புதன், 26 ஆகஸ்ட், 2009
ஊர்சுலா ராகவ் கவிதை
சகிக்க முடியாத ஆண்
ஒரு கவிஞனுமான எனது தந்தை
சமூகம் விரும்பாதவனாகவும்
தன் சுதந்திரத்தை அடிமைப் படுத்தும்
பெண்களுக்கு கணவனாக இருப்பதாகவும்
தன் போதை நாட்களிடையே உளறுகிறார்
வெளியெங்கும் சொல்லாடல்களுக்கான
நபர்களைத் தேடிக் கொண்டிருக்குமவர்
மதுவோடு இறைச்சியையும்
காலி செய்தவாறு சில கவிதைகள்
கிடைத்த நாளில் மகிழ்வுடன் எங்களிலிருந்து வெளியேறுகிறார்
நள்ளிரவு விடுதிகளில் கைவிட்டுச் செல்பவரை
தனது புரவலர் என்று அறிமுகப்படுத்தும்
அவரை புரிந்து கொண்ட பெண்ணொருத்தி
மனைவியாகக் கிடைக்க வழியற்று
காலம் கடந்து போய்விட்டதாகப் புலம்பும் போது
யாராலும் சகிக்க முடியாது
இச்சைகளை கவிதையில் புணர்ந்து கொண்டும்
நமைச்சல்களை உறக்கத்தில் கீறிக் கொண்டும்
ஏறக்குறைய பரி நிர்வாணமாகி விடுகிறார்
சில சமயம் தன் கவிதைகளுக்கு சில நாணயங்களை
பரிசாகக் கொண்டு இருப்பிடம் திரும்பும் அவர்
நள்ளிரவில் என்னை எழுப்பி நடனமாடுவார்
தன்னை ஒரு தந்தை இல்லையென்றும்
உன் தாயின் தோழன் அல்லது காதலன் என்றும்
பொய் சொல்வார்
கன்றாவி தான் ஒரு கவிஞன் தந்தையாய் இருப்பது
( இந்தக் கவிதையும் படிக்கும் போது லேசான புன்முறுவலை வரவழைத்தது. இக்கவிதையை எழுதிய ராகவ்வின் தந்தை ஒரு நவீன கவிஞர். இந்தப் பின்புலம் தெரிந்த பிறகு இக்கவிதையை கூடுதலாகவே ரசிக்க முடிந்தது. )
நன்றி - புது எழுத்து சிற்றிதழ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
9 கருத்துகள்:
கவிதை ஒரு அட்டகாச சிரிப்பையே வரவழைத்தது..
//கன்றாவி தான் // ரொம்ப ரொம்ப சிரித்தேன் இங்கே...
--வித்யா
//கவிதை ஒரு அட்டகாச சிரிப்பையே வரவழைத்தது..//
ரிப்பீட்டுப்பா.......
ஒரு தினுசாய் முடியும் என்று எதிர்பார்த்தேன். எதிர்பார்த்த முடிவே. அத்தனை கவரவில்லை.
உன்மத்தமும் யதார்த்தமும் பிணக்காகிற கவிதை.
உர்சுலாவுக்கும் குழந்தைகள் இருக்கலாம்.
எனினும் கவிதை ஆழமானது.
யாத்ரா ரசனைக்காரர். முள் vs முள்.
nanri nanba
நல்லாருக்கு. :-)))))))
:)
Thanks for sharing
thanks for sharing..
நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றிகள்
கருத்துரையிடுக