வியாழன், 18 ஜூன், 2009

இன்றைய நாட்குறிப்பு


நேற்று கண்ட காட்சியும்
கொண்ட கோலமும்
பரிமாறல்களும்
பொய்யெனவும் மாயையெனவும்
தோற்றப்பிழையெனவுமானது இன்று

இக்கரைக்கு
அக்கரை பச்சை
அக்கரைக்கு
இக்கரை பச்சை
எக்கரைக்கு
எக்கரை பச்சை
பச்சை நிறம் எப்படியிருக்கும்
நிறம் நிஜமா
கற்பனையா
ஒட்டகத்திற்கு
பச்சை பிடிக்குமா
இவைகளெல்லாம்
கானலின் நீரோ காட்சிப்பிழை தானோ
அற்ப மாயைகளோ இவற்றுள்
ஆழ்ந்த பொருளில்லையோ
பார தீ,,,,,,,,,,,,,,,,,

15 கருத்துகள்:

நந்தாகுமாரன் சொன்னது…

ஹ்ம் ... என்னை ஏமாற்றத் தொடங்கிவிட்டீர்கள் ... இம்மாதிரி சாதரணமான ஒரு கவிதை எழுதும் உரிமையெல்லாம் உங்களைப் போன்ற கவிஞர்களுக்கு இல்லை ... sorry ...

யாத்ரா சொன்னது…

கவிதை இல்லை நந்தா இவைகள், இவை என் ஒப்பாரி.

நந்தாகுமாரன் சொன்னது…

ம்ஹூம் ... நீங்கள் ஒப்பாரி வைத்தாலும் அது கவிதையாகத் தான் இருக்கும் இருக்க வேண்டும்

Karthikeyan G சொன்னது…

நல்லா இருக்கு!!

M.Rishan Shareef சொன்னது…

அன்பின் யாத்ரா,

//நேற்று கண்ட காட்சியும்
கொண்ட கோலமும்
பரிமாறல்களும்
பொய்யெனவும் மாயையெனவும்
தோற்றப்பிழையெனவுமானது இன்று//

புரிகிறது.

//இக்கரைக்கு
அக்கரை பச்சை
அக்கரைக்கு
இக்கரை பச்சை
எக்கரைக்கு
எக்கரை பச்சை
பச்சை நிறம் எப்படியிருக்கும்
நிறம் நிஜமா
கற்பனையா
ஒட்டகத்திற்கு
பச்சை பிடிக்குமா
இவைகளெல்லாம்
கானலின் நீரோ காட்சிப்பிழை தானோ
அற்ப மாயைகளோ இவற்றுள்
ஆழ்ந்த பொருளில்லையோ
பார தீ,,,,,,,,,,,,,,,,,//

இது புரியவில்லை. பல தடவை படித்துப் பார்த்தேன். ஆனாலும் புரியவில்லை.

யாத்ரா சொன்னது…

அன்பு நந்தா, நீங்கள் என் மீது வைத்திருக்கும அக்கறையும் அன்பும் என்னை நெகிழச் செய்கிறது. மிக்க நன்றி,

என் பிரச்சனையின் அடியாழத்திற்கு சென்றிருக்க வேண்டும், நல்ல கவிதை வந்திருக்கும், ஆனால் அந்த அடியாழத்திற்குச் செல்ல, இந்த உடைந்த நிலையில் மிகவும் பயமாய் இருந்தது, இருக்கிறது, ஆனால் எதையாவது எழுதாமலும் இருக்க முடியாதிருந்தது அத்தருணம்.

எனக்கே கூட திருப்தியில்லை தான் இதில், ஆனா இந்த வாழ்க்கை எனக்கு அப்படித்தானே இருக்கு, இதை வைத்துக் கொண்டு தான் திருப்தியான கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். ஆனா இதை எழுதும் போது மனது எதிலுமே ஒட்டாத மாதிரி இருந்தது, அது அப்படியே பிரதிபலித்து விட்டது அதில்.

இம்மாதிரி சறுக்குகிற இடங்களிலெல்லாம் எனக்கு அறிவுறுத்தி நீங்கள் சுந்தர்ஜி மற்றும் நண்பர்கள் அனைவரும் என்னை சரியான பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறீர்கள், உங்கள் அக்கறை கலந்த அன்பு என்னை மேலும் நெகிழச்செய்கிறது.

யாத்ரா சொன்னது…

அன்பு ரிஷான்,

இந்த பச்சை தான் எனக்கு பிரச்சனையே, அது எனக்கு வேணுமா வேண்டாமா என்பதை என்னால் தீர்க்கமாக சொல்ல முடியவில்லை, இந்த பச்சையைத் தேடி முடிவிலாது அலைந்து கொண்டிருக்கிறேன், சலிக்கிறேன். வேண்டாமென்கிறேன் ஒரு தருணம், நான் பாலை ஒட்டகம், எனக்கு எதற்கு பச்சை என்று எனக்குள்ளேயே கேள்விகள்.
என்னை அலைக்கழிக்கிறது ஆழ்ந்த பொருளிள்ளாத இந்த அற்ப மாயைகள்.

காமராஜ் சொன்னது…

யத்ரா சார் மிக மிக அருமை.

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

இந்தக் கவிதை முழுமையடையாதது போன்ற ஒரு உணர்ச்சி, இரண்டு மூன்று முறை படித்த பிறகும் வருகிறது.

கண்ட காட்சி / கொண்ட கோலம் மாதிரியான பல பேர் பல முறை உபயோகித்து சலித்துப் போன கவிதை நடையும் இதற்குக் காரணமாயிருந்திருக்கலாம் :(

ச.முத்துவேல் சொன்னது…

நடந்தவை நல்லதற்கே என்று உணரும் காலம் நிச்சயம் வரும்.அதுவரை வலி பொறு நண்பா. வேறேன்ன சொல்ல? ஒரு கவிதையாக, இது எனக்குப் பிடித்திருக்கிறது.

நந்தாகுமாரன் சொன்னது…

யாத்ரா, இதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது - இம்மாதிரி அவ்வப்போது நடக்கும் ஆனாலும் எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் விதி ... எனவே எனக்குப் பிடிக்கவில்லை என்ற கருத்தை எல்லாம் மதிக்காமல் எழுதிக் கொண்டே இருங்கள் ... எழுதுவதால் உங்களுக்கு நிகழும் expression and outlet மிக முக்கியம்

மாதவராஜ் சொன்னது…

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னதுதான் சரியெனப் படுகிறது. முதல் இரண்டு வரிகளை வேறொரு இடத்திலிருந்து ஆரம்பித்திருந்தால் கவிதையின் திசையும், அடர்த்தியும் கூடியிருக்கும் என நினைக்கிறேன்.

Ashok D சொன்னது…

இது ஒரு பித்த நிலைதான் யாத்ரா..
Just let it be....

யாத்ரா சொன்னது…

நந்தா, கார்த்தி, ரிஷான், காமராஜ், ஜ்யோவ்ராம்சுந்தர், முத்துவேல், மாதவராஜ், அசோக் அனைவருக்கும் நன்றி.

இரசிகை சொன்னது…

ithu kaviyin aarokkyamaana pulambal..
barathyin kavi varkalain ularalkal mudinthu mudiyaamalum..

rasiththen