சனி, 28 பிப்ரவரி, 2009

இவர்களின் உறவினளா நீ

இவர்களின் உறவினளா நீ

வரவும் மாட்டாள்
போகவும் மாட்டாள்
வந்தால் போகவே மாட்டாள்
வருவாளோ மாட்டாளோ
இருக்கிறாளோ இல்லையோ
இருந்தாளோ இருப்பாளோ
இரு இல்லாமல் இரு எங்கும்
வந்து தொலைத்து விடாதே
தூர உறவின் மேன்மையான
பிம்பங்களை குலைப்பதற்கு
அவளல்ல நீ
அவளைப் போன்றவளெல்லாம் அவளாகி விட முடியுமா
அவளே கூட அவளல்ல
என்னவள் நீதான் ஆனால் நீயல்ல
பருகும் தேனீரின் வெம்மையில் குழலுலர்த்தி
ஆயிரம் பக்க நாவல் கண்களில் மிதக்கவிட்டு
கொலுசொலிக்க புடவை சரசரக்க உலவுபவளே
நகுலனின் சுசிலா
கலாப்பிரியாவின் சசிகலா
மனுஷ்யபுத்திரனின் சாரதா
இவர்களின் உறவினளா நீ

2 கருத்துகள்:

ஆதவா சொன்னது…

பருகும் தேனீரின் வெம்மையில் குழலுலர்த்தி
ஆயிரம் பக்க நாவல் கண்களில் மிதக்கவிட்டு
கொலுசொலிக்க புடவை சரசரக்க உலவுபவளே

வாவ்...... கலக்கல்... யாத்ரா...
கவிதையை விமர்சிக்கும் அளவுக்கக நான் பெரிய ஆளில்லை....

தொடருங்க.. நான் பின்னுக்கு வாரேன்.

yathra சொன்னது…

வாங்க ஆதவா, நல்வரவு