சனி, 16 மே, 2009

நேசம்



ஜன்னலில் நீளும் பசுவின் வாயில்
இட்லி ஊட்டுவாள் அம்மா
பாலுண்ண மறுக்கும் கன்றிற்கு
புட்டிப்பாலூட்டுவார் அப்பா
அம்மு படித்துறை மீன்களுக்கு
பொரி போடுவாள்
பொட்டிப்பாம்பிற்கு பாலூற்றுவார்கள் தெருவில்
மதியம் காகத்திற்கு சோறு
தினம் வரும் குரங்கு
கடைக்காரரிடம் பழம் வாங்கிச்செல்லும்
பக்கத்து வீட்டு அக்கா
பூனையை மடியிலேயே வைத்திருப்பாள்
இணையமையத்தில் அவர் தோளைவிட்டு
இறங்கவேயிறங்காது கிளி
பிஸ்கட்டின் ஒரு முனையை வாயில் வைத்து
மறுமுனையை நாயுடன் பகிர்ந்துகொள்வாள்
எதிர்வீட்டு யுவதி
இன்று இருசக்கர வாகனத்தில்
ஏற்றி சாகடித்தேன்
அந்த நாயை

24 கருத்துகள்:

ஆ.சுதா சொன்னது…

இன்று இருசக்கர வாகனத்தில்
ஏற்றி சாகடித்தேன்
அந்த நாயை //
கடைசி வரியில் பகீரென்கிறது.

நேசமற்று திரியும் 'யாரோ'வை பற்றி எழுதியிருக்கீங்க. எல்லோருக்கும் கிடைக்கும் நேசம் நம்மிடம் மறுக்கப் படும் போது அதனின் உணர்வுகள் விசித்திரமானது. அதை பதிவு செய்து இருக்கீங்க.

மாதவராஜ் சொன்னது…

மறுக்கப்படும், நிராகரிக்கப்படும் வேதனை என்ன என்பது அடிபட்டுச் செத்த நாயின் மரணத்தில் இருக்கிறது. கவிதை மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

என்னென்னவோ நினைவுகளைக் கிளறி விட்டீர்கள் யாத்ரா. கவிதை என்னவோ செய்கிறது.

-ப்ரியமுடன்
சேரல்

சென்ஷி சொன்னது…

//இன்று இருசக்கர வாகனத்தில்
ஏற்றி சாகடித்தேன்
அந்த நாயை//

:((((

வேத்தியன் சொன்னது…

இன்று இருசக்கர வாகனத்தில்
ஏற்றி சாகடித்தேன்
அந்த நாயை
//

கடைசி வரிகள் திருப்பம்...
அற்புதமான வரிகள்...
ரசித்தேன்...

ஆதவா சொன்னது…

நல்லா இருக்குங்க..... இதேமாதிரியான தவறை நானும் செய்திருக்கிறேன்!!!! வேற வழியில்லாமல்

ஆதவா சொன்னது…

நல்லா இருக்குங்க..... இதேமாதிரியான தவறை நானும் செய்திருக்கிறேன்!!!! வேற வழியில்லாமல்

Venkatesh Kumaravel சொன்னது…

எதிர்பாராத முடிவு.. அருமை! உங்கள் பாணியிலிருந்து விலகியிருக்கிறீர்கள் ஒரு இடைவெளிக்கு பின்னால்..

selventhiran சொன்னது…

பொறி // பொரி

சகவாச தோஷத்தில் திருத்தம் சொல்லிட்டேன். கவிதையை நெம்ப ரசித்தேன்.

மண்குதிரை சொன்னது…

நல்லா இருக்கு நண்பா. இன்று மறுபடியும் தொடர்கிறேன்.

மண்குதிரை சொன்னது…

நல்லா இருக்கு நண்பா. இன்று மறுபடியும் தொடர்கிறேன்.

