செவ்வாய், 12 மே, 2009

மோனவெளிநின்ற மழை நினைவுகளாய்
திட்டுத் திட்டு தேக்கங்கள்
அலையுமென்னுருவம்
காத்திருந்தேன் அசைவடங்க
சலனம் மட்டுப்பட
கூடிவரும் பொழுதில்
கல்லெறிந்ததாய்
விழுந்ததொரு மழைத்துளி
தாரைகள் கூட
குட்டித்தேக்கத்திற்கு
குடை விரித்து
அமர்ந்திருக்கிறேன்
அசைவற்றயென் பிம்பம் தரிசிக்க

18 கருத்துகள்:

மண்குதிரை சொன்னது…

மழையில் நழுவுவதைப் போல்தான்

இரண்டாவது வாசிப்பில்தான் பிடிபடுகிறதென் சிறு மூளைக்கு.

பாஸ்கர் சொன்னது…

கவிதை நன்றாக இருக்கிறது யாத்ரா.
நிறைய எழுதுங்கள் இதைப் போல்.

அன்புடன்
பாஸ்கர்.

thevanmayam சொன்னது…

அசைவற்ற உங்கள் பிம்பம்.....
அருமை!!
உணரமுயலும் முயற்சியும் அருமை!!

Nundhaa சொன்னது…

வாழ்க நார்சிஸ்சஸ் ... வெல்க பிம்பம் ...

ஆ.முத்துராமலிங்கம் சொன்னது…

அருமை அருமை யாத்ரா அவர்களே,
மிகவும் நன்றாக இருக்கு கவிதை.

yathra சொன்னது…

அன்பு நந்தா,

உங்கள் கவிதை ஒன்றில் கூட நார்சிசஸ் என்று எழுதியிருந்தீர்கள், என்ன என்று குழம்பியபடியிருந்தேன், பிறகு இப்போது இதில் குறிப்பிட்டிருந்தீர்கள், எப்படி தெரிந்து கொள்வது என்றிருந்த தருணத்தில், கூகுளில் தேட, விரிந்த பக்கத்தில் இருந்த படம் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது,

//As divine punishment he falls in love with a reflection in a pool, not realizing it was his own, and perishes there, not being able to leave the beauty of his own reflection//

இந்த வரிகளைப் படித்ததும் மிகவும் அதிர்ந்துபோனேன்.

நார்சிசஸை இந்த கணத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி

Karthikeyan G சொன்னது…

Ahaa.. Super!

TKB காந்தி சொன்னது…

நல்லா இருக்கு யாத்ரா. ’கல்லெறிந்ததாய்’ யாரையோ சொல்றமாதிரி இருக்கு ஆனா முழுசா புரியலங்க.

எனக்கு மட்டும் தான் அப்படித்தோணுது போல :(

Manalveedu சொன்னது…

monaveli
nallarukku
harikrishnan

ஆதவா சொன்னது…

நல்லா இருக்குங்க... ஓரிருமுறை படித்தேன்... விளங்கியதா விளங்கவில்லையா என்பது வாசிப்புக்கு அப்பாற்பட்டது!!1

ஆதிமூலகிருஷ்ணன் சொன்னது…

முழுதும் அழகான கவிதை.!

மாதவராஜ் சொன்னது…

கவிதை அருமை.
ஒரு மழைத்துளி, பிம்பங்களை அசைக்கும் வல்லமை கொண்டவைதான்.

மின்னல் சொன்னது…

//கல்லெறிந்ததாய்
விழுந்ததொரு மழைத்துளி//

வித்தியாச‌மா இருக்கு யாத்ரா.

எறிய‌ப்ப‌ட்ட‌ க‌ல்லை ம‌ழைத்துளி போல‌ ஏத்துகிறீங்க‌ளா

விழும் ம‌ழைதுளியா பார‌மா பார்க்க‌ நினைக்கிறீங்க‌ளா

ஆயினும் மிக‌ வித்தியாச‌மான‌ சிந்த‌னை.

//தாரைகள் கூட//

இந்த‌ வ‌ரி ஏன் சேர்த்து இருக்கீங்க‌ன்னு தெரிய‌லை.

என‌க்கு புரியாத‌ கார‌ண‌த்தால் தொக்கி நிற்ப‌து போல‌ தெரியுது.

yathra சொன்னது…

மண்குதிரை, பாஸ்கர்,தேவன்மாயம்,
நந்தா, முத்து, கார்த்தி, காந்தி, ஹரி, ஆதவா, ஆதி, மாதவராஜ், மின்னல் அனைவருக்கும் நன்றி.

காந்தி, மின்னல், ஆதவா, ஒரு விளக்கம்

முதலில் ஒரு மழைத்துளி விழுகிறது, பிறகு மழைத் தாரைகள் அதிகரிக்கிறது, அதனால் குட்டித் தேக்கத்திற்கு குடை பிடித்து,,,,,,

நட்புடன் ஜமால் சொன்னது…

விளங்கிவிட்டது என தான் நினைத்திருந்தேன்

கருத்துகள் அனைத்தும் படித்ததில் ஒரு வேலை சரியாக விளங்கயில்லையோ என ஐயமுறுகிறேன்

\\கூடிவரும் பொழுதில்
கல்லெறிந்ததாய்
விழுந்ததொரு மழைத்துளி\

நான் விளங்கியதாக நினைத்தவிடம் இது தான் ...

சுபஸ்ரீ இராகவன் சொன்னது…

வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை
ஆழம் உணர்ந்து மௌனமானேன்

இராவணன் சொன்னது…

மிக நல்ல பதிவு யாத்ரா.

பா.ராஜாராம் சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு யாத்ரா.