது
சகபயணியின் இறுதி ஊர்வலத்தில்
நாக்கை துருத்தி சீட்டியடித்து
பிரமாதமான அங்க அசைவுகளோடு ஆடி
சகபயணி சாக்கில்
எந்த குறையுமற்று
சகல சடங்குகளுடன்
மனநிறைவாய் அமைந்துவிட்டது
என் இறுதி ஊர்வலம்
தனிமை தன் ஒரு
துணையை இழந்தது,

1 கருத்து:

ஷீ-நிசி சொன்னது…

//தனிமை தன் ஒரு
துணையை இழந்தது,//

ஆஹா! பிரமாதமான வரி!

வாழ்த்துக்கள் நண்பரே!