நெற்றிப்பொட்டில் ஆணியறையும் பட்டினத்தாரின் வரிகள்
வீடிருக்க தாயிருக்க வேண்டுமனை யாளிருக்கப்
பீடிருக்க வூணிருக்கப் பிள்ளைகளுந் தாமிருக்க
மாடிருக்க கன்றிருக்க வைத்த பொருளிருக்க
கூடிருக்க நீ போன கோலமென்ன கோலமோ
சீயுங்குருதிச் செழுநீர் வழம்புஞ் செறிந்தெழுந்து
பாயும் புடவையொன்றில்லாத போது பகலிரவாய்
ஈயுமெறும்பும் புகுகின்ற யோனிக் கிரவுபகன்
மாயுமனிதரை மாயாமல் வைக்க மருந்தில்லையோ
அன்னை யெத்தனை யெத்தனை யன்னையோ
அப்ப னெத்தனை யெத்தனை யப்பனோ
பின்னை யெத்தனை யெத்தனை பெண்டிரோ
பிள்ளை யெத்தனை யெத்தனை பிள்ளையோ
முன்னை யெத்தனை யெத்தனை சென்மமோ
மூடனாயடி யேனு மறிந்திலேன்
இன்ன மெத்தனை யெத்தனை சென்மமோ
என் செய்வேன் கச்சியேகம்ப நாதனே
பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசம் பிடித்திட்டென்னை
கண்ணால் வெருட்டி முலையான் மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாங்குழியிடைத் தள்ளியென் போதப்பொருள் பறிக்க
பீளையும் நீரும் புறப்படு மொருபொறி
மீளும் குறுமபி வெளிப்படு மொருபொறி
சளியும் நீருந் தவழு மொருபொறி
உமிழ்நீர் கோழை யொழுகு மொருபொறி
வளியும் மலமும் வழங்கு மொருவழி
சலமும் சீழும் சரியு மொருவழி
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும்
சட்டக முடிவிற் சுட்டெலும்பாகும
உடலுறு வாழ்க்கையை உள்ளுறத் தேர்ந்து
வெட்டுண்ட புண்போல் விரித்தவற் குல்பைதனிலே
தட்டுண்டு நிற்றல் தவிர்ப்பதுவு மெக்காலம்
பட்டினத்தார் பத்திரகிரியார் ஆண்டாள் இவர்களின்பால் தனித்த ஈர்ப்பு உண்டு. உடலைப் பற்றியும் பற்றியெறியும் காமம் பற்றியும் அதனினின்று விடுவித்துக் கொள்ளும் ஆன்மீகப் பிரயத்தனங்கள் பற்றியும் பாடியவர்கள். முலை, அல்குல், யோனி இதுபோன்ற சொற்களையெல்லாம் ஆன்மீகப்பாடலில் எவ்வளவு அனாயசமாகப் பயன்படுத்தியிருக்கிறார் பாருங்கள். உருவ வழிபாட்டில் ஈடுபாடில்லாதயெனக்கு கச்சியேகம்பநாதன் மீது அளப்பரிய பற்றே உண்டாகி விட்டது. இன்னும் ஆண்டாள் பாசுரங்களையும் கம்பனையும் வாசிக்க ஆசை. வாசிப்பு இட்டுச் செல்லும் பாதையின் வசீகரங்களை உள்வாங்கியபடியே தீராது திரிந்து கொண்டிருக்கிறேன் புத்தகப்பக்கங்களில்,,,,,,,,,,,
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
9 கருத்துகள்:
நிறைய வாசிப்பீர்கள் போலத்தெரிகிறது!
பதிவுகளை ஆறுதலாய் படித்துவிட்டு பகிர்ந்துகொள்கிறேன்,தொடர்ந்து எழுதுங்கள்...
வாழ்த்துக்கள்...!
முதல் வருகைக்கு நன்றி தமிழன் கறுப்பி அவர்களே, மகிழ்ச்சி
எனக்குக் கூட பட்டனத்தாரின் வரிகள் பிடிப்பதற்குக் காரணம். ஒதுக்கப்பட்ட சொற்களைக் கூடச்
சேர்த்து உவப்பான கவிதைகளாக்கி உள்ளதை உள்ளபடி சொன்னதே!!
இவை ஆணி அடிகளே!!
அத்துடன் ஒரு பாடலின் (கைப்பிடி நாயகன் தூங்கையிலே யவன்கையெடுத்து அப்புறங்தன்னி லசையாமல் முன்வைத் ...
)சாரம்..நித்திரை கொள்ளும் போது எழுந்து சென்று பக்கத்து வீட்டுக்காரருடன் உறவு வைத்துவிட்டுவருபவளை எப்படி நம்புவேன் " என கச்சியேகப்பரைப் பார்த்து பட்டனத்தார் பாடிய பாடலுக்கு; இன்றைய ஆத்மீக வாதிகள்...படுக்கையில் உயிர் வெளியே போய்விட்டு வருவதைக் குறிப்பிடுவதாகக் கூறுவார்கள்.
அப்பாடலின் கருத்து அதா???
ஏன் அது அவர் மனைவியின் நடத்தை பற்றிப் பாடியதாகக் கொள்ள நம் ஆத்மீகம் மறுக்கிறது.
எமது சமயத்துக்கும் ஆத்மீகத்துக்கும் உள்ள மிகப் பெரிய குறைபாடே!!! இதே என்கிறேன்; நான்.
உண்மைகளை அழுக்குகளையும் பூசி மெழுகுவது...
நான் கூட அந்தப்பாடலை வாசித்திருக்கிறேன்
//ஏன் அது அவர் மனைவியின் நடத்தை பற்றிப் பாடியதாகக் கொள்ள நம் ஆத்மீகம் மறுக்கிறது.
எமது சமயத்துக்கும் ஆத்மீகத்துக்கும் உள்ள மிகப் பெரிய குறைபாடே!!! இதே என்கிறேன்; நான்.
உண்மைகளை அழுக்குகளையும் பூசி மெழுகுவது...//
உண்மை தான், மிகச்சரி
அய்யய்யோஒ நான் வழி மாறி வந்துட்டேனா....
பட்டினத்தாரின் கவிதையில் இருக்கும் சந்தம் நம்மை மிக எளிதில் ஈர்க்கும். பெண்கள் மீது அவருக்கு இருக்கும் வெறுப்பை ரசிக்கவே முடிவதில்லை.
ஆதவா சரியாத்தான் வந்திருக்கீங்க, ஒரு மனிதன் காமத்துக்கும் ஆன்மீகத்துக்கும் நடத்திக்கொள்ளும் போராட்டம்,
மாதவராஜ் அவர்களுக்கு,
வெறுப்புள்ளவர் இவ்வளவு அணுஅணுவாக வர்ணிக்க முடியாதென்று நினைக்கிறேன், அவரை பெண்மை அவதியுறக்செய்திருக்கிறது, அதன் விளைவே இப்பபாடல்கள் என்பது என் கருத்து
காமம் பொல்லாதது. காமம் பற்றிய தெளிவு வேண்டும்.காமுறச் செய்யவும் எழுதப்பட்டிருக்கிறது.வெறுக்கவும் ,மீளவும் எழுதப்பட்டிருக்கிறது. நாம்தான் சிந்தித்து செயல்படவேண்டும்.
நிறைய படிப்பது மகிழ்ச்சி.பகிர்ந்துகொள்வதிலும்.
முத்துவேல் வருக தங்களின் கருத்துக்களுக்கு நன்றி
கருத்துரையிடுக