புதன், 11 மார்ச், 2009

நடுநிசி

நடுநிசி

பலன் பார்க்கும் பழக்கமுண்டாவென
தலையில் விழும் பல்லி
பூனையின் இருப்பை
பரிசோதித்துச் செல்லும் எலி
புணர்ச்சி நிமித்தம் அலையும்
நடுநிசி நாய்கள்
உறக்கம் தொலைத்த இரவில்
இன்னும் என்னவெல்லாமோ நடந்தது
அப்பா
அம்மாவின் புருஷன்
இத்துனை காலமாய்
இதுகூட
தெரியாமலிருந்திருக்கிறது.

10 கருத்துகள்:

narsim சொன்னது…

கண்முன் நடுநிசி விரிகிறது.. அந்த ’இதுகூட தெரியாமலிருந்திருக்கிறது’வார்த்தை பளீர்..

ஆதவா சொன்னது…

நீங்கள் அப்பா அம்மா தாம்பத்தியம் பற்றி சொல்லுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.சரியா?

யாத்ரா சொன்னது…

நன்றி நர்சிம் தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்

வாங்க ஆதவா வருகைக்கு நன்றி, அது மறைமுகமா இருக்கட்டும்னு தான் அப்படி சொன்னேன்

anujanya சொன்னது…

நல்லா இருக்கு.

அனுஜன்யா

மாதவராஜ் சொன்னது…

யாத்ரா!

அடேயப்பா!
கவிதைக்கு அர்த்தமட்டுமல்ல வேகத்தையும் தரும் துடிப்பு மிக வரிகள். உங்கள் எழுத்துக்களை இத்தனை நாளும் பார்க்காமல் இருந்திருக்கிறேனே..!
என்னுடைய blog listல் இனி சேர்த்துக் கொள்வேன்.

யாத்ரா சொன்னது…

மிக்க நன்றி, அனுஜன்யா மற்றும் மாதவராஜ் அவர்களுக்கு, தங்களின் வருகை மகிழ்ச்சியளிக்கிறது

Karthikeyan G சொன்னது…

Super!!

யாத்ரா சொன்னது…

வாங்க கார்த்தி, வருகைக்கு நன்றி

தமிழ்நதி சொன்னது…

நல்லதொரு கவிதை. எவ்வளவு நாசூக்காகச் சொல்லிச் சென்றீர்கள். காற்று அப்படியே திரைவிலக்கி மெல்லென அகல்வதைப் போலிருந்தது.

யாத்ரா சொன்னது…

தமிழ்நதி அவர்களே வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி