புதன், 9 செப்டம்பர், 2009

வாமு கோமு கவிதை

சாந்தாவின் புலம்பல் படலம் 1

லீவ் விட்டா ஐயா என்னை மறந்துடுவீங்களோ ?
ஒரு கடிதமாச்சும அனுப்ப வேண்டாம் ?
நான் ஒருத்தி இங்க தினமும் கடுதாசி வரும்
வரும்னு பாத்துட்டிருந்துட்டு ஏமாந்து போறேன்.
நிஜமாலுமே மறந்துட்டியாப்பா ?
திருப்பூரு சுத்தி அலைவீங்க.. எவடா கெடைப்பான்னு.
பேச்சுல உங்கள அடிச்சிக்க முடியுமா ?
அன்னிக்கி பஸ்சுல என்ன சொன்னீங்க ?
போனதும் முதல் வேலையா உன்னை
நெனச்சு நெனச்சு எழுதுன கவிதை
அமுட்டையும் அனுப்பறேன்னு.. நல்லாவே
இருந்துச்சு வசனம் ! இதை
படிச்ச பின்னாடி அனுப்புனீங்க..
எல்லாத்தையும் அடுப்புல போட்டு கொளுத்தீர்வேன்.
இனியும் லெட்டர் வரலைன்னா
சாப்பிடக் கூட மாட்டேன். ப்ளீஸ்டா..
ஒரே ஒரு கடுதாசி .. ப்ளீஸ்.
இங்க உங்க போட்டோவுக்கு நான் கிஸ்
பண்ணிப் பண்ணி போட்டோ நசிஞ்சு போச்சி.
அழுத்தக்கார ஆளுப்பா நீங்க.
போனா போச்சாதுன்னு பழைய டென்த்
படிச்சப்ப எடுத்த போட்டாவ குடுத்தா
என்ன சொன்னீங்க ? அப்படியே தலையில
கிரீடமும் கையில வேலையும் குடுத்திட்டா
சாமியாக்கும்னு நெனச்சு தின்னீரு
இட்டுக்கிட்டு போயிருப்பேன்னு.. லொள்ளு !
சரியாந்த லொள்ளு ! பஸ்சுனு கூட
பாக்காம போட்டோவுக்கு கிஸ்சு வேற
குடுக்கறீங்க
பதிலுக்கு உங்க போட்டாவக் கேட்டா
நீயே எம் பாக்கட்ல இருக்கு
எடுத்துககோன்னு.. சரியாந்த கொழுப்பு !
இனி என்ன எழுத ? எனக்கு எல்லாமே
நீங்க தான்.
( இந்தக் கடிதம் மிஸ்டேக் இல்லாம வர
காரணம் என் தங்கச்சி உங்க
கொழுந்தியாவின் திரு உதவி )

( சொல்லக் கூசும் கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதை, உயிர்மை வெளியீடு )

12 கருத்துகள்:

பிரியமுடன்...வசந்த் சொன்னது…

எப்டி இப்டியெல்லாம் எதார்த்தமா எழுதுறாங்க?

Karthikeyan G சொன்னது…

Superruuu ... :)

சென்ஷி சொன்னது…

அருமை!

பகிர்விற்கு நன்றி யாத்ரா!

பா.ராஜாராம் சொன்னது…

எவ்வளவு யதார்த்தமாய் இருக்கு!பகிர்வுக்கு நன்றி யாத்ரா.

Vidhoosh/விதூஷ் சொன்னது…

////( இந்தக் கடிதம் மிஸ்டேக் இல்லாம வர
காரணம் என் தங்கச்சி உங்க
கொழுந்தியாவின் திரு உதவி )///


என்னாது??? புரிலீங்க... :))

ஆனா, நல்ல கவிதைனு மட்டும் சொல்லிக்கிறேன்.

--வித்யா

மாதவராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு. நன்றி தம்பி.

D.R.Ashok சொன்னது…

:)

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

மிக மிக வித்தியாசமான கவிதைகள் வா மு கோமு எழுதியவை. பகிர்வுக்கு நன்றி.

கும்க்கி சொன்னது…

கவிதை அருமை.
யதார்த்த தளத்தில் எழுதி வருவதில் அவருக்கென தனி இடமுண்டு. ”தவளைகள் எம்பிக்குதிக்கும் வயிறு” சிறுகதை தொகுதி அற்புதமாக எழுதியிருக்கின்றார்.வால் பையன் மூலம்
நட்பாக அமையப்பெற்றதிலும் நேரில் உரையாடியதிலும் எனக்கு நிரம்ப மகிழ்வு.

ஜெனோவா சொன்னது…

Super, very reality,
Thanks for sharing.

சுந்தர் சொன்னது…

நிறைய அறிமுக படுத்துங்க நண்பா !

Nundhaa சொன்னது…

very different and very interesting ... thanks for sharing ... i will have to order this book and read the whole collection ...