சனி, 28 மார்ச், 2009

பெரிய குழந்தையும் சிறிய குழந்தையும்

மழையில் முளைத்த
தற்காலிக வீதி நதியில் விட
கப்பல் வேண்டி கெஞ்சுவாள்
என் கவிதைப் பக்கம் கிழித்து வந்து
டீச்சர் வேடம் அவளுக்கு மிகப்பிடித்தம்
அகரம் தவறாய்ச் சொல்லி பாடம் கற்பேன்
சமயங்களில் நான் தான் தலைசீவி
ரெட்டைக்குடுமியிட வேண்டுமென அடம்
குளிப்பாட்டிட துடைக்க
உள்ளாடை சட்டைப்பாவாடை
பொட்டிட மையிட முகப்பவுடர்
சாக்ஸ் ஷீ அனைத்திற்கும் நான்தான் வேணும்
ஒருநாள் கழுவிவிடவும்
நான் வரவேண்டுமென அழுகை
சதா குற்றப்பத்திரிகை வாசிப்பாள் இவள்
ஒருநாள் என் செல்லம் பொறுக்காது
உச்சக்குரலில்
ஒருநாள் உன்னத்தான் கட்டிக்குவேன்னு நிக்கப்போறா
விஷம் கக்கினாள் சண்டாளி
பொறம்போக்கு பீத்தின்னப்போகுது பார் புத்தி
உங்கப்பன்கிட்ட நீ அப்படித்தான் கேட்டயா
விஷத்திற்கு விஷம்

,,,,,,………///? ? ? ? /; ; ;” ;;;;;;;;;[[[
---- _____ \\\\ \ &&&& ^^^^^6$$4444
2222 *** ((9))0 &7777%%%%%
+++++ ==== ^^^6 ^6666 ^^^66 ###33
Gsdjgfjh nvbsd பாபநாபாஎ
கேதனேகதபோ65,ஹ,,,ஹஇ,,ட்ஹ
$$$$$$$$$$$$$ Yuyuyu @@@@@@2
@#$%^*(&:>?”{} ggeg gefg s d d rgy g g
((( 00000 _------ ))))000 0008888 ^^^^^6666^^^^
)))))) &&& ^^^ 6 4444$$$$ #####!!!!!!! 3@$! %^*+_)(
¨ >>>>>>>:::”’<<””’’>>>>.. bhvj jn hh n
¨ 0000000000000000000000000000000000000000000000000000000000000000000
நாளடைவில் முற்றிலும் பிறழ்ந்துவிட்டாள்
அவளுக்கு செய்ததெல்லாம்
இவளுக்கு செய்துகொண்டு நான்
செல்லக்குட்டி தற்போது விடுதியில் தங்கி
படித்துக்கொண்டிருக்கிறாள்.

8 கருத்துகள்:

ச.முத்துவேல் சொன்னது…

கவிதையில் ஒரு கதை சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைத்தேன்.ஆமோதிப்பதுபோல், labelல் பெயர்கள்.சண்டைபோட்டுக்கொள்ளும் வசவுகள் வித்தியாசமான, உத்தி. நன்று.இனிமையான வெளிப்பாடுகளோடு துவங்கி,சோகமா முடிஞ்சுடுச்சு.

arumugam சொன்னது…

a well balanced poem.. reality in its own forms..
well done..

வடகரை வேலன் சொன்னது…

கொஞ்சம் தவறியிருந்தாலும் வேறு மாதிரி ஆகியிருக்க்கூடிய கவிதை. நல்ல சொற்செட்டுக்களுடன் அற்புதமாக வந்திருக்கிறது.

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க யாத்ரா!

மாதவராஜ் சொன்னது…

தொடர்ந்து அருமையா எழுதிக்கொண்டு வர்றீங்க.
வித்தியாசமான முயற்சியில் அற்புதமாக கூடி வந்திருக்கிறது.

yathra சொன்னது…

நன்றிங்க முத்துவேல்
நன்றிங்க ஆறுமுகம்
நன்றி வடகரை வேலன் ஐயா
நன்றி சுந்தர் சார்
நன்றி மாதவராஜ் சார்

அனுஜன்யா சொன்னது…

கவிதையில் கதை. உத்தி நன்றாக இருக்கு. அசத்துகிறீர்கள்.

அனுஜன்யா

yathra சொன்னது…

நன்றிங்க அனுஜன்யா