வெள்ளி, 27 மார்ச், 2009
புழுதி படியும் வாசல்
தேனீர் நுரை
உதட்டு விளிம்பில் இருந்ததும்
சோற்றுப்பருக்கை நாசி நுனியில் இருந்ததும்
உதிர்ந்த சருகு கேசத்தில் செருகியிருந்ததும்
தோளில் எறும்பு ஊர்ந்ததும்
உதிர்ந்த இமைமுடி
விழியருகே ஒட்டியிருந்ததும்,,,,,,,,,,,,,,
பின்னான கணங்களின்
உறைந்த நிகழ்வுகளும்
எரிந்த பாம்புக்குளிகையின்
திக்கில்லாமல் காற்றிலலையும்
சாம்பலாய்
கூட்டி விட விட
படியும் புழுதியாய்
வாசல் கோலத்தின் பின்
அழிந்தும் அழியாத
நேற்றைய கோலமாய்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
10 கருத்துகள்:
I enjoyed reading your poem...
simple thoughts but great narration.
looking forward for many more such poems..
கவிதை நன்றாக உள்ளது
தங்களது பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்கவிதைகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
முதல் சில வரிகளே ரசனையாய், நுட்பமாய் உள்ளிழுத்துக்கொள்கிறது.அதை தொடர்புப்படுத்தும் விதமான அடுத்த வரிகள் பொருத்தமாய், அழகாய், கவிதையாய்.
(இதையும் அனுப்புங்கள்)
நல்லா இருக்குங்க.. தலைப்பே அழகு.
பாம்புக் குளிகை பிரமாதமான பிரயோகம்...
நல்லா இருக்குங்க.
சட் சட் என எழும் காட்சிப் பிம்பங்கள் பிரமிப்பூட்டுவன.
நல்ல கவிதை.
நன்றி ஆறுமுகம்
நன்றி முத்துராமலிங்கம்
கவிதைகளை தங்கள் இணைய இதழில் வெளியிட்டமைக்கு நன்றி தமிழ்குறிஞ்சி
நன்றிங்க முத்துவேல், அனுப்புகிறேன்
நன்றிங்க ஆதவா
சுந்தர் சார் நன்றி
நன்றி வடகரை வேலன் ஐயா
நல்லா இருக்கு யாத்ரா.
அனுஜன்யா
நன்றிங்க அனுஜன்யா
கருத்துரையிடுக