புதன், 17 ஜூன், 2009

ஒரு சந்திப்பு


சமீப காலமாய் அடிக்கடி
அரூப ரூபமாய் தோன்றிக்கொண்டு
எவளென்றறியாத எவளோவாக
இருந்த அவள்
இன்று பிரசன்னமாகிவிட்டாள்
எத்தனை யுகங்களாக
இந்தச் சந்திப்பிற்க்காய்
காத்திருந்தோமென
இருவர் கண்களும்
பேசிக்கொண்டன

13 கருத்துகள்:

Sugirtha சொன்னது…

wow! this is lovely :)

anujanya சொன்னது…

இது யாத்ரா தானா? இதனால் சில நல்ல கவிதைகள் வராமல் போகலாம்; ஆனால் யாத்ரா முகத்தில் புன்னகையும், நிம்மதியும் தோன்றினால், அதுவே கவிதைதான். ம்ம், நடக்கட்டும் :)

அனுஜன்யா

Vidhoosh சொன்னது…

மீண்டுமா..நடத்துங்கள் நண்பரே. ஆல் தி பெஸ்ட்.

Ashok D சொன்னது…

:-)

Deepa சொன்னது…

:-) அனுஜன்யா சொன்னதற்கு ஒரு ரிபீட்!

பெயரில்லா சொன்னது…

நல்லா இருக்கு யாத்ரா.

இது உண்மையா இருந்தா இன்னும் நல்லா இருக்கும்.

வாழ்வை மீண்டும் மீட்டெடுக்க வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

Yathra,
I red all your poetry. Its simply superb. I don't find any words to describe, even if i try i am sure i would fail.

Hearty congratulations.

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

யாத்ரா, கவலைப்படாம இன்னொரு ரவுண்ட் வாங்க :)

அரூப ரூபமாய்... (இது கொஞ்சம் இடிக்குதோ!).

Thamira சொன்னது…

காதலியை வரவேற்றால் இப்படியல்லவா வரவேற்க வேண்டும்.!

Venkatesh Kumaravel சொன்னது…

இந்த தலைப்பையும் தொட்டாச்சா? வழக்கமான யாத்ராவை மிஸ் செய்வது போல் இருப்பதால், காதல் கவிதைகள் மட்டுமே எழுத ஆரம்பித்துவிடாதீர்கள்!

ச.முத்துவேல் சொன்னது…

எப்படி அனுஜன்யா! யாத்ராகிட்ட நேர்ல பேசினமாதிரி சொல்றிங்க! ஒருவேளை யாத்ரா உங்கக்கிட்டயும் சொன்னாரோ!

@சுந்தர்ஜீ
எனக்கும் நீங்க சொன்ன இடத்துல போன கவிதையிலேயே இடிச்சுது.

யாத்ரா
கண்பேசும் வார்த்தகள் முதல் சந்திப்பிலேயே 45 நிமிடம்.இதெல்லாம் ரெம்ப ஓவர். ஆமா.

பிரவின்ஸ்கா சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு .
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

யாத்ரா சொன்னது…

சுகிர்தா, அனுஜன்யா, விதூஷ், அசோக், தீபா, வடகரை வேலன், கௌரிஷங்கர், ஜ்யோவ்ராம்சுந்தர், ஆதி, வெங்கிராஜா, முத்துவேல், பிரவின்ஸ்கா அனைவருக்கும் நன்றி.