வியாழன், 13 ஆகஸ்ட், 2009
சில பிரியங்கள்
அறுபட்ட கோழியின்
தூவலாய் மிதக்கின்றன
கைவிடப்பட்ட பிரியங்கள்
சில மிதந்து மேகங்களுக்கப்பால் சென்று
நட்சத்திரங்களாகி விடுகின்றன
சில அலைகளின் மடிப்புகளில்
மூழ்கி கடற்பாசிகளோடு நேசம் கொள்கின்றன
சில சாக்கடையில் மிதக்கும்
சூரிய வட்டில் பரிமாறப்பட்டிருக்கும்
நரகல் துண்டுகளை அலங்கரிக்கின்றன
சில
பலருக்கு கைக்கெட்டிவிடும் பாவனை காட்டி
கண்மூடியாய் பின்தொடர வைத்து
தற்கொலை முனையில்
சொர்க்கத்தின் வாயிலை
திறந்து வைக்கின்றன
சில
காதலர்களின் பார்வைக் கம்பிகளில்
பட்டாம்பூச்சியென அமர்ந்தமர்ந்து
சங்கேதமாய் எதையோ
உணர்த்த முயல்கின்றன
சில
சிலந்தி வலைகளில் சிக்கி
காற்றின் அலைக்கழிப்புகளில்
விலகும் கணத்தை எதிர்நோக்கியிருக்கின்றன
இப்படி எல்லாமும் தங்களுக்கான
இடங்களைத் தேர்ந்து கொள்ள
ஒரேயொரு இறகு மட்டும்
தனித்து மிதந்து கொண்டிருக்கிறது அந்தரத்தில்
எவ்விடம் எதனிடம் யாரிடம்
அது சென்றடையப் போகிறதென்கிற
பதற்றம் கூடிக்கொண்டே வருகிற தருவாயில்
பாலருந்த விழையும்
குழந்தையின் முனைப்போடு
தேவதையொருத்தியின் ( தேவதையோ ராட்சசியோ )
முலையிடை தஞ்சமடைகிறது
சடுதியில் பார்வைப்புலத்திலிருந்து
மறைந்துவிட்ட அவள் இதை
கவனித்தாளோ கவனிக்கவில்லையோ
தெரியவில்லை
கூ(ண்)டடைந்த பிரியத்தை
உடை களைகையில் அவள்
தூக்கியெறிந்துவிடக் கூடாதென
பிரார்த்தித்துக் கொள்வோம் சபிப்போம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
23 கருத்துகள்:
கூடே கூண்டாகி, வரங்களே சாபங்களாகி, வராதவைகளே சாபல்யங்களாகும் நிலைதான் நமக்கு வாய்க்கிறது யாத்ரா.
நல்லதொரு பொழுதமைய வாழ்த்துக்கள்!
நல்ல கவிதை யாத்ரா
-ப்ரியமுடன்
சேரல்
rompa nallaarukku nanba
pirarththnai seykireen
mankuthiray
எல்லோருக்கும் வலி உண்டு.
கூறிய வாள் கொண்டு தகர்த்தெறிந்துவிடு யாத்ரா.
கவிதையின் நீண்ட போக்கும் அதன் ஒளிவடிவமும் காட்சி மாற்றமும் அருமை யாத்ரா.
//தேவதையொருத்தியின் ( தேவதையோ ராட்சசியோ )//
சரிதான்.. :-)))
கவிதை அருமை.. :-)
Tranformation is really good.little turf to understand for person like me(honestly)
அருமையான கவிதை வழக்கம் போல.வேறென்ன சொல்ல?
I really enjoyed your poem..
your thoughts are wonderful..(as usual)!!
keep up the good work
wishing you the best
சூப்பர் செந்தில்.
இராட்சசி போலவே அழகான கவிதை.
--வித்யா
அழகான கவிதை யாத்ரா. ’தேவதையோ ராட்சசியோ’ :)
நெல் மணிகளை,கை பள்ளத்தில் இட்டு அரக்கி துகள் ஊதி,அரிசி பதமரிவது போல் ஆசை/நிராசைகளை ஊதி பட்டியலிடுகிறாய் செந்தில்...கிறக்கமாய் வருகிறது வாசிக்கிற யாருக்கும்...மீண்டெழுந்து போக முடியாது போகிறது.வாழ்த்தும் அன்பும் சகோதரா..
//அறுபட்ட கோழியின்
தூவலாய் மிதக்கின்றன
கைவிடப்பட்ட பிரியங்கள்//
ஆரம்பமே அசத்தல்
//பலருக்கு கைக்கெட்டிவிடும் பாவனை காட்டி
கண்மூடியாய் பின்தொடர வைத்து
தற்கொலை முனையில்
சொர்க்கத்தின் வாயிலை
திறந்து வைக்கின்றன
சில//
அருமையாய் இருக்கிறது... வாழ்த்துக்கள் நண்பரே
அந்த இறகுகள் எங்கெங்கெல்லாம் பயணிக்கிறது.
எல்லோரையும் குழந்தைபோல பின்னிழுத்துக்கொண்டு.
அருமை .
துப்பட்டாவில் பின் குத்திக் கொள்ளும் இடத்தில்
சிறகையும் சொருகிக்கொள்வாள் ராட்சச தேவதை
கைவிடப்பட்ட பிரியங்கள் ஒவ்வொன்றும் எங்கெல்லாம் சென்றடையும்/ சென்றடைய சாத்தியம் இருக்கிறது என்பதையும் கூட மிக அழகாய் எழுதி இருக்கிறீர்கள்.
கைவிடப்பட்ட பிரியம் நிச்சயம் மறுபடியும் கைவிடப்படாது யாத்ரா!!
காட்சிகளை, கற்பனைகளை விரித்துச் சென்ற கவிதை கனவோடு முடிகிறது. சுற்றிலும் கோழியின் இறகுத்துளிகள் பறப்பதை உணர முடிகிறது. வாழ்த்துக்கள் தம்பி.
மிக அழகான கவிதை யாத்ரா. கைவிடப்பட்ட ஒவ்வொரு பிரியமும் தஞ்சமடைந்த, தஞ்சமடைய ஆசைப்படுவதைப் பற்றி எழுதியது அழகு.
அனுஜன்யா
மதன், சேரல், மண்குதிரை, அசோக், ராகவேந்திரன், மணிஜி, ஸ்ரீ, ஆறுமுகம், வித்யா, காந்தி, ராஜாராம், நிலா, காமராஜ், நேசமித்ரன்இ சுகிர்தா, மாதவராஜ், அனுஜன்யா, நந்தா அனைவருக்கும் நன்றி.
fine sir..
ஒவ்வொருவர் ஒளித்து வைத்த பிரியங்களும் இப்படிக் கவிதையின் வார்த்தைகளாகவும், வார்த்தைகளூடாகவும் உலாவிக் கொண்டிருக்கிறது...
நல்ல கவிதை...
ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.
உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்
Even though i don't understand fully, i know that i make sense. Keep going. Congratulation.
Regards,
Gowrisankar.
Even though i don't understand fully, i know that i make sense. Keep going. Congratulation.
Regards,
Gowrisankar.
கருத்துரையிடுக