வியாழன், 19 மார்ச், 2009

பாதை


இந்தப் பாதையில் தான்
வழக்கமாய் புகைக்கும் தேனீரருந்தும் கடை
புளியமர நிழலில்
சற்றே நீளம்
இதைவிட குறுக்கு வழிகள் அனேகம்
ஒரு ஒட்டுதல்
அப்பக்கம் செல்லாத
அசந்தர்ப்ப நாட்களின்
இரவுகளை உறக்கமிழக்கச் செய்யும்
பிரிவுத்துயர் நிரம்பிய கண்ணீர் திரண்ட முகம்
எவ்விதம் இந்நெருக்கம்
வாகன பயண நாட்களை விட
பாதயாத்திரையில்
அதீத புத்துணர்வுடன் தென்படும்
பிரிவின் துயரமிகு கணங்களை யூகித்தே
நெருக்கத்திலிருந்து சாமர்த்தியமாய் நழுவிச்சென்றும்
சிலரிடம் சிலதிடம் இப்படியாகி,,,,,,,,,,,,,,,,,,




காலப்போக்கில் இன்னதென்றறியாத
மனவிலகலில்
தொடர்பறுந்து போனது
மயானத்திற்கு வேறு குறுக்கு வழிகள் இல்லை
ரோஜா இதழ்களும் சம்பங்கிகளும்
பூக்கள் உதிர்ந்த ஆரமும்
பாதை நெடுக உதிர்த்து
இவ்வழி தான்
போக வேண்டியதாயிற்று
நெடுநாள் பாராதிருந்து
இந்தக் கோலத்தில் பார்க்கவா
என அரற்றியது பாதை,

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

எனக்கு புரிந்ததை சொல்கிறேன்...

நீண்ட நாட்களுக்கு பிறகு அவனோடு பழகிப்போன அந்த பாதையானது அவனைக் காண்கிறது..... அவனோ சடலமாய் வந்துக்கொண்டிருக்கிறான்..

இது சரியென்றால் நான் கவிதையை விளங்கிக்கொண்டிருக்கிறேன்..

வாழ்த்துக்கள்.... மிக வித்தியாசமான பார்வை... என்ன சொல்வது... விவரிப்பதை விடவும், இந்த கவிதையை அசைபோடுவதே சுகமாக உள்ளது!

soorya சொன்னது…

என்னவோ என்னவோ எனக்குப் புடிச்சிருக்கு..ம்..ம்ம் இல்லை..
புரிஞ்சிருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்.

யாத்ரா சொன்னது…

ஷீ நிசி மற்றும் சூர்யா அவர்களுக்கு நன்றி

Karthikeyan G சொன்னது…

//மயானத்திற்கு வேறு குறுக்கு வழிகள் இல்லை//

Ahaa.. Super..

யாத்ரா சொன்னது…

நன்றி கார்த்திகேயன்