திங்கள், 31 ஆகஸ்ட், 2009

தூண்டில் இருள்அடர்வன இருளை முதுகில்
படர்த்திச் செல்கிறாள்
சீராய் கத்தரிக்கப்பட்டு
காற்றில் அலையும்
நீள் இருள் இழைகளின் நுனியிலிருக்கும
தூண்டிற் முட்களில்
சிக்கித் தவிக்கின்றன
என் விழிக்கோளங்கள்

அவள் காற்சுவடுகளுககு
திலகமிட்டபடி தொடர்கின்றன
செறுகப்பட்ட விழிதுவாரம் வழி பரவி
இமையோரங்களில் வழியுமென் உதிரத்துளிகள்

கேச இழை வேர்களில் கூடிய மென்வலியில்
உணர்கிறாள் அகப்பட்டதின் பாரத்தை
மகிழ்ச்சியோ மிரட்சியோ
கூடுதல் விசையுடன்
இழுத்தோடுகிறாள்

விரைதலில் பிணித்த வலியில்
நகரவியலாது ஸ்தம்பித்த கணம்
விழிகள் என் இமைகளிலிருந்து பெயர்ந்து
காலமற்ற காலத்தின் பெண்டுலங்களாய்
அவள் பிருஷ்டங்களை
உரசியுரசிச் செல்கின்றன

விட்டு விலகிச் செல்லும்
என் கண்களை
கண்களின்றி பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

18 கருத்துகள்:

பா.ராஜாராம் சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு யாத்ரா.

சி.கருணாகரசு சொன்னது…

நல்லா இருக்கு கவிதை.

மண்குதிரை சொன்னது…

nalla irukku nanba

Vidhoosh/விதூஷ் சொன்னது…

:)
--vidhya

D.R.Ashok சொன்னது…

அர்த்தம ‘அதானே’?
:)

நல்லாதாம்பா எழுதற.

TKB காந்தி சொன்னது…

//என் கண்களை கண்களின்றி பார்த்துக்கொண்டிருக்கிறேன்// கடைசியா இது ரொம்ப நல்லாயிருந்தது யாத்ரா

காமராஜ் சொன்னது…

கத்தரிக்கப்பட்ட இருள் நல்ல புனைவு.

ஸ்ரீ சொன்னது…

நல்லா இருக்கு யாத்ரா.

மாதவராஜ் சொன்னது…

தம்பி..!
கவிதையின் வரிகளில் கண்கள் இறங்கி இறங்கி....வாசிக்க வாசிக்க கடைசியில் நானும் கண் இழந்து போனேன், உன்னைப் போலவே. அருமை.

RaGhaV சொன்னது…

//காலமற்ற காலத்தின் பெண்டுலங்களாய்//

அருமையான வரிகள்.. :-)

கவிதை அழகு.. :-)

நேசமித்ரன் சொன்னது…

யாத்ரா

நல்ல புனைவு.
அருமை

:)

nila சொன்னது…

தங்களை இந்தத் தொடரோட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கிறேன்...
நன்றி [ http://nilamagal-nila.blogspot.com/2009/09/blog-post.html ]

உயிரோடை சொன்னது…

//அடர்வன இருளை முதுகில்
படர்த்திச் செல்கிறாள்
சீராய் கத்தரிக்கப்பட்டு
காற்றில் அலையும்
நீள் இருள் இழைகளின் நுனியிலிருக்கும
தூண்டிற் முட்களில்
சிக்கித் தவிக்கின்றன
என் விழிக்கோளங்கள்
அவள் காற்சுவடுகளுககு
திலகமிட்டபடி தொடர்கின்றன//

mozhi nalla irukku yatra.

Nundhaa சொன்னது…

i like this

சந்தான சங்கர் சொன்னது…

அழைப்பிதல்

நிகழ்ச்சி : மூன்றாம்பிறை
நாள் : உங்கள் நாள்
நேரம்: உங்களின் நேரம்

வரவேற்பு : கவிதைகள்

அன்புடன்,
சந்தான சங்கர்.

(மொய் எழுதவேண்டாம்
மெய் எழுதிவிட்டு செல்லுங்கள்.)

என்.விநாயகமுருகன் சொன்னது…

//என் கண்களை கண்களின்றி பார்த்துக்கொண்டிருக்கிறேன்//

அருமை யாத்ரா

பிரவின்ஸ்கா சொன்னது…

கவிதை அருமை .

- ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

யாத்ரா சொன்னது…

நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.