திங்கள், 2 மார்ச், 2009

வீடு

வீடு

நெடுங்காலமாய்
அந்த சாலை வழியில்
பூட்டியே கிடக்கிறது
நிராதரவாய் ஒரு வீடு
சிகரெட் பற்ற வைத்து
படியில் அமர்ந்துவிட்டேன்
திண்ணையில் பிள்ளைகள்
கல்லாங்காய் விளையாடிக்கொணடு
வாசலில் நொண்டியாடி
வீட்டுப்பெண்கள் படிகளில் அமர்ந்து
வாசல் கோலம் பற்றி பேசி
வாசலில் பந்தல் கூட
பெண்பிள்ளை சமைந்திருக்கலாம்
தாத்தா தினசரியுடன்
பாட்டி பாக்கு தட்டிக்கொண்டு
மரண ஓலம் அடங்கி
கழுவப்பட்ட ஈரம் வாசலில்
சித்தப்பா இரவுப்பணி முடிந்து
புங்கமரத்தடியில்
கயிறு கட்டிலில்
தாயக்கட்டை சத்தம் கூட
தீபாவளி பட்டாசு ஒளி(லி)
பொங்கலோ பொங்கல் குரல்கள்
லயா குட்டி ஆட
தாணு பாட
மற்ற குழந்தைகள் கும்மாளமிட,,,,,,,,,,,,,
இப்படியெல்லாம்
மனதில் ஓடிக்கொண்டிருப்பதை
இந்த வீடு பார்த்திருக்கும்,

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வீட்டின் நிகழ்வுகளை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்!

கவிதையை இன்னும் கொஞ்சம் பிரித்து எழுதியிருக்கலாம் என்பது என் கருத்து!

வாழ்த்துக்கள் நண்பரே!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

அழகு!

-ப்ரியமுடன்
சேரல்

யாத்ரா சொன்னது…

நன்றி ஷீ நிசி, சேரல்