சதுரங்கம்
சிப்பாய்களின் உயிர் மலிவு
உங்கள் ஒரு மந்திரியை பணயம் வைத்து
என் இரண்டு யானைகளை வீழ்த்தினீர்கள்
ஒரு தட்டில் உங்கள் இன்னொரு மந்திரி யானை
மற்றொன்றில் என் இரண்டு குதிரை மந்திரி
உங்கள் குரூர சமண்பாடு இது
ராஜ்யத்தைக் காக்கும்
நிர்க்கதி நிலைக்குத்தள்ளி
என் ராணியைக் கவர்ந்தீர்கள்
உங்கள் சூட்சுமங்கள்
அறிந்திருக்கவில்லை
வெற்றி இதற்கு
உங்கள் விசுவாசிகள்
எவரையும் காவு கொடுக்க தயாராயிருந்தீர்கள்
அவர்களோ
நான் உட்பட
உங்கள் தந்திரம் மெச்சினோம்
துரோகம்
அறியாது.
சனி, 14 மார்ச், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
16 கருத்துகள்:
//அவர்களோ
நான் உட்பட
உங்கள் தந்திரம் மெச்சினோம்
துரோகம்
அறியாது.//
சதுரங்கத்தை வைத்து வித்தியாசமான கவிதை...மிகவும் அருமை...
வாழ்த்துக்கள் யாத்ரா...
வாங்க புதியவன், வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
சதுரங்கம் வைத்து கவிதையா... பலெ.. எனக்கு சதுரங்கம் விளையாட ரொம்ப பிடிக்கும்.
யாத்ரா!
கவிதை நன்றாக வந்திருக்கு.
ஆதவா வருகைக்கு மிக்க நன்றி,
மாதவராஜ் ஐயா, தங்களின் பின்னூட்டங்கள் என்னை நெகிழ்வடையச்செய்கிறது
நல்லா வந்திருக்குங்க கவிதை.
சுந்தர் சார் ரொம்ப மகிழ்ச்சி
அற்புதம். சாரி, கொஞ்சம் லேட்டா வரேன். பிற கவிதைகளும் படித்தேன். மிக மிக அழகாக எழுதுகிறீர்கள். இப்படி யாராவது வந்தால் பரபரப்பாக இருக்கு.
அனுஜன்யா
வாங்க அனுஜன்யா, நீங்க வந்ததே மகிழ்ச்சி
vaazththukkaL
ருத்ரன் சார், தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி
யதார்த்த கவிதை! அரசியல் எல்லா இடத்திலும் எல்லா சமையங்களிலும் இருக்கிறது. அதனால் இந்த கவிதையை படிக்கையில் ஒரு வித சோகமும் கோமமும் வருது...
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி சுகுமார் அவர்களே
நல்ல கவிதை.
"புரியவில்லை, விளக்கவும்" என்று யாரும் பின்னூட்டம் போடவில்லையே எப்படி? ஹா ஹா!
எனக்கும் சதுரங்கம் விளையாட ரொம்ப பிடிக்கும். அதிகம் ஜெயிப்பேனா, தோல்வியுருவேனா என்று கேட்கக் கூடாது.
ஜோ அவர்களே, தங்களின் வருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி
அருமை!
உங்களின் இந்தக்கவிதையை நான் 'உயிரோசை' யில் வாசித்தேன். வாழ்த்துகள்!
-ப்ரியமுடன்
சேரல்
கருத்துரையிடுக