செவ்வாய், 31 மார்ச், 2009
இந்த வார உயிரோசை இணைய இதழில் வெளிவந்திருக்கும் எனது கவிதைகள்
பின்வரும் சுட்டியில் வாசிக்கலாம்.
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=1152
உயிரோசை இதழுக்கு நன்றிகள்.
பின்வருவது இந்தப் பதிவிற்கான கவிதை
இது இன்னொரு இவள்
அழும் குழந்தையை
தூக்கி கொஞ்சி
ஓயப்படுத்தியபடி
அது தான் நான் வந்துவிட்டேன்
அல்லவா அழக்கூடாது என
வாசலுக்கு வருகிறாள்
நின்றது மழை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
15 கருத்துகள்:
விளக்கத் தெரியவில்லை.எதுவோ ஒரு பரவசம்,புன் முறுவல் தருகிறது இக்கவிதை.உயிரோசைக் கவிதைகளுக்கு
வாழ்த்துக்கள்.அக் கவிதைகளையும் இங்கேயே மீண்டும் ஒரு முறை பார்வைக்கு வையுங்கள்.அது சில காரணங்களுக்காக, நன்றாக இருக்கும்.
:-)
நல்லவங்க ஒருத்தவங்க இருந்தாலும் வரும் மழைக்கு ஏற்ப நல்ல உள்ளம் சொன்னதுமே நிற்குற மழையும் அழகுதான்..!!
//என்ன பேசுவதென்றே தெரியவில்லை
நெடுநேரம் மௌனப்பிடியுள்
தொடங்கிய உரையாடல்களையும்
ஒரு சொல்லில் கடக்க
என்ன நினைத்தானோ
சொல்லிக்கொள்ளாமல் கிளம்பிவிட்டான்
புன்னகைகள் கைகுலுக்கல்கள்
நலம் விசாரிப்புகள் முகஸ்துதிகள்
விவாதங்கள்
நினைவைத்தோண்டுதல் கிளறுதல்
புல்லரிக்கச்செய்தல்
புளகாங்கிதமடையச்செய்தல்
கொஞ்சமேனும் பழகியிருந்திருக்கலாம்
பாசாங்குகளை//
உயிரோசையில் வந்த கவிதையில் ஒன்று..
விட்டுப்போகாத ஒற்றை வார்த்தையில் சொல்லணும்னா கலக்கல்
உயிரோசையில் உங்கள் கவிதைகள் படித்தேன் இரண்டும் அருமை.
இக்கவிதையும் அழகாக உள்ளது வாழ்துக்கள்
இது ஒருமாதிரியான உணர்வு.. சொல்ல முடியாதது!!! வாழ்த்துகள் யாத்ரா!!!
உங்கள் பழகாத பாசாங்கு எனக்குப் பிடிச்சிருந்தது செந்தில்.
//வாசலுக்கு வருகிறாள்
நின்றது மழை//
நல்ல வந்திருக்கிறது
உயிரோசைக்கு வாழ்த்துகள்
ம்ம்ம்
எல்லோரும் சொல்லியது போல்தான்
விளக்க தெரியவில்லை
வணக்கம் யாத்ரா!
உங்களுக்காக ஒரு விருது என் பக்கத்தில்:
http://deepaneha.blogspot.com/2009/04/blog-post.html
பெற்றுக்கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறேன்.
உயிரோசையில் வெளியானதற்கு என் வாழ்த்துக்கள் நண்பரே!
முத்துவேல், சென்ஷி, முத்து, ஆதவா,வேலன் அண்ணாச்சி,முத்து,மண்குதிரை, ஜமால், ஷீ நிசி அனைவருக்கும் நன்றி
தீபா அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்கும், பாராட்டுகளுக்கும் நன்றி
நின்ற மழை - :)))
அனுஜன்யா
அனைத்தும் அருமை.
உணர்வின் வலிமை எழுத்துக்களாய்..
எனது குரு ஓஷோவின் வார்த்தைகள் நினைவிற்கு வருகிறது..
Falling in love you remain a child; rising in love
you mature. By and by love becomes not a relationship, it becomes a state of your being.
Not that you are in love - now you are love.....
வாழ்த்துகள் தோழரே..
நன்றிங்க அனுஜன்யா
நன்றிங்க வண்ணத்துப்பூச்சியார்
நல்ல கவிதை :)
கருத்துரையிடுக