திங்கள், 30 மார்ச், 2009

ஐயாயிரம் மைல்கள்



தினமும் பேசவேண்டும்
இவளுக்கு எதையாவது
இவங்க வந்தாங்க
அவங்க போனாங்க
இதைச்சொன்னாங்க
புலம்பல் அழுகை கோபம்
ஐயாயிரம் மைல்களுக்கு
அப்பாலிருந்து இம்சிக்கிறாள்
குட்டிப்பொண்ணு அப்பாவென
பேசும் மழலையில் மனம் நிறையும்
பின்னரவில் நிலைகுலைந்த நிலையில்
மறுபடியும் அழைப்பாள்
அந்த நெடுநேர உரையாடல்
முடியும் சுயபோகத்தில்

16 கருத்துகள்:

Chandran Rama சொன்னது…

Yatra..,
There you go again.. and this time its the harsh reality you are trying to bring out.
Only those who are away from their family can really feel these lines...
அந்த நெடுநேர உரையாடல்
முடியும் சுயபோகத்தில்

well done

ச.முத்துவேல் சொன்னது…

ஒரு அதிர்வை ஏற்படுத்துது இக்கவிதை.
ரொம்ப நல்லாயிருக்கு.விருப்பப்பட்டால்
எனக்கொரு மின்மடல் இடுங்கள்.உங்களின் மின்னஞ்சல் முகவரிக்காக.கொஞ்சம் பேசவேண்டும்.பின்னூட்டத்தில் எவ்வளவு எழுதமுடியும்?
muthuvelsa@gmail.com

மாதவராஜ் சொன்னது…

மிக நுட்பமாக ஆரம்பித்து பெரும் அதிர்வுகளை உள்ளுக்குள் தந்தபடி முடிகிறது, கவிதை.

வாழ்வின் யதார்த்தங்கள் அறுக்கின்றன.
போகமென்பது இங்கே வடிகாலா, வலியா?

Venkatesh Kumaravel சொன்னது…

அற்புதம்.
வீட்டை விட்டு வெளியில் இருக்கும் நம்மைப்(?) போன்ற ஜனத்தின் வலியை நுட்பமாக பதிவு செய்கிறது!

ஆதவா சொன்னது…

ரொம்ப நல்லா இருக்குங்க... இதைத்தவிர வேற எதுவும் சொல்லத் தெரியலை

பெயரில்லா சொன்னது…

செந்தில்,

சொடேர்னு பொடனியில யாரோ அறைஞ்ச மாதிரி இருக்கு.

நிதர்சனத்தை இதைவிடவும் நேர்மையாய்ச் சொல்லமுடியாது.

ஆ.சுதா சொன்னது…

சட்டென்று பாய்கின்றது இக்கவிதை
அசலான கவிதை

MSK / Saravana சொன்னது…

உங்கள் ஒவ்வொரு கவிதைக்கும் பின்னூட்டமிட்டிருப்பேன் முன்பு போல் நேரம் வாய்த்திருந்தால்.. ஆனால் இந்த பின்னூட்டத்தை மொத்த பின்னூட்டமாக கொள்ளவும்..

நீங்கள் ரொம்ப ரொம்ப கலக்கலா எழுதறீங்க.. உங்கள் கவிதைகள் மிகவும் பிடித்திருக்கிறது.. உங்களை கூகிள் ரீடரில் கவனித்துக்கொண்டே இருக்கிறேன்..

na.jothi சொன்னது…

தினமும் இப்படி தான் போகுது
பேசாவிட்டாலும் வலி தான்

குடந்தை அன்புமணி சொன்னது…

இது கடல்தாண்டி சென்றிருக்கும் ஒவ்வொருவனின் வலி! இதை விரும்பி யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

நல்லா இருக்கு யாத்ரா!

மண்குதிரை சொன்னது…

வணக்கம் நண்பரே !
நெகிழ்ச்சியாக இருக்கிறது.

யாத்ரா சொன்னது…

ஆறுமுகம், முத்துவேல், மாதவராஜ் சார், வெங்கிராஜா,ஆதவா,வடகரை வேலன் அண்ணாச்சி,முத்து, சரவணா,புன்னகை, அன்புமணி, சுந்தர் சார், மண்குதிரை அனைவருக்கும் மிக்க நன்றி

மாதவராஜ் சார் அது வலி

anujanya சொன்னது…

அபாரம். பதட்டமாக இருக்கு யாத்ரா. நீங்கள் இதே வீரியத்துடன் தொடர வேண்டுமென்று.

அனுஜன்யா

யாத்ரா சொன்னது…

தங்களின் அன்பிற்கும் அக்கறைக்கும் நன்றிங்க அனுஜன்யா

பா.ராஜாராம் சொன்னது…

அருமை யாத்ரா!!