திங்கள், 16 மார்ச், 2009

சூன்யப்பாதை

சூன்யப்பாதை

களவானியாய் பார்வைகளுக்கிடையில்
கண்டும் காணாமல் மென்னகை படரவிட்டு
நடையில் வலிந்து வரவழைக்கப்பட்ட கவனத்துடன்
காற்றைச் செல்லமாய்ச் சினந்து
கன்னச்சிகையை காதோரம் செருகி
இழுத்துவிட்டுக்கொள்ள தோள் ரவிக்கை விளிம்பும்
சரிசெய்ய முந்தானையும்
விரல்களின் வெறுமைக்கு துணையாக
கொலுசொலிக்கும் பரவும் சுகந்தத்திற்கும்
உன்னை உன் நிழல் பின்தொடர்வதில்
கர்வமுனக்கு
யட்சியின் சகல அறிகுறிகள்
சூன்யத்தின் பாதையில்
திரும்பிப்பார்த்தலின் கணங்களுக்காய்
நின் தடத்தை மிதிக்காது பின்தொடர்கிறேன்
வந்த வழியும்
திரும்பும் வழியும்
தெளிவற்றிருக்க
நீயுமில்லை
நின் பாதச்சுவடுமில்லை.

6 கருத்துகள்:

ஆதவா சொன்னது…

என்னங்க பிரமையா?? அது அப்படித்தான் இருக்கும்.. (ஓவரா கனவு காணாதீங்கன்னு சொல்றது!!) கவிதை அழகா இருக்கு..

மென்னகை,
கன்னச் சிகை போன்ற சொற்கள் அழகு

யாத்ரா சொன்னது…

வாங்க ஆதவா, அப்படித்தான்

பெயரில்லா சொன்னது…

கன்னச்சிகையை காதோரம் செருகி//

இந்த வார்த்தை ரொம்ப நல்லாருக்கு...

நீங்கள் எழுதியிருக்கற சூழ்நிலை கவிதையில் மிக அழகாக வர்ணிக்கபட்டிருக்கிறது..

நல்லாருக்கு யாத்ரா!

மாதவராஜ் சொன்னது…

கவிதை நல்லா வந்திருக்கு... வாழ்த்துக்கள்.

குப்பன்.யாஹூ சொன்னது…

கவிதை அருமை, வாழ்த்துக்கள்

யாத்ரா சொன்னது…

ஷீ நிசி, மாதவராஜ் ஐயா, குப்பன் யாஹீ வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி