சனி, 21 மார்ச், 2009

நவீன விருட்சம் வலைப்பூவில் அழகியசிங்கர் அவர்களால் தொகுக்கப்பட்ட என் கவிதைகள் ( நான்கு கவிதைகள் – செ. செந்தில்வேல் )

எஸ்.வைத்தீஸ்வரன், ஞானக்கூத்தன், ஆத்மாநாம்,,,,,, என எப்பேர்ப்பட்ட படைப்பாளிகள் புழங்கிய இலக்கியப் பாரம்பர்யமிக்க சிற்றிதழ் நவீனவிருட்சம். http://navinavirutcham.blogspot.com/

இதழ்களுக்கு அனுப்ப வேண்டுமா கவிதைகளை என்பது கூட தெரியாமலிருந்த எனக்கு, ச.முத்துவேல், அனுஜன்யா ( இவர்கள் கவிதைளும் நவீனவிருட்சத்தில் வெளிவந்திருக்கிறது ) மற்றும் ஆதவா அவர்கள் (மிக்க நன்றி) நினைவுறுத்தி அனுப்பச்சொல்லினர்.( நான் மிகவும் நேசிப்பவர்கள் )
நானும் அனுப்ப மதிப்பிற்குரிய எழுத்தாளர், நவீனவிருட்சம் ஆசிரியர் அழசியசிங்கர் அவர்கள் தன் வலைப்பூவில் வெளியிட்டு நெகிழ்விலாழ்த்திவிட்டார். மிக்க நன்றி,,,,,,,

என் அழைக்கும் பிம்பத்தையும், தலைப்பு சூடாத கவிதாவையும் என் இம்மாத வலைப்பதிவு காப்பபகத்திலும்,
பின்வரும் முகவரியிலும் சுட்டி வாசிக்கலாம்.

. http://navinavirutcham.blogspot.com/

என்னுடைய இயற்பெயரில் வெளியிட்டு விட்டார், ( செ.செந்தில்வேல் ) , என் இணைய நண்பர்கள் என் இயற்பெயரை அறியும்படி ஆகிவிட்டது. இதுநாள் வரை காத்துவந்த மர்மம் உடைபட்டுவிட்டது.

நேற்று நான் மிகவும் நேசிக்கும் மதிக்கும் படைப்பாளிகளுள் ஒருவர் ஜ்யோவ்ராம்சுந்தர் அவர்கள் தன்னுடைய வலைப்பதிவில் என்னை அறிமுகப்படுத்தி நெகிழவைத்தார். அதற்கான நன்றிக்கடிதத்தையும் பின்னூட்டத்தில் காணலாம்.

http://jyovramsundar.blogspot.com/

நெகிழ்ச்சியில் என்னை உறைய வைக்கும் பெருமதிப்பிற்கும் அன்பிற்குமுரிய எழுத்தாளர் மாதவராஜ் ஐயா அவர்கள் தொடர்ந்து வாசித்து கருத்துக்கள் சொல்லி உற்சாகப்படுத்திவருகிறார்.

மற்றும் பலர் வாசித்து வாழ்த்தி குறைகளைச் சுட்டி ஊக்கப்படுத்தி வருகிறார்கள் (எல்லோர் பெயரையும் குறிப்பிடவேண்டும்). எட்டு மாதகாலமாக வலைப்பூ எப்படி துவங்குவதென்றும் ( அப்போ தான் தெரியும் இப்படியொன்னு இருப்பதே ) பின்னூட்டம் எப்படியிடுவதென்றும் தெரியாமல் வாசித்து வந்திருக்கிறேன். கணிணியும் தட்டச்சும் (அறைகுறை) ஒரு வருடமாகத் தான் தெரியும் ( கற்றுக்கொடுத்தவர்களுக்கு இந்நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் )

இதுவரை வாசித்தவர்களுக்கும், பின்னூட்டமிட்டமிட்டு உற்சாகப்படுத்தியவர்களுக்கும், இனி என் வலைப்பூவிற்கு வரப்போகிறவர்களுக்கும்

மிக்க நன்றி,,,,,,,,,,,,,,,,,,

18 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் செந்தில்வேல்.

யாத்ரா சொன்னது…

வடகரை வேலன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி

மாதவராஜ் சொன்னது…

அன்புத் தம்பி யாத்ரா!

நவீனவிருட்சத்தில் தங்கள் கவிதைகள் வந்தமைக்கு வாழ்த்துக்கள். தாங்கள் மென்மேலும் வளர்வீர்கள்.

யாத்ரா சொன்னது…

மாதவராஜ் சார் மிக்க நன்றி

தமிழன்-கறுப்பி... சொன்னது…

வாழ்த்துக்கள் யாத்ரா(செந்தில்வேல்)!

யாத்ரா சொன்னது…

தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தமிழன் அவர்களே

ஆ.சுதா சொன்னது…

வாழ்த்துக்கள் யாத்ரா என்கின்ற செந்தில்வேல்

ஆதவா சொன்னது…

வாழ்த்துக்கள் யாத்ரா... உங்கள் எழுத்துக்கள் நிச்சயமாக பிரசுரிக்கப்படவேண்டியவை!!!

ச.முத்துவேல் சொன்னது…

என் மனமும் நெகிழ்ந்துதான்விட்டது யாத்ரா.ஆரம்பமேஅசத்தல்.
தகுதியுடையவர் நீங்கள்.எனவே,
தயக்கம் வேண்டாம். வாசிப்பின் துவக்கத்திலேயே,என்னுடைய கவிதை
பிரசுரம் பெற்றிருந்தது. வாசிப்புக் கூடக்கூட கவிதையின் போக்கு மாறிக்கொண்டு வருகிறது. ஆனால், நீங்கள், ஏற்கனவே நிறைய படித்திருக்கிறீர்கள்.இன்னும் கூட உங்கள் அளவுக்கு நான் படித்திருக்கவில்லை.எனவே, தொடர்ந்து உற்சாகமாய் எழுதுங்கள்.அதற்கான பலம் உங்களிடம் உள்ளது. வாழ்த்துகள்.

யாத்ரா சொன்னது…

நன்றிங்க முத்துராமலிங்கம்
நன்றிங்க ஆதவா
நன்றிங்க முத்துவேல்

முத்துவேல் நீங்க சொல்வதற்கு முன் என்க்கு அப்படியொரு யோசனையே இல்லை, நன்றிங்க

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

இன்றுதான் ரீடரில் வாசித்தேன் - நவீன விருட்சத்தை. வாழ்த்துகள்.

Karthikeyan G சொன்னது…

வாழ்த்துகள் பல..

யாத்ரா சொன்னது…

சுந்தர் சார் அவர்களுக்கும் கார்த்திகேயன் அவர்களுக்கும் மிக்க நன்றி

யாத்ரா சொன்னது…

சுந்தர் சார் தாங்கள் சுட்டிய திருத்தங்களை செய்தே அனுப்பி வைத்தேன் கவிதைகளை. தக்க நேரத்தில் சுட்டியமைக்கு மிக்க நன்றி

பெயரில்லா சொன்னது…

என்னுடைய வாழ்த்துக்களும் நண்பரே!

யாத்ரா சொன்னது…

ஷீ நிசி தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

anujanya சொன்னது…

தாமத பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு. மென்மேலும் எழுதுங்கள். வாழ்த்துகள் யாத்ரா.

அனுஜன்யா

யாத்ரா சொன்னது…

அனுஜன்யா அவர்கள் வந்ததே மகிழ்ச்சி, மிக்க நன்றி