ஞாயிறு, 10 மே, 2009

நண்பர்களே தோழிகளே



அப்படியென்ன குற்றமிழைத்துவிட்டேன்
பழைய நேசமில்லை விழிகளில்
நண்பா நீ முகம் பார்த்துப் பேசி
எவ்வளவு நாளாயிற்று
தோழி மதிய உணவைப் பகிர
ஏன் அழைப்பதில்லை இப்பொழுதெல்லாம்
தோழி பார்வையிலேயே என்னை
பொறுக்கியென உணரச்செய்கிறாய்
மதுவருந்தவும் அழைப்பதில்லை
நண்பா நீ இப்பொழுதெல்லாம்
அரட்டைப்பெட்டியில் என்
நூறு offline செய்திகளுக்கும்
ஒரு மறுமொழியுமில்லை தோழிகளே
ஒரு குறுஞ்செய்தியில்லை
எப்போதும் நிராகரிக்கப்படுகிறது
என் அலைபேசி அழைப்புகள்
மின்மடல்களுக்கு பதிலுமில்லை
சந்திக்க வருவதாய் சொன்னபோது
வீட்டிலிருந்தே இல்லையென்றீர்
நரகலைக் கண்டதாய்
முகம் திருப்பிக் கடந்துவிடுகிறீர்
ஒரு கோப்பைத் தேனீரோடு
தனியாய் பேசி புகைத்து
சில நேரங்களில் இப்படியெழுதிக்கொண்டு
கைவிடுதலுக்கும் விலகலுக்கும்
குறைந்தபட்சம் காரணங்கள்
தெரிந்தாலாவது,,,,,,,,,,,,,,,,,
தொந்தரவு செய்யவில்லை இனி
மனத்தாங்கல்களுமில்லை
என்றேனும் என் மீதான
வெறுப்பும் கோபமும் விலகுமாயின்
குற்றவுணர்வின்றி தயங்காமல்
ஒரேயொரு குறுஞ்செய்தியனுப்புங்கள்
அடுத்த கணம் உங்கள்
அலைபேசியொலிக்கும்

15 கருத்துகள்:

மண்குதிரை சொன்னது…

நல்லா இருக்கு யாத்ரா

Karthikeyan G சொன்னது…

fine Sir..

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

இது சொந்த உணர்வா? இல்லை பொதுவான நிகழ்வா?

-ப்ரியமுடன்
சேரல்

Thamira சொன்னது…

அவ்வளவாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை தோழர்.!

ச.முத்துவேல் சொன்னது…

புறக்கணிப்பு வலியாந்துதான்.அதிலும் காரண்மே தெரியாமல் இருப்பது, விடைகிடைக்காமல் தொடர்ந்து புறக்கணிக்கபடுவதும்.. நல்லாயிருக்கு யாத்ரா.
(ஆமா, நான் இன்றனுப்பிய குறுஞ்செய்திக்கு ஏன் இதுவரை அழைப்பில்லை.JUst for fun. But my SMS is true :))

மாதவராஜ் சொன்னது…

நுட்பமான விஷயத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். இன்னும் வரிகளைக் குறைத்து, கவிதையை வீரியமிக்கதாய் மாற்றியிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. பாராட்டுக்கள்.

ஆ.சுதா சொன்னது…

எனக்கு பிடித்திருக்கிடன்றது.

நந்தாகுமாரன் சொன்னது…

ம்ஹூம் ...

Kumky சொன்னது…

எளிய வார்த்தைகளில் நுட்பமான விஷயம்.
நன்றாக வந்திருக்கிறது யாத்ரா...வார்த்தைகளை இன்னும் கொஞ்சமாக குறைத்திருக்கலாம் என்ற எண்ணத்தை தவிர.

யாத்ரா சொன்னது…

மண்குதிரை, கார்த்தி, சேரல், ஆதி, முத்துவேல், மாதவராஜ், முத்து நந்தா, கும்க்கி, தங்கள் அனைவரின் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

இதிலுள்ள குறைகள் உண்மை, உணர்வு பெருக்கில் தொழில்நுட்பம் வடிவம் எல்லாம் மறந்து சொந்தக்கதையை கொட்டித் தீர்த்து விட்டேன் மடை திறந்த வார்த்தைகளில்,,,,,

அன்பு சேரல், என் எல்லா கவிதைகளும் என் சொந்த உணர்விலிருந்தே பிறக்கிறது, என் அனுபவத்திற்குட்பட்டதே எல்லாமும்,

மணல்வீடு சொன்னது…

vanakkam
yennathukku intha oppari?
nesamalum aluvachi valla.innungonjum kanna kasukku rasa.
mu.harikrishnan

யாத்ரா சொன்னது…

அன்பு ஹரிகிருஷ்ணன், தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

Venkatesh Kumaravel சொன்னது…

பிற கவிதைகளின் வீரியம் இல்லை. தனிமையின் குமுறல் மட்டும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.

Unknown சொன்னது…

Yathra,
Wonderful.

CS. Mohan Kumar சொன்னது…

சுய இரக்கம் அதிகம் இருந்தாலும் கவிதை நன்றாக உள்ளது.