செவ்வாய், 2 ஜூன், 2009

தவம்


தவத்திலிருக்குமென்
விழிகளுக்கு பாலூட்டும்
கனத்து பருத்து மதர்த்து
திமிர்ந்த முலைகள்
தவப் பயண
இளைப்பாறலாய் மடிகிடத்தி
அனல் பறக்க
ஆவி பிடிப்பதாய்
கூந்தலைப் படர்த்தி போர்த்தும்
ஒளி புக முடியாமல் முழுதுமாய்
அடர் கானக இருள் வெளியில்
நாவின் கால்தடம் சரசரக்க
இலக்கற்று கிடந்தலைகிறேன்
யாத்ரீகனாய் வன மேனியெங்கும்
காற்றாய் விரல்களூர மெய் சிலிர்க்க
நரம்புகள் புடைத்து
கூடும் உதிர வேகம்
கரங்களில் இருமலை பிசைந்து
கசிந்து பாயும்
பால்நதியிடை கவிழ்ந்து
மூச்சடைகிறேன் மூழ்கி
மயிர்க்கால்களின் வேர்களை
மென்மையாய் வருடும்
நகத்துணுக்குகள்
திடீர்க் காற்றில் சட்டெனப்
புரளும் சருகுகளானோம்
எழுதியெழுதி தீராத
பிரபஞ்ச காவியத்தை
உழுதுழுது எழுதி
சற்றே ஓய்வெடுக்கையில்
ஓயாது படபடக்கும் தாள்
எழுதுகோலை மறுபடியும் ஊர்தலுக்கழைத்து
சற்றே பொறு
எழுதுகோல் விறைக்கட்டும்
உயிர்மை திரளட்டும்
அவிழ்த்தவிழ்த்து வாசித்து
ரசிக்கும் மற்றுமொரு
கவிதையை எழுதுகிறேன்.

19 கருத்துகள்:

Thamira சொன்னது…

வாவ்..வாவ்வ்.. என்ன அருமையான காமம். சமீபத்தில் இவ்வளவு அழகாய் காமத்தை மொழிந்த கவிதையை வாசித்திருக்கவில்லை. ரசனை.! அதுவும் முடிவில் கவிதையோடு காமத்தை முடிச்சிட்டிருந்த அழகு கொள்ளை.!

எழுதியெழுதி தீராத
பிரபஞ்ச காவியம்// உச்சம்.!

ஆ.சுதா சொன்னது…

நல்லக் கவிதை. ரசனை நுரைபொங்க
காம நதிபோல் செல்கின்றது கவிதை.
முடிவு நேர்த்தி.

நந்தாகுமாரன் சொன்னது…

எழுதித் தீராத கவிதை இது ... மொழி வீச்சு அருமை ... மிகப் பிடித்திருக்கிறது

தேவன் மாயம் சொன்னது…

கவிதையும்
காமமும்
பின்னிப்
பிணைந்துள்ளன!

மிக மிக அருமை.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

நேர்த்தியான கவிதை

-ப்ரியமுடன்
சேரல்

Karthikeyan G சொன்னது…

//திடீர்க் காற்றில் சட்டெனப்
புரளும் சருகுகளானோம்//

Really superb..

thanks!!

Ashok D சொன்னது…

கவிஞனுக்கு காமம்
சக்கரை பொங்கல்

Sugirtha சொன்னது…

Brilliant

ஆதவா சொன்னது…

ஹாஹா..... ரொம்பவும் ரொம்பவும் ரசித்து வாசித்தேன்.

அதிலும் எழுதுகோல், உயிர்மை என்றதும் குறுநகை வந்துவிட்டது.

ம்ம்... நமக்கு இன்னும் கவிதை எழுத வாய்ப்பு வரவில்லை!1!

பிரவின்ஸ்கா சொன்னது…

//எழுதியெழுதி தீராத
பிரபஞ்ச காவியத்தை
உழுதுழுது எழுதி
சற்றே ஓய்வெடுக்கையில்
ஓயாது படபடக்கும் தாள்
//

கவிதை அருமை .

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

பெயரில்லா சொன்னது…

காமத்தை ரசிக்கும்படியாகச் சொன்ன கவிதை இது. விரசமற்றிருப்பதே அதன் சிறப்பு.

Venkatesh Kumaravel சொன்னது…

எங்கேயோ போயிட்டீங்க சார்...
புகைப்பட்ம் எங்கே?

On a serious note, கவிதை இரட்டைக்குழல் துப்பாக்கி!

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு யாத்ரா.

MSK / Saravana சொன்னது…

கலக்கல் யாத்ரா.. :)

மாதவராஜ் சொன்னது…

அடேயப்பா!...
கவிஞனே நீ வாழ்க!

அகநாழிகை சொன்னது…

மாப்ளை,
நல்லா எழுதியிருக்கே.
(என்னை நினைச்சு எழுதிட்டியோன்னு நினைச்சேன்)

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

யாத்ரா சொன்னது…

ஆதி, முத்து, நந்தா, தேவன்மாயம், சேரல், கார்த்தி, அசோக், சுகிர்தா, ஆதவா, பிரவின்ஸ்கா, வடகரை வேலன், வெங்கிராஜா, சுந்தர், சரா, மாதவராஜ், அகநாழிகை அனைவருக்கும் என் நன்றிகள்.

மணல்வீடு சொன்னது…

oooi pulavare
num pattil pizhai irrukirathu.
rendu malaiya pacanja nathi kasiuma,pravagikkuma?

anujanya சொன்னது…

காமம் என்றதும் எத்தனை பாராட்டுகள்! ஆதி,மாதவ், வேலன், சரா உட்பட. ஹ்ம்ம், எல்லாம் சுந்தரால ஏற்படும் விளைவுகள் :)

மொழி - ஆஹா!

அனுஜன்யா