வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

சி. மோகன் கவிதை



எனக்கு தூக்கம் வருகிறது – எனினும்
தூங்கும் மார்க்கமறியாது விழித்திருக்கிறேன்
எனக்கு தூக்கம்வரும் போது
ஒரு மிருகம் வாய் பிளந்து நாக்கை நீட்டும்
நான் வாயினுள் புகுந்து நாவினுள் துயின்றிருப்பேன்
பொதுவாக என் சயன அறையும்
படுக்கையும் அவை தாம்

சமயங்களில் என் கடவுளின் உள்ளங்கையிலும்
என் சாத்தானின் மடியிலும்
அயர்ந்து உறங்கியிருக்கிறேன்

இன்று அந்த மிருகத்தைக் காணவில்லை
எப்போதாவது இது நேர்வது தான்
ஏனென்று நானும் கேட்டதில்லை

கடவுளின் உள்ளங்கையைத் தேடிய போது
அவர் சுயமைதுனத்தில் லயித்திருந்தார்
சாத்தானின் மடியை நாடிய போது அவர்
கடவுளின் மனைவியோடு சுகித்திருந்தார்

இப்போது நான் என்ன செய்வது
எனக்கு தூக்கம் வருகிறது
தூங்கும் மார்க்கமறியாது விழித்திருக்கிறேன்


நன்றி - கடவு இதழ் (நாடோடிகள் விட்டுச் சென்றிருப்பது)

13 கருத்துகள்:

சி.கருணாகரசு சொன்னது…

நல்லா இருக்கு.

Karthikeyan G சொன்னது…

Chanceless.... :-)))))

Thanks for sharing..

ஸ்ரீதர்ரங்கராஜ் சொன்னது…

நன்றாக இருக்கிறது.

Venkatesh Kumaravel சொன்னது…

பிடிக்கவில்லை. சி.மோகன் கவிதைகள் எழுதுபவரா? தீராநதியிலும், கணையாழியிலும், காலச்சுவடிலும் அவரது கட்டுரைகள் படித்திருக்கிறேன்.

மண்குதிரை சொன்னது…

eerkanave vasiththirukkirennu ninaikkeen

pakirvukku nanri nanba

Ashok D சொன்னது…

என்ன சொல்ல வராரு சி.மோகன்..


கடைசியில் ஒருநாள்
உள்ளிருக்கும்
கடவுள் விழிக்க
சி.மோகன்
சித்தானந்தா மோகனம்
ஆனார்
:)

க. தங்கமணி பிரபு சொன்னது…

வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

Prapa சொன்னது…

//நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//

Thamira சொன்னது…

என்ன சொல்றதுன்னே தெரியலை.. ஆனா சரிதான்னு தோணுது.!

Kumky சொன்னது…

என்னப்பா இது?

ஓசி கார்ல எத்தனை நாள்தான் ஊர் சுத்தறது?
சொந்த ஏரோப்ளேன் என்னாச்சு?

Kumky சொன்னது…

இருந்தாலும் கவிதை சொல்லிச்செல்லும் அர்த்தங்கள் ஆயிரம்.

அவரவர் பாணியில் புரிந்துகொள்ளலாம்தானே...?

Kumky சொன்னது…

செல் போன் தொலைத்தாயிற்று..
(அதிஷா பதிவ படிச்ச நேரம்)

தொடர்புக்கு வருக:
04343-230270
9894600313.

வித்யாஷ‌ங்கர் சொன்னது…

nice please continue -vidyashankar