புதன், 25 மார்ச், 2009
எதுவுமே நிகழவில்லை இன்று
புன்னகை ஒட்டிய முகங்கள்
நெகிழ வைத்த மேலாளர் நண்பர்கள்
காத்திருக்க வைக்காமல்
வந்துவிட்ட இவள்
காலியாயிருந்த பேருந்து
ஆழ்ந்து யோசிக்கிறேன்
ஒரு அவமானம்
ஓரேயொரு ஏமாற்றம்
வன்சொல்
எதிர்ப்பட்ட லாரிக்காரனும்
சாவுகிராக்கியெனவில்லை
இது ஒரு நாளா
மன்னிக்கவும்
இன்றைக்கு
கவிதையேதுமில்லை
உங்களை வெறுமனேயனுப்புவதில்
துயரம் மெல்ல கவிகிறது.
( ஏதோ ஒரு ஓரமாய் எழுதிக்கொண்டிருக்கலாமென வந்து, நண்பர்கள் உசுப்பி ரணகளமாக்கியதில், இதழ்களுக்கு அனுப்ப அனுப்பியதையெல்லாம் அவ்விதழ்களும் வெளியிட்டுவிட, சட்டென்று என் எழுத்திற்கான கச்சாப்பொருட்களனைத்தும் (துயரம்) தீர்ந்துபோனதாய் உணர்ந்த கையறுநிலையில் இப்படித்தான் எழுதத்தோன்றியது )
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
12 கருத்துகள்:
இப்படியும் ஒருநாள் அமைந்திடுமா?!
வித்தியாசமான கவிதை!
பின்குறிப்பு இல்லாமல் போனால் இன்னும் நல்லாருக்கும்...
இதையும் கவிதையாக்கும் நீங்கள் எதையும் கவிதையாக்குவீர்கள். நல்லா இருக்கு.
சுந்தர் தன் பதிவில் சொன்னதையும் மனதில் கொள்ளுங்கள். சில சமயம் அதுவா வந்து கொட்டும். பல சமயம் (எனக்கு) பலநாட்கள் தொடரும் கற்பனை வறட்சி. பேசாமல் இருந்து விட வேண்டும். இல்லாவிட்டால் கவிதை ஒரு தயாரிக்கப்பட்ட பொருளாகி விடும் அபாயம் ஏற்படும்.
அனுஜன்யா
ஹாஹா.... நிகழாததே கவியெனப்படுதலும் கவியே!!
அனுஜன்யா சொல்வது சரிதான்... எனக்கு இப்பொழுது கோடை காலம்... விரைவில் மழை வரும் பொழுது என் காகிதங்கள் என்னிடம் இருப்பதில்லை.... யாரிடமும் சொல்லாமல் விழுந்துவிடுகிறது மழையெனும் என் கவிதை (அட இதுவே நல்லா இருக்கெ!!! கவிதையா போட்டுருவோமே!!)
எல்லாவற்றையும் உங்கள் கவிதை நிகழ்த்தி விட்டது.
அற்புதமான கவிதை.
நல்லா இருக்கு யாத்ரா
இல்லாமையே கவிதை எழுத முதல் அடியாக உள்ளது
யாத்ரா,
இந்தக் கவிதையும் அருமையாக வந்திருக்கிறது.
இதே போன்ற பொருள் உள்ள கவிதை நானும் யோசித்திருந்தேன். என்ன ஒற்றுமை?. ( இவ் விடயத்தில் அனுஜன்யாவும்தான். சரிதானே அனுஜன்யா )
கவிதைக்கு என் நன்றி
என்னை பின் தொடர்வதற்கும் என் நன்றிகள்
நல்லா வந்திருக்கு கவிதை. ஆனால் வாசிப்பனுபவத்தில், ஒற்றைத் தன்மையைத் தரும் அந்தப் பின்குறிப்பு குறுக்கிடுகிறது :(
யாத்ரா,
நல்ல கவிதை. ஆனா, தலைப்பு இல்லாம வந்திருக்கலாம். கூடவே சுருக்கமாவும்.
//புன்னகை முகங்கள்
நெகிழ வைத்த மேலாளர்கள்
விநாடியில் வந்துவிட்ட இவள்
காலியாயிருந்த பேருந்து
சாவுகிராக்கியெனவில்லை
எதிர்ப்பட்ட லாரிக்காரனும்
மன்னிக்கவும்
இன்றைக்கு
கவிதையேதுமில்லை//
எகனாமி, வார்த்தைகளிலும் முக்கியமல்லவா?
தோழமையுடன்
பைத்தியக்காரன்
என்ன, தலைப்பில்லாமல் வந்திருக்கலாமா...
கவிதையில் தலைப்பெதற்கு
- நான்
அது கவிதையேயில்லை
- நீ
நன்றி ஷீ நிசி அவர்களே
தமிழன், சுந்தர்ஜி அவர்களுக்கு பின்குறிப்பு
ஒற்றைத்தன்மையை கொடுத்தது நிஜம், தவிர்த்திருக்கலாம், நானும் இது தேவையா என யோசித்துக்கொண்டே தான் உள்ளிட்டேன், எதுவுமே நிகழாத அன்று இது நிகழ்ந்தால் நன்றாயிருக்குமே என்று நினைத்திருக்கலாம்.
அனுஜன்யா அவர்களின் கருத்துகளுக்கு நன்றி
நன்றிங்க ஆதவா
மாதவராஜ் சார் நன்றி
நன்றிங்க ஜோ
நன்றிங்க புன்னகை
நன்றிங்க மண்குதிரை
பைத்தியக்காரன் அவர்களின் முதல் வருகைக்கு நன்றி
சுந்தர்ஜி அவர்களும் இந்த எகனாமி விடயத்தில் அறிவுறுத்தியிருக்கிறார், இன்னும் முயற்சிக்கிறேன், தங்களின் சுட்டுதலுக்கு நன்றி, தொடர்ந்து விமர்சியுங்கள்
சுந்தர் சார் இத எங்கயோ இப்ப தான் சமீபமா படிச்சேன், சரியாச் சொன்னீங்க,
கவிதையேதுமில்லன்னு அனைவரையும் வெறுங்கையோட அனுப்பறேன்னு புலம்பினா, அதைப் போய் கவிதைன்னு நெனச்சு,,,,,,
கருத்துரையிடுக