செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009
ஒரு பொழுதில்
வீதியில் விழுந்திருக்கும்
மின் கம்பி நிழலின்
ஒரு கோட்டில்
முன்பின்னாய் பாதம் பதித்து
தடுமாறும் தருணங்களில்
சிலுவையாய் கரம் விரித்து
சமன்குலைவை சரி செய்தபடி நடக்கிறாள்
ஒரு தாவணிப் பெண்
கவனித்தோ கவனிக்காமலோ
அமர்ந்திருந்த நிழற்ப்பறவையை
மிதித்து விட
கீச்கீச்சென காலடியிலிருந்து மீண்டு
பறந்து சென்றதோ ஓடிச்சென்றதோ
அந்தப் பறவை என
மேல் கீழாய் அவதானித்தபடியிருந்த
ஒரு அபூர்வ கணத்தில்
சிறகில் அவளை வைத்து
அலகில் என் கழுத்தைப் பற்றி
பறந்து கொண்டிருந்தது அப்பறவை
முன்பே தீர்மானித்து
வைத்திருந்தது போலும்
ஒரு மேகத்தில் விடுவித்துச் சென்றது எங்களை
கழுத்தில் பற்றிய அலகின் தடத்திலிருந்து
வழியும் குருதியைத் தடுக்க
தாவணியவிழ்த்து கட்டிடுகிறாள்
சுருக்குக் கயிறாகி இறுகுகிறது கழுத்து
பொழியக் காத்திருந்த மேகத்தில்
எங்கள் காலடிகள் நழுவுகின்றன
சறுக்கிய படியே
மழைத் தாரை பிடித்திறங்கி
சங்கமமானோம்
அலைகள் தணிந்திருக்கும்
நடுக்கடலில்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
25 கருத்துகள்:
//தடுமாறும் தருணங்களில்
சிலுவையாய் கரம் விரித்து
சமன்குலைவை சரி செய்தபடி நடக்கிறாள்//
//அமர்ந்திருந்த நிழற்ப்பறவையை
மிதித்து விட
கீச்கீச்சென காலடியிலிருந்து மீண்டு
பறந்து சென்றதோ ஓடிச்சென்றதோ
அந்தப் பறவை என
மேல் கீழாய் அவதானித்தபடியிருந்த
ஒரு அபூர்வ கணத்தில்//
மனக் கண் முன் படம் விரிகிறது ..மிகவும் ரசித்தேன்.. வாழ்த்துகள்
மொழியும், கற்பனையும் ஒருசேர விரிந்து வாசிப்பவனைத் தூக்கிச் செல்கின்றன. அழகு.
ரொம்ப நல்லாயிருக்குது யாத்ரா!
அழகுக் கவிதை. :)
romba nalla irukku yaathraa
அபாரம் ... எனக்குப் பிடித்திருக்கிறது உங்களின் இந்தப் பொழுது
அப்படியே வழுக்கிக் கொண்டு செல்வது போலிருக்கிறது இந்த நடை.... அபாரம் யாத்ரா
-ப்ரியமுடன்
சேரல்
:-))))
என்ன ஒரு மகா கற்பனை
வார்த்தை பிரோயகம்
Excellent, hats off u yatra
அபூர்வ பயணம் யாத்ரா!
//சிறகில் அவளை வைத்து
அலகில் என் கழுத்தை பற்றி
பறந்து கொண்டிருந்தது அப்பறவை//
அழகிய காட்சி அமைப்பு.
பிறகொரு பிரியம் ததும்பும் செதுக்கல் அந்த..
//வழியும் குருதியை தடுக்க
தாவணியவிழ்த்து கட்டுகிறாள்//
கட்டிகொள்ளவேனும் போல் இருக்கு
யாத்ரா இத்தருணம்....
ரொம்ப நல்லா இருக்கு யாத்ரா. இந்த மாதிரி பயணம் போக யாருக்குத்தான் பிடிக்காது!
