வெள்ளி, 15 மே, 2009

பரவசம்



மெதுவாய் ஊர்ந்து செல்ல
பிடியிலிருந்து நழுவி
அகப்பட்டும் படாமலும்
போக்குக்காட்டி
தவணையில் ஆடைவிலக்கி
மெல்ல மர்மங்கள் அவிழ்த்து
திரைவிலக்கி
தழுவி
ஒன்றாய் கலந்து
மல்லுக்கட்டி
உணர்வெழுச்சியில்
கணமொரு அனுபவமாய்
மின்னற்கீற்றுப் பொழுதில்
தாவும் நிச்சயமற்ற அர்த்தங்களில்
தரிசனமாகும் கவிதை தருணம்
புணர்ச்சியின் உச்சம்.

12 கருத்துகள்:

thamizhparavai சொன்னது…

கவிதை பிடிக்கும் அனுபவத்தின் அழகிய கண்காட்சிக் கவிதை இது. நன்றாக இருக்கிறது யாத்ரா.

ஆதவா சொன்னது…

வெகு ஜோர். அந்த பரவசம் இன்னும் நிகழாமலேயே நிகழ்ந்ததைப் போன்று உணர்கிறேன்!!! :)

மண்குதிரை சொன்னது…

நல்லா இருக்கு யாத்ரா.

Venkatesh Kumaravel சொன்னது…

கவிதையின் தொடக்கமும் முடிவும் ரசித்தேன். சந்திப்பு பற்றிய பதிவினையும் வாசித்தேன். அருமை!
பி.கு: நானும் புணர்ச்சி பத்தி எழுதினேன்.. ஆனா ட்ராஃப்டில் இருக்கு. இப்போதைக்கு வெளியிடும் எண்ணம் இல்லை!

நந்தாகுமாரன் சொன்னது…

ம்ஹூம்

ச.முத்துவேல் சொன்னது…

நல்லாயிருக்கு யாத்ரா,
வரிக்கு வரி ரசித்தேன். அதிகபட்சமாய் உணர்வெழுச்சியில் என்கிறவரியை.

@வெங்கிராஜா
தயக்கம் வேண்டாம். சீக்கிரம் வெளியிடுங்கள்.

ஆ.சுதா சொன்னது…

நான் கொஞ்சம் தாமதம்!!!

எப்பவும் போல் வரியை தீட்டி இருக்கீங்க. நல்லா இருக்கு யாத்ரா!

ஆ.சுதா சொன்னது…

ஏன் ஓட்டுப் பெட்டி வைக்கவில்லை?
வைக்கலாமே.. யாத்ரா.

TKB காந்தி சொன்னது…

இது அருமை யாத்ரா.

Ashok D சொன்னது…

வேகமாக ஓடிசெல்கிறது வாசிப்பில் வார்த்தைகள்

நட்புடன் ஜமால் சொன்னது…

புணருதலை கவிதையாக்கியுள்ளீர்கள்(ளா)

கவிதையே புணர்ந்தா

மிக அருமை ...

யாத்ரா சொன்னது…

தமிழ்ப்பறவை, ஆதவா,மண்குதிரை, வெங்கிராஜா, நந்தா, முத்துவேல், முத்து, காந்தி, அசோக், ஜமால் அனைவருக்கும் நன்றி,

முத்து, ஓட்டுப்பெட்டி எப்படி வைக்க வேண்டுமென எனக்கு தெரியவில்லை.