வியாழன், 28 மே, 2009

நினைக்கையில்...........................


பணி நிமித்தமான
இந்த நெடுந்தூர
இரவு இரயில் பயணத்தில்
கட்டிடங்கள்
மரங்கள்
குகைகள் மலைகளென
மாறி மாறி
பார்வை தடைபட
மறைத்துக் கொண்டிருக்க
திரைகளணைத்தும் நீங்கிய தருணம்
பெருமேகப் பொதியொன்று
கடக்கிறது கிரகணமாய்
ஊரும் மேகம் விலகக் காத்திருக்கையில்
பூத்த விழிகளைப்
போர்த்தியது இமைகள்
இரவெலாம் இந்த
யன்னல் கம்பி பிடித்து
மூச்சிறைக்க
ஓடி வந்திருக்கும்
ஊமை நிலவு
என்பதை
இந்த அதிகாலையில்
நினைக்கையில்...................

16 கருத்துகள்:

சுபஸ்ரீ இராகவன் சொன்னது…

:-))
ரொம்ப அழகு கவிதை
பல நேரம் , நாம் தேடும் போது தட்டுபடாமலும் ..
நெருங்கி வரும்போது நாம் கவனிக்காமலும்
நகர்கிறது வாழ்க்கை

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

ரசித்தேன். நல்ல கவிதை யாத்ரா.

-ப்ரியமுடன்
சேரல்

ஆதவா சொன்னது…

அழகான காட்சி... கற்பனை!!!!

மதன் சொன்னது…

வாழ்த்துக்கள்.. நீண்ட நாட்களாக கவனித்து வருகிறேன்.. இன்றுதான் வேளை வந்தது.. வாழ்த்த..! :)

நந்தாகுமாரன் சொன்னது…

அழகு

ஆ.சுதா சொன்னது…

அழகாக உள்ளது யாத்ரா. மற்றக் கவிதையிலிருந்து விலகி இது ரசனையானதாக உள்ளது.

Ashok D சொன்னது…

நிலா பயணம் நினைக்கையில்...
பிரமாதம்....

ச.முத்துவேல் சொன்னது…

புன்முறுவல் பூக்கவைக்கும் ரசனையான கவிதையிது. உங்களின் கவிதைகளிலிருந்து நானறிந்தவரை சற்று வித்தியாசமானது. இப்படியும் எழுதுவேன் என்று நிரூபித்திருக்கிறீர்கள். நல்லாயிருக்குது.

அகநாழிகை சொன்னது…

மாப்ளே யாத்ரா,
நான் வேறென்ன சொல்லப்போகிறேன்,
நன்றாக இருக்கிறது.
திருவினையிலிருந்து வெளிவந்த
மனோபாவத்தில் இந்தக்கவிதை
மேலும் அழகாக எனக்குத் தெரிகிறது.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

பிரவின்ஸ்கா சொன்னது…

அழகு ... அருமை..
ரசித்தேன்

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

மாதவராஜ் சொன்னது…

சுகமான கவிதை.....

ny சொன்னது…

உங்கள் மற்ற கவிதைகள்
இதனினும் அழகு!!
:)

TKB காந்தி சொன்னது…

வார்த்தைகளை அழகா கோர்த்திருக்கீங்க, நல்லா இருக்கு :)

இராவணன் சொன்னது…

மிக அழகு யாத்ரா

யாத்ரா சொன்னது…

சுபஸ்ரீ, சேரல், ஆதவா, மதன், நந்தா, முத்து, அசோக், முத்துவேல், அகநாழிகை, பிரவின்ஸ்கா, மாதவராஜ், கார்டின், காந்தி, இராவணன் அனைவருக்கும் நன்றி.

anujanya சொன்னது…

மெல்ல வருடும் காற்று போல மனதை வருடும் கவிதை. நல்லா இருக்கு யாத்ரா.

அனுஜன்யா