நந்தாகுமாரன் சொன்னது…

இந்தக் கவிதையி்ல் communication gap என்பது கவிதையை விட பயங்கரமாக இருக்கிறது

நந்தாகுமாரன் சொன்னது…

மிக நன்றாக வந்திருக்கக் வேண்டிய கவிதை இது - கவிதையின் அதிர்ச்சியான climax-இற்கு (இதைத் தான் பயங்கரம் என்றேன்) இட்டுச் செல்லும் வரிகளில் முக்கியமாகத் தெரிவிக்க வேண்டியது சரிவர சொல்லப் படவில்லையோ என்று தோன்றுகிறது ... இதைத் தான் communication gap என்றேன் (இதையும் பயங்கரம் என்கிறேன் ஏனெனில் இது கவிதைக்கே எதிராகப் போய்விடும் வாய்ப்புகள் நிறைய) ...

நந்தாகுமாரன் சொன்னது…

நான் இவ்வளவு சொல்வதற்குக் காரணம் -

//

ஏற்றி சாகடித்தேன்

//

என்ற வரி தான் ...

இது கொலையா விபத்தா என்று படிப்பவன் கேள்வி கேட்க கூடாது ... அதனால் தான் ...

ச.முத்துவேல் சொன்னது…

என்னவாயிற்று யாத்ரா? முதல் வாசிப்பிலேயே புரிந்துவிடுகிறது. ஆனால் எனக்கு இம்மாதிரியான கவிதைகளைப் பிடிக்கும். நல்ல பொருத்தமான எடுத்துரைப்புகள். பல சிந்தனைகளை, கோணங்களை எழுப்புகிறது. நேசத்தினால் கொலையும் செய்யும் துணிவு, விரோதம் வந்துவிடுகிறது அல்லவா?

நல்லாயிருக்குது.

TKB காந்தி சொன்னது…

மற்ற நேசங்களை பகிர்ந்து கொள்ள முடிந்து, காதலி(?)யின் மற்ற நேசங்களை மட்டும் முடிவதில்லை. நல்லா இருக்கு யாத்ரா.

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

படிப்பவர்கள் சுலபமாகத் தங்களை relate செய்து கொள்ள முடிகிற கவிதை.

Ashok D சொன்னது…

நல்லாயிருக்கு

Thamira சொன்னது…

அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது..

அகநாழிகை சொன்னது…

வழக்கம்போலவே உங்கள் தனித்துவமான கவிதையில் ஒன்று..
யாத்ரா.
நேசித்தலுக்கும்,வெறுத்தலுக்கும் அவரவருக்கேயான கற்பிதங்களை உள்வாங்கிக் கொள்ளச்செய்கிறது கவிதை.
வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் சொன்னது…

இன்று இருசக்கர வாகனத்தில்
ஏற்றி சாகடித்தேன்
அந்த நாயை \\

குரூரம் தெரிகின்றது

அதன் பின்னே

தங்கள் காதலின்

ஆழம்
மிக தெரிகின்றது .

Deepa சொன்னது…

//Nundhaa said: இது கொலையா விபத்தா என்று படிப்பவன் கேள்வி கேட்க கூடாது ... அதனால் தான் ...//

எனக்கும் இந்தக் கேள்வி எழுந்தது. ஆரம்ப வரிகள் அட்டகாசம்.

பிரவின்ஸ்கா சொன்னது…

அருமையா இருக்குங்க

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

யாத்ரா சொன்னது…

முத்து, மாதவராஜ், சேரல், சென்ஷி, வேத்தியன், ஆதவா, வெங்கிராஜா, செல்வேந்திரன் ( நன்றி மாற்றி விட்டேன்), மண்குதிரை, நந்தா,முத்துவேல், காந்தி, சுந்தர், அசோக், ஆதி, அகநாழிகை, ஜமால், தீபா, பிரவின்ஸ்கா அனைவருக்கும் நன்றிகள் பல.