திங்கள், 2 மார்ச், 2009

பிறழ்வு

பிறழ்வு


என்னவென்று தெரியவில்லை
அழுத்தமாய் கனக்கிறது
சிகரெட்டின் தேவையைப் பற்றிய உணர்வு
ஏதேதோ துண்டுத்துண்டாய் நினைவில்
குடித்து வெகுநாளாயிற்று
தவறாக நினைத்திருப்பாள்
சற்று வெளிப்படையாகவே பார்த்துக்கொண்டிருந்தேன்
தேனீர்க்கடையில் காலை சுற்றிய நாயை துரத்த
அந்த பிச்சைக்காரர் ரொட்டித்துண்டு போட்டார்
வெகுநேர்த்தியான பின்னல்களுடனான
சிலந்தி வலையை கிழித்தெறியும்
மூர்க்க்ம் அலைக்கழிக்கிறது,
வாகன கைப்பிடியில்
சருகென கையிலெடுக்க ஓனான்
விடியாத அதிகாலை மங்கிய வெளிச்சத்தில்
வாகனத்திற்கு குறுக்கே
பாம்பை பின்தொடர்ந்து கீரி
படுக்கைக்கருகே பல்லியின் அறுந்த வால்
பாழாய்ப்போன தவளைச் சத்தம் வேறு
சாளரக்கம்பியில் நின்று
பார்த்துச் சென்றது
வழக்கமான அணில்
பரணில் உருளும் சப்தம்
எப்படியோ உறங்கிப்போனேன்
இன்று புகைப்பிடிக்கையில்
ரொட்டித்துண்டோடு காததிருந்தேன்
அந்த நாயின் வருகையை எதிர்நோக்கி

1 கருத்து:

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

இயலுமெனில் எழுத்து / தட்டச்சுப் பிழைகளைச் சரி செய்யுங்கள். வாசிக்கத் தடங்கலாயிருக்கிறது.