சனி, 21 மார்ச், 2009
ஆற்றாமையின் புலம்பல்
விரல்களில் வருடி பற்றி
முத்தங்களிட்டு
கடைசியில் மிதி
வாழ்ந்த கணங்களின் எச்சமாய்
மிதிபட்டுக்கொண்டிருக்கிறோம்
கைவிடப்படல் வழமையே
சுகிக்க சுகிக்க
கரைந்தோம்
பின்பு வேறொன்று
தேவையுணர்கையிலெல்லாம்
ஒவ்வொன்று
கசந்தால்
இன்னொன்று
ஏகபத்தினி விரதன்
வேடம் தான் உறுத்துகிறது
புனிதபிம்பம்
கூறுபடுவது பொறுக்காது
பிரம்மச்சர்யம் பூணுவதாயும்
பொய்யுரைக்கிறாய்
அழிக்கும் பிரயத்தனங்கள் கடந்து
சில கணமேனும்
மறைந்ததன் தடயமாய்
வாழும் வாசம் புலப்படுத்திவிடும்
எங்களுடனான
சகவாசத்தை
இப்படிக்கு
உனக்காக
சுவாசித்தே உயிர்நீத்த
சிகரெட்.....................
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
8 கருத்துகள்:
அழகாக யாத்திருக்கிறீர்கள்
அன்புடன்
சக்தி
சக்திதாசன் அவர்களின் வருகைக்கு மிக்க நன்றி
கவிதை முழுதும் நல்ல சொற்க்கள் நன்றாக யோசித்து எழுதியுள்ளீங்க
கவிதை மிகவும் அருமையாக உள்ளது
யாத்ரா உங்களுடைய முந்தைய கவிதைகள் சில கூட என்னை மிகவும் கவர்ந்து அருமையாக எழுதுகின்றீர்கள் வாழ்த்துக்கள்
ஆ.முத்துராமலிங்கம் அவர்களுக்கு நன்றி
அழகு அழகு!! பிரயோகமும் கருவும்... கலக்கல்!!!
நன்றிங்க ஆதவா
இறுதிவரை சிகரெட்டை இங்கு எதிர்பார்க்கவேயில்லை..அருமை !
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி ரிஷான் ஷெரீப் அவர்களே
கருத்துரையிடுக