வியாழன், 26 மார்ச், 2009

சூழ்ந்திருக்கும் புனிதர்கள்



கரப்பான் காதில் சென்று
மூக்கில் வந்து மலக்கிடங்கைவிட
நாற்றமென
பல்லி உள்நாக்கை
துடிப்படங்கும்வரை உள்ளுக்கிழுக்க
நண்டு தேர்ந்தது விழி
எழவு டப்டப்பென்று
உறங்கவிடாது என
இதயத்தின் அருகிருந்து நரி
சர்ப்பத்தின் தலை வாயிலிருந்து
வால் ஆசனவாயில்
மண்புழுவென நரம்புகளைத்
தின்னும் பெயரறியாப் பட்சி
சாளரவிளிம்பில் அணில்
தாழ்ந்த மரக்கிளையில் காகம்
நெடுக குரூரம் பழகிய மூளையை
விரைவாய் செல்லரித்தது
சுவை கொஞ்சம் குறைவென
புழுக்கள்.

7 கருத்துகள்:

மாதவராஜ் சொன்னது…

அடர்த்தியான கவிதையாய் வந்திருக்கிறது.
//மண்புழுவென நரம்புகளைத்
தின்னும் பெயரறியாப் பட்சி//
அதிர வைக்கிறது.

இப்படியான துர்க்கனவுகளாக நாமும் இருக்கிறோம் தானே!

ஒரு நல்ல கனவையும் எழுதுங்கள்.

ச.முத்துவேல் சொன்னது…

நெடுக குரூரம் பழகிய மூளை என்பதுதான் இப்படிப்பட்ட துர்க்கனவுகளுக்குக் காரணம் என்கிறீர்களா?

yathra சொன்னது…

மாதவராஜ் சார் இன்னைக்கு முழுக்க கடுமையான வேலை, அவசரமா பதிவிட்டுட்டு சாப்டு வரேன்,

சூழ்ந்திருக்கும் புனிதர்கள்னு தலைப்பை மாத்தியிருக்கேன்,

நல்ல கனவுகள் நிறைய இருக்கிறது, எழுதுகிறேன், சில சமயம் இப்படியான கனவுகளும்,,,,,
எதற்குமே நான் பொறுப்பல்ல

வாங்க முத்துவேல், தலைப்பை மாத்திட்டேன், மறுபடியும் வாசிச்சு பாருங்க

ஆதவா சொன்னது…

துர்க்கனவுகள் எனக்கும் வருவதுண்டு!!! அதைப் பற்றி சொல்ல இவ்வரிகளே போதாது!!!

ஆதவா சொன்னது…

பொருத்தமான தலைப்புதான்../

ஷீ-நிசி சொன்னது…

வித்தியாசமான கவிதை!

தலைப்பு புதியதாய் உள்ளது!

நல்ல கவி யாத்ரா!

yathra சொன்னது…

நன்றி ஆதவா
நன்றி ஷீ நிசி