அனுஜன்யா
ரொம்ப நல்லா இருக்கு யாத்ரா. அப்படியே அந்தப் பறவையிடம் என்னையும் எடுத்துச் செல்லச் சொல்லுங்கள் - அலகால் கவ்வியோ அல்லது சிறகில் வைத்தோ.
மிக அருமை!!
கம்பியின் நேர்க்கோட்டுக்குப் பக்கத்தில் நீங்கள் தொற்றிக் கொண்ட மேகத்தின் நிழல் பற்றி நடந்து வந்தாற் போல இருக்கிறது
கவிதை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது அதன் இடுப்புக்குப் பிறகு
என்பது என் அனுமானம் சரியா ?தவறா ?நண்பா ..!
மகிழ்ச்சி, பிரமிப்பு என்று பளிச்சென சொல்லிவிட முடியாதபடிக்கு ஏதோ உணர்வுகள் தோன்றுகின்றன. சிறப்பான கவிதை.
(இதை அப்படியே ரசித்துகொள்ளவேண்டுமா? அல்லது ஏதாவது உள்ளர்த்தம் தேடிக்கொள்ளணுமா?)
யாத்ராவுக்கென பிரத்யேக மொழியிருக்கிறது.
அது அவரைப்போலவும் அவரது கவிதை போலவும்
அலாதியானது.
0
உங்களின் கவிதைகள் ' மணல்வீடு ' இதழில் படித்தேன்.
மீண்டும் ஒருமுறை கருப்புவெள்ளையில் ருசித்தேன்.
அழகு யாத்ரா.
பிரமிக்க வைத்த ஒரு பொழுது. கவிதையை அப்படியே ரசித்து மகிழ்ந்தேன்.
கவிதைக்கென அர்த்தம் தேடியதில் என் கணப்பொழுது தொலைந்து போனது. அர்த்தம் தேடாமல் அப்படியே மீண்டும் வாசித்ததில் அதில் இருக்கும் அழகு கண்டு பிரமித்தேன்.
வார்த்தைகள் அழகாக இருக்கிறது. மிக்க நன்றி யாத்ரா அவர்களே.
//பொழியக் காத்திருந்த மேகத்தில்
எங்கள் காலடிகள் நழுவுகிறது
சறுக்கிய படியே
மழைத் தாரை பிடித்திறங்கி
சங்கமமானோம்
அலைகள் தணிந்திருக்கும்
நடுக்கடலில்...//
pidiththathu.
நன்றி சுபஸ்ரீ
நன்றி மாதவண்ணா
நன்றி சென்ஷி
நன்றி வித்யா
நன்றி மண்குதிரை
நன்றி நந்தா
நன்றி சேரல்
நன்றி ராகவ்
நன்றி அசோக்
நன்றி ராஜாண்ணா
நன்றி அனுஜன்யாண்ணா
நன்றி சுந்தர் சார்
நன்றி கார்த்தி
நன்றி நேசா, உங்க அனுமானம் சரி நண்பா
நன்றி ஆதி, உங்க ரசனைக்கு
நன்றி தோழர் காமராஜ்
நன்றி வெ ராதாகிருஷ்ணன்
நன்றி இரசிகை
இந்த கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு யாத்ரா!
நல்லாயிருக்கு யாத்ரா,
vanga yatra
vanakkam uruppadiya yezhutha arrmbichitinga. happyiya irrukku
aama kadala poium verum kadalthaana? vera yethchium kariam unda?
hari
அழகான புனைவு,அழகான கவிதை,அற்புதமான வரிகள்.
//சிறகில் அவளை வைத்து
அலகில் என் கழுத்தைப் பற்றி
பறந்து கொண்டிருந்தது அப்பறவை//
வெகு அருமை. அதோடு மழைத்தாரை பிடித்திறங்குவது, வேறெங்கிலும் காணாத புதுமையான கற்பனை!!
விவரித்த காட்சிகள்
மனதில்
படமாய் விரிந்தன
அற்புதம்
வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக